என் எனக்குள்ளிருந்து
வெளி வந்திருக்கிறேன்
நிழற் பிரம்மைகளின் ஆகாசக் கோட்டைகள்
வளர்ந்திருக்கின்றன
காட்சிப் படிமங்கள் அத்துணைச் சுகமாகயில்லை
வெளிறிக் கிடக்கும் தேசத்திற்கு
வெள்ளையடித்திருப்பதாக
புனைந்திருக்கிறார்கள்
கள்ளிச்செடிகள் வீட்டிற்குள்ளும்
முருங்கை மரம்
தோட்டத்திலும் விளைந்திருக்கிறது
விரைவு உணவுகள்
சோம்பேறிகளின் சாப்பாடு
கடவுள்களிடம் கத்திகளைக் கொடுத்துவிட்டு
மரணப் படுகைகளை யாருக்காக வனைகிறார்கள்?
ஓடாத நதியில் வாகனங்கள் விரைகின்றன
ஓட்டும் வாகனங்களிலும்
பிரச்சனைகள் சக்கரங்களாக இருக்க...
பிரார்த்தனைகள்
இப்போதும் வரிசையில்தான் நிற்கின்றது
நான் என்பது என்
அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்க
என் எனக்குள்ளிருந்து வெளி வந்திருக்கிறேன்
என் கைகளில் இப்போது
ஆயுதங்கள் முளைத்திருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
01/01/2020
நீங்கள்
சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்,
உங்களின் அருகே
ஆஷ்ட்ரே புகைந்து கொண்டிருக்கிறது...
நாங்கள்
ஆடு புலியாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
சிந்திக்கும் தூரம்
எரியும் சிகரெட்டின் தொலைவல்ல...
கலகம் விதைத்து
உறவுகளை அறுக்கப் பார்க்கிறீர்கள்
கால்களை ஆழமாக ஊன்றி விட்டோம்
எங்களின் பிரிய எதிரியே...
உங்களின் இசைக் கூட்டல்களில்
பூட்ஸ் கால்களின் சப்தங்களுடன்
துப்பாக்கிகளின் இசையைக் கோர்த்திருக்கிறீர்கள்...
நாங்கள்
தேசிய கொடிகளினசைவுகளில்...
தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருக்கிறோம்!
வாக்குகள் வாங்கும் போது
நீங்கள் பிச்சைக்காரர்களாக நின்றவர்கள்
எங்களை எச்சில் பாத்திரங்களாக
உங்களிடம் ஒப்படைத்து விடமாட்டோம்...
ஆட்டத்தை
எப்போது தொடங்கினாலும்
முடித்து வைப்பது நாங்களாகவே இருக்கும்...
- முகமது பாட்சா*
01/01/2020
சற்று முன்தான்
என் மீது
சில வழக்குகள் பதியப் பட்டிருக்கின்றன...
கறுப்புச் சட்டை அணிந்திருந்ததால்
அரசுக்கு எதிரானவன் என்றும்
ஆயத்துல் குர்ஸியை மாட்டியிருந்ததால்
அரபுக்காரனாக இருக்கலாம் என்றும்!
என் வீட்டிலிருந்து மேதி ஹஸனின்
கஸல் இசைப் பாடல்களைக் கைப் பற்றியதால்
நான் பாகிஸ்தானியாக இருக்கலாம்
என்ற சந்தேகமும் பதிவாகியுள்ளது!
பிர்தௌசியின் ' சா நாம' வின் ஏடுகள்
சில இருந்ததால்
ஈரானுக்கும் எனக்கும் தொடர்பிருந்திருக்கலாம்!
ரூமியின் 'மஸ்னவி'யைக் கைப் பற்றியவர்கள்
உறுதியாகச் சொன்னார்கள்
இவன் நிச்சயம் ஆப்கானிதான்!
எனக்கே இப்போது
ஒரு சந்தேகம் வலுத்துள்ளது....
பேகம் ரொஹையாவின் நாவல் ஒன்று
இன்னமும் வாசிக்காமல் வைத்திருக்கிறேன்
நான் வங்காளியா!
- முகமது பாட்சா*
02/01/2019
சுதந்திரம் என்பதற்கு
ஆளுக்கொரு கருத்துகளை வைத்திருக்கிறார்கள்
ஆடைகளைப் பற்றிப் பேசியே
அரை நிர்வாணம் சுதந்திரம் வாங்கிக் கொண்டது
சுதந்திரம் என்பதற்கு ஆண்களால்
இலக்கணங்கள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
பேசுவாக்களின் கால்களைக் கழுவுவது
மன்னனின் சுதந்திரம் என்கிறது
சாணக்கிய மொழி....
அமைச்சன் சொல்வதெல்லாம் வேத வாக்காகும்
சோம்பேறி அரசனுக்கு...
கைதட்டி வாழ்க முழக்கமிட்டால் நிரம்பும் வயிறுகள்
சுதந்திரம் அறியாதது...
கேள்விகள் கேட்டதால் சாக்ரட்டீஸ் அடிமை என்கிறவன்
கால்களில் விலங்கை மாட்டித் திரிபவன்..
அடிபணியாத நியாயங்கள்
எப்போதும்
சிலுவைகளில்தான் அறையப்படுகின்றன...
அதனால் சாத்தான்கள்
எப்போதுமே தேவ தூதர்களாகி விடமுடியாது....
சுதந்திரம் என்பது
நாம் விழிக்கும் போது விழித்து
உறங்கும் போது கூடவே உறங்குவதுதான்.
- முகமது பாட்சா*
03/01/2020
அந்தக் கல்லறை
ஆடம்பரமான பொய்களால் நிரம்பிக்கிடந்தது
அதனருகிலிருந்த மரம்
பூக்கள் சொறிவதை நிறுத்திக் கொண்டன...
இடுகாட்டுக் காவலாளி
யாரையும் அனுமதிப்பதில்லை...
நகரம் நொறுங்கியபோது
எரிந்து போனவன் என்று சொன்னவன்...
அரசன் என்றாலும்
அவனது தேநீர்க் கோப்பைகள்
மக்களின்
எச்சில்களால்தான் நிறைந்து வழிந்ததென்று
அதிர்ச்சியூட்டினான்...
இப்போதும் அவன்
சபதமிட்டுப் பேசிக் கொண்டிருப்பதாக
வாய்வழிக் கதை உலாவிக் கொண்டிருக்கிறது..
சற்றுத் தொலைவில் மக்கள்
பதாகைகளுடன்
ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார்கள்....
இடுகாட்டான்
இன்னொரு குழியைத் தோண்டத் தொடங்கினான்!
- முகமது பாட்சா*
03/01/2020
அந்தத் துப்பாக்கியை
கண்ணீரால்
அழுந்த துடைத்துக் கொண்டிருக்கிறேன்...
காதலியின் கடிதம்
கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது
நீங்கள் மிகவும் மோசம்!
துடித்துவிழும் போது
அவர்களின் குரலில் இருந்த உரிமை
சுவாசத்தையிழந்தது...
அடித்து இழுத்துச் சென்றவனை மீட்க
சகனொருவனின் சட்டையை இழுத்து
நியாயம் கேட்டவளுக்கு
அப்படியே என் காதலியின் முகம்!
அவனது அம்மாவிற்கு
என் தாயின் முகமாக இருக்கலாம்!
அம்மா
சற்று முன்தான் போன் செய்திருந்தாள்
நீ பத்திரம்தானே!
அவனது அம்மாவும்
அப்படித்தான் துடித்திருப்பாள்!
அந்தத் துப்பாக்கியைக்
கண்ணீரால்
அழுந்த துடைத்துக் கொண்டிருக்கிறேன்...
கைகளில்
அழுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
04/01/2020
கொல்லனின் உலைக்குழம்பில்
கொதித்துக்கொண்டிருப்பது
சங்கிலிகள் மட்டுமல்ல
குத்தீட்டிகளும்தான்...
விரட்டிக் கொண்டிருந்த பூனை
இடறிவிழுந்த போதுதான்
எலியின் தந்திரம் புரிந்தது
பூனைகளுக்கு எப்போதுமே புலியின் முகம்...
அம்பலத்தான் ஆடுகின்ற ரௌத்திரம்
அசுரனை அழிக்கத்தானே?
கோபம் பழகு...
கும்பிடுவது கோவிற்கு மட்டும் என்றால்
கோவிலை மூடு
மனிதம் நாசம் பழகி நரகத்தில் விழட்டும்...
- முகமது பாட்சா*
04/01/2020
உயர்த்திப் பிடித்த பதாகைகள்
ஒன்றிரண்டு முறிந்து விழுந்திருக்கின்றன
செய்திக் காமிராக்கள்
உதிரத்தை நக்கி எடுத்த படங்களை
குப்பைகளில் வீசிவிட்டு
ஒரு நடிகனின் அரசியல் வருகையைக்
காட்சிப் படுத்த...
குடியரசு தினத்திற்கான ஒத்திகைகள்
ஒய்யாரமாக நடக்கின்றன...
சுதந்திரம் என்பது
நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகள்...
துப்பாக்கி மொழியில்
தேசியகீதம் இசைக்கப்பட்டால்
தேசியக் கொடியின் நிழல்
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாமரம் வீசும்!
எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ
அதே மொழியில் பேசினால்தான்
அவனுக்கும் விளங்கும்
நாம் என்னதான் பேசுகிறோம் என்று
- முகமது பாட்சா*
05/01/2020
நகரங்களின் எச்சில்
மனிதர்களை
வேகமாகத் துப்பிவிட்டுப் போகிறது...
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்
தேசியக்கொடியின் கீழ்
சிறுவன் சல்யூட்டடித்தபடி நிற்கிறான்
கடந்து போகிறது
ஓர் அமைச்சனின் வாகனம்...
பட்டா சிட்டாடங்கள்
இனிமேல் நிலங்களுக்கு மட்டுமல்ல...
நீ தேசியக்குடியா?
பரதேசியின் பாடல்கள்
யாருக்குமே
பல்லக்குகள் தூக்குவதில்லை...
வழிகள்
திருப்பப்பட்டு இருக்கின்றன...
பிரதமர் வருகிறார்...
வழிகள் திருப்பப்பட்டு இருக்கின்றன...
- முகமது பாட்சா*
05/01/2020
பூக்களால்தான்
முற்கள் பேசுகின்றன என்று
பூக்களைச் சிதைக்கிறார்கள்...
எழுத்தாணிகளின் முனைகளை உடைத்தவர்கள்
பறவைகளின்
இறகுகளை எப்படி அழிப்பார்கள்?
மூடர் கூட்டத்தின் தலைவன்
முகத்தை மறைத்துக்கொண்டு கர்ஜிக்கிறான்...
கொண்டை வெளியே தெரிகிறது!
வெட்டப்பட்ட மரங்களின்
வேர்கள் சுற்றுலாச் செல்வதில்லை....
ஆயுதங்கள் செய்வதற்காக
ஆழத்தைத் தேடிச் செல்கின்றன...
அச்சமென்பது ஓர் அழுக்குக் கூடை
அறம் பாடுகிறவன்
வீரத்தைப் பாடத் தொடங்கிவிட்டால்
தொப்புள் கொடியின் வேர்கள்
தொடர் மழையாகி வனத்தைக் காக்கும்...
பூக்களுக்கு
இன்னொரு பெயர் பூகம்பம்!
- முகமது பாட்சா*
06/01/2020
இரவை
குறுக்கும் நெடுக்குமாக வெட்டி வைத்திருக்கிறேன்
பகல் வருவதற்குள்
பதனம் செய்திட வேண்டும்...
குழப்பங்களின் கூட்டுப் பொருளாகவே
மிதந்து கொண்டிருக்கிறது கருப்பு நிழல்...
கனவு வெளியென்பது
கற்பனைக் கூடாரத்தின் கண்ணலங்காரம்...
வன்முறைகளைக் கட்டவிழ்த்து
இரத்தப் பொட்டிட்டுத் திரிகின்ற அகங்காரி..
பூக்களை நசுக்கி மிதந்து கொண்டிருக்கும்
யாக்கையின் பசிக்கு
பஞ்சணை விரிக்கும் நீல ஆடை...
இறந்தவனெச்சம்
இடை மிரட்டுவதாயுருட்டும்
பசாசக் கதைகளைக் கொன்று குவிக்கவே
இந்த இரவை
குறுக்கும் நெடுக்குமாக வெட்டி வைத்திருக்கிறேன்
பகல் வருவதற்குள்
பதனம் செய்திட வேண்டும்...
- முகமது பாட்சா*
06/02/2020
நகரம் கறுப்பைப் பூசிக்கொள்ள
மக்கள் வெள்ளத்தில்
மிதந்து செல்கிறது சுலைமானியின் உடல்
அமெரிக்கர்கள் பயந்து கிடக்கிறார்கள்
கருப்பு நிழல்
நகரத்தைச் சூழ்ந்துவிடும் அச்சத்தில்....
அணுக்குடுவைக்குள்ளிருக்கும்
அரக்கனின் பெரு மூச்சு
வெளியே கேட்கத் தொடங்கியிருக்கிறது...
சடாகோ சாசாகியினருகில்
அமைதியாக அழுது கொண்டிருக்கின்றன
644 ஆரிகாமி கொக்குகள்...
நண்பர்களின்
கொக்குகள் இறந்து கிடக்கின்றன...
ஐ.நா தன் கதவுகளை மூடிவிட்டு
அமெரிக்காவின்
கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
அமைதிக்கான பிரார்த்தனைகள்
அந்தரத்தில் தொங்குகின்ற வேளையில்
இந்தியாவில்தான்
ஹிட்லர் பதுங்கியிருப்பதாகச் செய்தி...
ஆக்டோபசுக்கள்
எல்லைகளைத் தீர்மானிப்பதில்லை
பசி எடுத்துவிட்டால்
எட்டுத் திசைகளிலும் நீள்கிறது கால்கள் ...
இவற்றிற்கிடையேதான்
ஜோக்கர் முகங்களுடன் சிலர்
இன்னமும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
கால்களின் கீழிருப்பது கயிரென்று!
- முகமது பாட்சா*
06/01/2020
தேசத்தின் நதி
என் வீட்டின் வழியாக நெளிகிறதென்று
நினைத்துக் கொண்டிருந்தேன்
அங்கிருந்துதான்
கார்கள் பயணப்படுவதாக
செய்திக் குறிப்புகள் சொல்லுகின்றன..
சைக்கிளைக் காணவில்லையென்று
புகார் அளிக்கச் சென்றேன்
காவல் நிலையத்தைக் காணவில்லையென்று
தேடிக் கொண்டிருந்தார்கள்...
தேடல்தான் வாழ்க்கையென்று
மகரிஷியொருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்
முக்கியச் செய்தியில்
தேசத்தைக் காணவில்லையென்று
சின்ன எழுத்துகள் ஓடிக் கொண்டிருந்தன.
- முகமது பாட்சா*
07/01/2020
உடல் வந்துவிட்டதாம்!
உடல் வந்துவிட்டதாம்!
இதே முழக்கம் மிலன் நகரின் காற்றில்
எங்கும் மிதந்து கொண்டிருந்தது!
கறிக் கொக்கிகளில்
தலை கீழாய் தொங்கிய பிணங்களில்
ஆடிக்கொண்டிருந்தனர்
பெனிட்டோ முசோலினியும் காதலி கிளாராவும்..
பிள்ளைகளையிழந்த தாயொருத்தி
கற்களில் எச்சிலைத்துப்பி
வீசியெறிந்தாள்....
முலைக்காம்புகளில் பால் வழிந்தது
கோபரிட்டின் சகோதரன்
என் தம்பி இப்போதுதான் நிம்மதியாக உறங்குவான்
என்று துப்பாக்கியால் சுட்டான்...
பிணம் ஆடி நகர்ந்தது
ஒருவன் ஆர்ப்பரித்துச் சிரித்தான்
இந்தப் பன்றிகளா நம்மை ஆட்சி செய்தன!
கற்கள் கோபங்களை இறக்கி வைத்தன...
'நீ இறந்துவிட்டாலும் என் தேவன்'
என்று வணக்கம் வைத்த
அக்கிலிஸ்டாரேசின் தலை ரவைகளுக்கு முத்தமிட்டு
வெடித்துச் சிதறியபோது
பெனிட்டோ முசோலினியின் கண்களில்
துளி நீர் பிரமையாக!
- முகமது பாட்சா*
07/01/2020
கடனைப்போல்
நீண்டு கொண்டே செல்கின்றன
பிரச்சனைகள்....
சுவாசக்கோளாறால்
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் கிழவன்
தன் பெயரை தேசம் என்கிறான்...
இடுகாட்டில் இடமில்லையென்று
பிணங்கள் சுடுகாட்டில்
எரிந்து கொண்டிருக்கின்றன....
அவர்கள்
கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டிருக்க
வறுமை
செக்கிழுத்துக் கொண்டிருக்கிறது....
ஆயுதத்தின் மொழி
சிகப்பு மையால் எழுதி நிரப்ப
பகலின் நிறம் இரத்தம்...
விடியாதவனின் விளக்கங்கள்
துரோகத்தைப் புகழ்கின்றன
ஆட்சி செய்வது அதிகாரத்தின் நாற்காலி....
புதையும் போதும்
எழவில்லையென்றால்...
எருமைச்சாணிக்கு ஏன் விளக்கம்?
- முகமது பாட்சா*
08/01/2020
வழிப் போக்கன் இரண்டு கற்களை எடுத்து
ஒன்றை
சாத்தான் மீது எறிந்தான்...
மற்றொரு கல்லை
வேடிக்கை பார்ப்பவர்கள் மீது எறிந்தான்
அவர்கள் கோபமாக
எதற்கு எங்கள் மீது எறிந்தாய் என்று கேட்டார்கள்
கற்கள் இல்லாமல் நிற்கிறீர்கள்
என நினைத்தேன் என்றவன்
நீங்கள் வேண்டுமென்றால் என் மீது எறியுங்கள்
நான்
சாத்தான் மீது எறிகிறேன் என்றான்...
அவர்களும்
உங்களைப் போல்தான்
புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள்...
- முகமது பாட்சா*
08/01 /2020
செய்திகளை வாசிக்கும் போது
இடை நிறுத்தல்கள்
அதிகமாக நடைபெறுகின்றன...
தொகுக்கப்பட்ட செய்திகளை
வெட்டி ஒட்டியபோது
மிஞ்சி நின்றது விளம்பரம் மட்டுமே...
செய்திகளென்பது
பொழுது போக்கு என்கிறது
செய்தி நிறுவனம்...
முக்கியச் செய்திகளை
தொலைப்பேசி அழைப்புகள் விழுங்கிவிட
அடியாட்கள் மிச்சச் செய்திகளைப்
பொறுக்கிச் செல்கிறார்கள்...
இன்றைய முக்கியச்செய்தி
மலேசியாவில்
தர்பார் வெளியிடத் தடையில்லை!
- முகமது பாட்சா*
09/01/2020
தேசத்தின் விரிந்த பகுதிகள்
சுருங்கி வருகின்றன...
நிழல் பிரமையை விரித்து வைத்து
பெரும் தேசமென்ற கட்டமைப்பு
ஒவ்வொருவரையும்
விழுங்கிக் கொண்டிருக்கிறது....
நீரை விற்று நீரைத்தேடி
நீரைத் தொலைத்தவர்கள்
ஒட்டகங்களைச் சாகடிக்கிறார்கள்
வனங்கள் தானாகவே எரிகிறதா?
வரப்பு என்ற வார்த்தை வாசலைத் தாண்டி
எல்லைக் கோட்டில் நிற்க...
அரசியல் உணவிற்குள் நுழைந்து
மனிதர்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது
மதம் என்ற மந்திர வார்த்தைகளைப்
பூசிக் கொண்டு திரிகிறவனை
எந்தக் கடவுள்தான் நேசிப்பான்...?
வார்த்தைகளைத் தேடித் திரிபவர்களைக்
காதல் கவிதை எழுதச் சொல்லிப்
பணிக்கிறார்கள்...
இதுமட்டும் என்ன
புண்ணாக்கா விற்கிறது?
- முகமது பாட்சா*
10/01/2020
கதையைப் படிக்கும் முன்பாக
பெயரைப் படித்துவிடாதீர்கள்...
வெளியேற்றத் துடித்திடும்
ஒருவனால்
அதனை மோகித்துக் கொள்ள முடியாது...
அவர்களெழுதிய கதையில்
அலைகளின் நுரையில்
மிதந்து கொண்டிருக்கிறேன்...
காகிதக் கப்பலில்
நோவாவை ஏற்றிக் கொண்டிருப்பதாக
புனைவு எழுதிக் கொண்டிருக்கிறது...
எந்த எல்லைக் கட்டுப்பாட்டில்
மேகம் மேய்கிறது என்பது தெரியாமல்
இரட்சகன் என்று கூறிக் கொள்பவன்
ஓர் இரவு விருந்தில்
விவரம் தெரியாமல் சாகக்கூடியவன்...
ஏழைகளுக்கான பசியில்
எட்டடுக்கு மாளிகைகளும் குடிசைகள்...
வயிறு எரியும் போது
தீப்பந்தம் கைகளிலேறுவதை
புரட்சியென்றால்
அப்படியே அஃது இருந்துவிட்டுப் போகட்டும்!
- முகமது பாட்சா*
10/01/2020
வெளி வந்திருக்கிறேன்
நிழற் பிரம்மைகளின் ஆகாசக் கோட்டைகள்
வளர்ந்திருக்கின்றன
காட்சிப் படிமங்கள் அத்துணைச் சுகமாகயில்லை
வெளிறிக் கிடக்கும் தேசத்திற்கு
வெள்ளையடித்திருப்பதாக
புனைந்திருக்கிறார்கள்
கள்ளிச்செடிகள் வீட்டிற்குள்ளும்
முருங்கை மரம்
தோட்டத்திலும் விளைந்திருக்கிறது
விரைவு உணவுகள்
சோம்பேறிகளின் சாப்பாடு
கடவுள்களிடம் கத்திகளைக் கொடுத்துவிட்டு
மரணப் படுகைகளை யாருக்காக வனைகிறார்கள்?
ஓடாத நதியில் வாகனங்கள் விரைகின்றன
ஓட்டும் வாகனங்களிலும்
பிரச்சனைகள் சக்கரங்களாக இருக்க...
பிரார்த்தனைகள்
இப்போதும் வரிசையில்தான் நிற்கின்றது
நான் என்பது என்
அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்க
என் எனக்குள்ளிருந்து வெளி வந்திருக்கிறேன்
என் கைகளில் இப்போது
ஆயுதங்கள் முளைத்திருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
01/01/2020
நீங்கள்
சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்,
உங்களின் அருகே
ஆஷ்ட்ரே புகைந்து கொண்டிருக்கிறது...
நாங்கள்
ஆடு புலியாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
சிந்திக்கும் தூரம்
எரியும் சிகரெட்டின் தொலைவல்ல...
கலகம் விதைத்து
உறவுகளை அறுக்கப் பார்க்கிறீர்கள்
கால்களை ஆழமாக ஊன்றி விட்டோம்
எங்களின் பிரிய எதிரியே...
உங்களின் இசைக் கூட்டல்களில்
பூட்ஸ் கால்களின் சப்தங்களுடன்
துப்பாக்கிகளின் இசையைக் கோர்த்திருக்கிறீர்கள்...
நாங்கள்
தேசிய கொடிகளினசைவுகளில்...
தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருக்கிறோம்!
வாக்குகள் வாங்கும் போது
நீங்கள் பிச்சைக்காரர்களாக நின்றவர்கள்
எங்களை எச்சில் பாத்திரங்களாக
உங்களிடம் ஒப்படைத்து விடமாட்டோம்...
ஆட்டத்தை
எப்போது தொடங்கினாலும்
முடித்து வைப்பது நாங்களாகவே இருக்கும்...
- முகமது பாட்சா*
01/01/2020
சற்று முன்தான்
என் மீது
சில வழக்குகள் பதியப் பட்டிருக்கின்றன...
கறுப்புச் சட்டை அணிந்திருந்ததால்
அரசுக்கு எதிரானவன் என்றும்
ஆயத்துல் குர்ஸியை மாட்டியிருந்ததால்
அரபுக்காரனாக இருக்கலாம் என்றும்!
என் வீட்டிலிருந்து மேதி ஹஸனின்
கஸல் இசைப் பாடல்களைக் கைப் பற்றியதால்
நான் பாகிஸ்தானியாக இருக்கலாம்
என்ற சந்தேகமும் பதிவாகியுள்ளது!
பிர்தௌசியின் ' சா நாம' வின் ஏடுகள்
சில இருந்ததால்
ஈரானுக்கும் எனக்கும் தொடர்பிருந்திருக்கலாம்!
ரூமியின் 'மஸ்னவி'யைக் கைப் பற்றியவர்கள்
உறுதியாகச் சொன்னார்கள்
இவன் நிச்சயம் ஆப்கானிதான்!
எனக்கே இப்போது
ஒரு சந்தேகம் வலுத்துள்ளது....
பேகம் ரொஹையாவின் நாவல் ஒன்று
இன்னமும் வாசிக்காமல் வைத்திருக்கிறேன்
நான் வங்காளியா!
- முகமது பாட்சா*
02/01/2019
சுதந்திரம் என்பதற்கு
ஆளுக்கொரு கருத்துகளை வைத்திருக்கிறார்கள்
ஆடைகளைப் பற்றிப் பேசியே
அரை நிர்வாணம் சுதந்திரம் வாங்கிக் கொண்டது
சுதந்திரம் என்பதற்கு ஆண்களால்
இலக்கணங்கள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
பேசுவாக்களின் கால்களைக் கழுவுவது
மன்னனின் சுதந்திரம் என்கிறது
சாணக்கிய மொழி....
அமைச்சன் சொல்வதெல்லாம் வேத வாக்காகும்
சோம்பேறி அரசனுக்கு...
கைதட்டி வாழ்க முழக்கமிட்டால் நிரம்பும் வயிறுகள்
சுதந்திரம் அறியாதது...
கேள்விகள் கேட்டதால் சாக்ரட்டீஸ் அடிமை என்கிறவன்
கால்களில் விலங்கை மாட்டித் திரிபவன்..
அடிபணியாத நியாயங்கள்
எப்போதும்
சிலுவைகளில்தான் அறையப்படுகின்றன...
அதனால் சாத்தான்கள்
எப்போதுமே தேவ தூதர்களாகி விடமுடியாது....
சுதந்திரம் என்பது
நாம் விழிக்கும் போது விழித்து
உறங்கும் போது கூடவே உறங்குவதுதான்.
- முகமது பாட்சா*
03/01/2020
அந்தக் கல்லறை
ஆடம்பரமான பொய்களால் நிரம்பிக்கிடந்தது
அதனருகிலிருந்த மரம்
பூக்கள் சொறிவதை நிறுத்திக் கொண்டன...
இடுகாட்டுக் காவலாளி
யாரையும் அனுமதிப்பதில்லை...
நகரம் நொறுங்கியபோது
எரிந்து போனவன் என்று சொன்னவன்...
அரசன் என்றாலும்
அவனது தேநீர்க் கோப்பைகள்
மக்களின்
எச்சில்களால்தான் நிறைந்து வழிந்ததென்று
அதிர்ச்சியூட்டினான்...
இப்போதும் அவன்
சபதமிட்டுப் பேசிக் கொண்டிருப்பதாக
வாய்வழிக் கதை உலாவிக் கொண்டிருக்கிறது..
சற்றுத் தொலைவில் மக்கள்
பதாகைகளுடன்
ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார்கள்....
இடுகாட்டான்
இன்னொரு குழியைத் தோண்டத் தொடங்கினான்!
- முகமது பாட்சா*
03/01/2020
அந்தத் துப்பாக்கியை
கண்ணீரால்
அழுந்த துடைத்துக் கொண்டிருக்கிறேன்...
காதலியின் கடிதம்
கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது
நீங்கள் மிகவும் மோசம்!
துடித்துவிழும் போது
அவர்களின் குரலில் இருந்த உரிமை
சுவாசத்தையிழந்தது...
அடித்து இழுத்துச் சென்றவனை மீட்க
சகனொருவனின் சட்டையை இழுத்து
நியாயம் கேட்டவளுக்கு
அப்படியே என் காதலியின் முகம்!
அவனது அம்மாவிற்கு
என் தாயின் முகமாக இருக்கலாம்!
அம்மா
சற்று முன்தான் போன் செய்திருந்தாள்
நீ பத்திரம்தானே!
அவனது அம்மாவும்
அப்படித்தான் துடித்திருப்பாள்!
அந்தத் துப்பாக்கியைக்
கண்ணீரால்
அழுந்த துடைத்துக் கொண்டிருக்கிறேன்...
கைகளில்
அழுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
04/01/2020
கொல்லனின் உலைக்குழம்பில்
கொதித்துக்கொண்டிருப்பது
சங்கிலிகள் மட்டுமல்ல
குத்தீட்டிகளும்தான்...
விரட்டிக் கொண்டிருந்த பூனை
இடறிவிழுந்த போதுதான்
எலியின் தந்திரம் புரிந்தது
பூனைகளுக்கு எப்போதுமே புலியின் முகம்...
அம்பலத்தான் ஆடுகின்ற ரௌத்திரம்
அசுரனை அழிக்கத்தானே?
கோபம் பழகு...
கும்பிடுவது கோவிற்கு மட்டும் என்றால்
கோவிலை மூடு
மனிதம் நாசம் பழகி நரகத்தில் விழட்டும்...
- முகமது பாட்சா*
04/01/2020
உயர்த்திப் பிடித்த பதாகைகள்
ஒன்றிரண்டு முறிந்து விழுந்திருக்கின்றன
செய்திக் காமிராக்கள்
உதிரத்தை நக்கி எடுத்த படங்களை
குப்பைகளில் வீசிவிட்டு
ஒரு நடிகனின் அரசியல் வருகையைக்
காட்சிப் படுத்த...
குடியரசு தினத்திற்கான ஒத்திகைகள்
ஒய்யாரமாக நடக்கின்றன...
சுதந்திரம் என்பது
நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகள்...
துப்பாக்கி மொழியில்
தேசியகீதம் இசைக்கப்பட்டால்
தேசியக் கொடியின் நிழல்
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாமரம் வீசும்!
எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ
அதே மொழியில் பேசினால்தான்
அவனுக்கும் விளங்கும்
நாம் என்னதான் பேசுகிறோம் என்று
- முகமது பாட்சா*
05/01/2020
நகரங்களின் எச்சில்
மனிதர்களை
வேகமாகத் துப்பிவிட்டுப் போகிறது...
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்
தேசியக்கொடியின் கீழ்
சிறுவன் சல்யூட்டடித்தபடி நிற்கிறான்
கடந்து போகிறது
ஓர் அமைச்சனின் வாகனம்...
பட்டா சிட்டாடங்கள்
இனிமேல் நிலங்களுக்கு மட்டுமல்ல...
நீ தேசியக்குடியா?
பரதேசியின் பாடல்கள்
யாருக்குமே
பல்லக்குகள் தூக்குவதில்லை...
வழிகள்
திருப்பப்பட்டு இருக்கின்றன...
பிரதமர் வருகிறார்...
வழிகள் திருப்பப்பட்டு இருக்கின்றன...
- முகமது பாட்சா*
05/01/2020
பூக்களால்தான்
முற்கள் பேசுகின்றன என்று
பூக்களைச் சிதைக்கிறார்கள்...
எழுத்தாணிகளின் முனைகளை உடைத்தவர்கள்
பறவைகளின்
இறகுகளை எப்படி அழிப்பார்கள்?
மூடர் கூட்டத்தின் தலைவன்
முகத்தை மறைத்துக்கொண்டு கர்ஜிக்கிறான்...
கொண்டை வெளியே தெரிகிறது!
வெட்டப்பட்ட மரங்களின்
வேர்கள் சுற்றுலாச் செல்வதில்லை....
ஆயுதங்கள் செய்வதற்காக
ஆழத்தைத் தேடிச் செல்கின்றன...
அச்சமென்பது ஓர் அழுக்குக் கூடை
அறம் பாடுகிறவன்
வீரத்தைப் பாடத் தொடங்கிவிட்டால்
தொப்புள் கொடியின் வேர்கள்
தொடர் மழையாகி வனத்தைக் காக்கும்...
பூக்களுக்கு
இன்னொரு பெயர் பூகம்பம்!
- முகமது பாட்சா*
06/01/2020
இரவை
குறுக்கும் நெடுக்குமாக வெட்டி வைத்திருக்கிறேன்
பகல் வருவதற்குள்
பதனம் செய்திட வேண்டும்...
குழப்பங்களின் கூட்டுப் பொருளாகவே
மிதந்து கொண்டிருக்கிறது கருப்பு நிழல்...
கனவு வெளியென்பது
கற்பனைக் கூடாரத்தின் கண்ணலங்காரம்...
வன்முறைகளைக் கட்டவிழ்த்து
இரத்தப் பொட்டிட்டுத் திரிகின்ற அகங்காரி..
பூக்களை நசுக்கி மிதந்து கொண்டிருக்கும்
யாக்கையின் பசிக்கு
பஞ்சணை விரிக்கும் நீல ஆடை...
இறந்தவனெச்சம்
இடை மிரட்டுவதாயுருட்டும்
பசாசக் கதைகளைக் கொன்று குவிக்கவே
இந்த இரவை
குறுக்கும் நெடுக்குமாக வெட்டி வைத்திருக்கிறேன்
பகல் வருவதற்குள்
பதனம் செய்திட வேண்டும்...
- முகமது பாட்சா*
06/02/2020
நகரம் கறுப்பைப் பூசிக்கொள்ள
மக்கள் வெள்ளத்தில்
மிதந்து செல்கிறது சுலைமானியின் உடல்
அமெரிக்கர்கள் பயந்து கிடக்கிறார்கள்
கருப்பு நிழல்
நகரத்தைச் சூழ்ந்துவிடும் அச்சத்தில்....
அணுக்குடுவைக்குள்ளிருக்கும்
அரக்கனின் பெரு மூச்சு
வெளியே கேட்கத் தொடங்கியிருக்கிறது...
சடாகோ சாசாகியினருகில்
அமைதியாக அழுது கொண்டிருக்கின்றன
644 ஆரிகாமி கொக்குகள்...
நண்பர்களின்
கொக்குகள் இறந்து கிடக்கின்றன...
ஐ.நா தன் கதவுகளை மூடிவிட்டு
அமெரிக்காவின்
கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
அமைதிக்கான பிரார்த்தனைகள்
அந்தரத்தில் தொங்குகின்ற வேளையில்
இந்தியாவில்தான்
ஹிட்லர் பதுங்கியிருப்பதாகச் செய்தி...
ஆக்டோபசுக்கள்
எல்லைகளைத் தீர்மானிப்பதில்லை
பசி எடுத்துவிட்டால்
எட்டுத் திசைகளிலும் நீள்கிறது கால்கள் ...
இவற்றிற்கிடையேதான்
ஜோக்கர் முகங்களுடன் சிலர்
இன்னமும் திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
கால்களின் கீழிருப்பது கயிரென்று!
- முகமது பாட்சா*
06/01/2020
தேசத்தின் நதி
என் வீட்டின் வழியாக நெளிகிறதென்று
நினைத்துக் கொண்டிருந்தேன்
அங்கிருந்துதான்
கார்கள் பயணப்படுவதாக
செய்திக் குறிப்புகள் சொல்லுகின்றன..
சைக்கிளைக் காணவில்லையென்று
புகார் அளிக்கச் சென்றேன்
காவல் நிலையத்தைக் காணவில்லையென்று
தேடிக் கொண்டிருந்தார்கள்...
தேடல்தான் வாழ்க்கையென்று
மகரிஷியொருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்
முக்கியச் செய்தியில்
தேசத்தைக் காணவில்லையென்று
சின்ன எழுத்துகள் ஓடிக் கொண்டிருந்தன.
- முகமது பாட்சா*
07/01/2020
உடல் வந்துவிட்டதாம்!
உடல் வந்துவிட்டதாம்!
இதே முழக்கம் மிலன் நகரின் காற்றில்
எங்கும் மிதந்து கொண்டிருந்தது!
கறிக் கொக்கிகளில்
தலை கீழாய் தொங்கிய பிணங்களில்
ஆடிக்கொண்டிருந்தனர்
பெனிட்டோ முசோலினியும் காதலி கிளாராவும்..
பிள்ளைகளையிழந்த தாயொருத்தி
கற்களில் எச்சிலைத்துப்பி
வீசியெறிந்தாள்....
முலைக்காம்புகளில் பால் வழிந்தது
கோபரிட்டின் சகோதரன்
என் தம்பி இப்போதுதான் நிம்மதியாக உறங்குவான்
என்று துப்பாக்கியால் சுட்டான்...
பிணம் ஆடி நகர்ந்தது
ஒருவன் ஆர்ப்பரித்துச் சிரித்தான்
இந்தப் பன்றிகளா நம்மை ஆட்சி செய்தன!
கற்கள் கோபங்களை இறக்கி வைத்தன...
'நீ இறந்துவிட்டாலும் என் தேவன்'
என்று வணக்கம் வைத்த
அக்கிலிஸ்டாரேசின் தலை ரவைகளுக்கு முத்தமிட்டு
வெடித்துச் சிதறியபோது
பெனிட்டோ முசோலினியின் கண்களில்
துளி நீர் பிரமையாக!
- முகமது பாட்சா*
07/01/2020
கடனைப்போல்
நீண்டு கொண்டே செல்கின்றன
பிரச்சனைகள்....
சுவாசக்கோளாறால்
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் கிழவன்
தன் பெயரை தேசம் என்கிறான்...
இடுகாட்டில் இடமில்லையென்று
பிணங்கள் சுடுகாட்டில்
எரிந்து கொண்டிருக்கின்றன....
அவர்கள்
கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டிருக்க
வறுமை
செக்கிழுத்துக் கொண்டிருக்கிறது....
ஆயுதத்தின் மொழி
சிகப்பு மையால் எழுதி நிரப்ப
பகலின் நிறம் இரத்தம்...
விடியாதவனின் விளக்கங்கள்
துரோகத்தைப் புகழ்கின்றன
ஆட்சி செய்வது அதிகாரத்தின் நாற்காலி....
புதையும் போதும்
எழவில்லையென்றால்...
எருமைச்சாணிக்கு ஏன் விளக்கம்?
- முகமது பாட்சா*
08/01/2020
வழிப் போக்கன் இரண்டு கற்களை எடுத்து
ஒன்றை
சாத்தான் மீது எறிந்தான்...
மற்றொரு கல்லை
வேடிக்கை பார்ப்பவர்கள் மீது எறிந்தான்
அவர்கள் கோபமாக
எதற்கு எங்கள் மீது எறிந்தாய் என்று கேட்டார்கள்
கற்கள் இல்லாமல் நிற்கிறீர்கள்
என நினைத்தேன் என்றவன்
நீங்கள் வேண்டுமென்றால் என் மீது எறியுங்கள்
நான்
சாத்தான் மீது எறிகிறேன் என்றான்...
அவர்களும்
உங்களைப் போல்தான்
புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள்...
- முகமது பாட்சா*
08/01 /2020
செய்திகளை வாசிக்கும் போது
இடை நிறுத்தல்கள்
அதிகமாக நடைபெறுகின்றன...
தொகுக்கப்பட்ட செய்திகளை
வெட்டி ஒட்டியபோது
மிஞ்சி நின்றது விளம்பரம் மட்டுமே...
செய்திகளென்பது
பொழுது போக்கு என்கிறது
செய்தி நிறுவனம்...
முக்கியச் செய்திகளை
தொலைப்பேசி அழைப்புகள் விழுங்கிவிட
அடியாட்கள் மிச்சச் செய்திகளைப்
பொறுக்கிச் செல்கிறார்கள்...
இன்றைய முக்கியச்செய்தி
மலேசியாவில்
தர்பார் வெளியிடத் தடையில்லை!
- முகமது பாட்சா*
09/01/2020
தேசத்தின் விரிந்த பகுதிகள்
சுருங்கி வருகின்றன...
நிழல் பிரமையை விரித்து வைத்து
பெரும் தேசமென்ற கட்டமைப்பு
ஒவ்வொருவரையும்
விழுங்கிக் கொண்டிருக்கிறது....
நீரை விற்று நீரைத்தேடி
நீரைத் தொலைத்தவர்கள்
ஒட்டகங்களைச் சாகடிக்கிறார்கள்
வனங்கள் தானாகவே எரிகிறதா?
வரப்பு என்ற வார்த்தை வாசலைத் தாண்டி
எல்லைக் கோட்டில் நிற்க...
அரசியல் உணவிற்குள் நுழைந்து
மனிதர்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது
மதம் என்ற மந்திர வார்த்தைகளைப்
பூசிக் கொண்டு திரிகிறவனை
எந்தக் கடவுள்தான் நேசிப்பான்...?
வார்த்தைகளைத் தேடித் திரிபவர்களைக்
காதல் கவிதை எழுதச் சொல்லிப்
பணிக்கிறார்கள்...
இதுமட்டும் என்ன
புண்ணாக்கா விற்கிறது?
- முகமது பாட்சா*
10/01/2020
கதையைப் படிக்கும் முன்பாக
பெயரைப் படித்துவிடாதீர்கள்...
வெளியேற்றத் துடித்திடும்
ஒருவனால்
அதனை மோகித்துக் கொள்ள முடியாது...
அவர்களெழுதிய கதையில்
அலைகளின் நுரையில்
மிதந்து கொண்டிருக்கிறேன்...
காகிதக் கப்பலில்
நோவாவை ஏற்றிக் கொண்டிருப்பதாக
புனைவு எழுதிக் கொண்டிருக்கிறது...
எந்த எல்லைக் கட்டுப்பாட்டில்
மேகம் மேய்கிறது என்பது தெரியாமல்
இரட்சகன் என்று கூறிக் கொள்பவன்
ஓர் இரவு விருந்தில்
விவரம் தெரியாமல் சாகக்கூடியவன்...
ஏழைகளுக்கான பசியில்
எட்டடுக்கு மாளிகைகளும் குடிசைகள்...
வயிறு எரியும் போது
தீப்பந்தம் கைகளிலேறுவதை
புரட்சியென்றால்
அப்படியே அஃது இருந்துவிட்டுப் போகட்டும்!
- முகமது பாட்சா*
10/01/2020
No comments:
Post a Comment