Saturday, 30 September 2017

காட்சிகள் பத்து



காட்சி ஒன்றில் 
கண்களால் பேசிக் கொண்டோம் 
காதல் சுகம் 
இதயத்தில் வலம் வந்தது, 

காட்சி இரண்டில் 
தலையணை இடம் மாறியது 
இரவுகளும் பகல்களாய் விடிந்தன, 

மூன்றில்தான் 
புன்னகையைப் பகிர்ந்தோம் 
கவிதை மொழி சரளமாக வந்தது, 

பெயருடன் வார்த்தைகளும் 
நான்கில் 
இடம் மாற்றிக் கொண்டோம், 

விளையாட்டாய் விரல்கள் 
ஐந்தில்  உரசிக் கொண்டன, 
ஆசையின் படிமத்தோடு, 

ஆறில்தான் அவன் ஐ லவ் யூ 
ஆங்கிலத்தில் சொன்னான், 
பட்டாம் பூச்சிகள் வானில் பறந்தன, 

ஏழில் அங்கீகரித்த இதயம் 
இதழ்களுக்குள் ஆழ்ந்து தேடியது 
இளமையான காதலை, 

காட்சி எட்டில் 
கட்டிலறை கடலாய் விரிந்தது, 
ஒருவரையொருவர் போர்த்திக் கொண்டோம், 

ஒன்பதில்தான் உணர்ந்தேன்.... 
மாதம் மூன்றென்று... 
வயிற்றில் துயரம் எட்டி உதைத்தது, 

காட்சி பத்தில் 
அவன் காணாமலேயே போனான் 
அடுத்த வீட்டின் பெருமையோடு.

- மு.முகமது பாட்சா

Friday, 29 September 2017

நாடகமில்லை



அனல் தகிப்பின் அந்தகாரப் புகையில் 
தனம் புதைந்து தழல் பறிக்கும் வேளையில் , 
தழல் விலக்கி நுழையுமோர் மோட்சசுகம், 
நிழலொருக்கித் தரும் தேனமுதுச் சுவையில் 
பிழை நீக்கு , 
துளிர்த்த வியர்வையின் ஈரமழை நனைப்பில் 
இதழ் வெளுக்கச் சுவையீர்ப்பில் , 
கட்பொறிகள் நான்கும் செந்தூரம் பூசிக் களிக்க , 
கலைக்க, களைக்க , 
உள் நுழையும் உருவகர்களில் இனம் சேரும் 
தளபதியே , 
ஐயிரண்டில் அடையாளம் தனைப் பதிக்க 
வெளிவரும் நடை வாயிலில் , 
நடந்ததொன்றும் நாடகமில்லை !

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 69

பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் க்கான பட முடிவு

மக்கள் வயிறு காயுது
.
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா

உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவனென்றுன்னை
நடுவில் வைத்துப் போற்றுமடா

இன்ப உலகில் செல்வம் அதிகம்
இதயந்தான் கொஞ்சம் - அன்பு
இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும் பொருள் பஞ்சம் - இன்று
உதவும் பொருள் பஞ்சம் 

இரக்கம் கொண்டவனைச் செல்வம்
எதிரி யென்றே சொல்லுதடா
இல்லையென்றே ஏங்கும் நிலையில்
எட்டியுதைத்தே தள்ளுதடா 

தேனாறு பாயுது - வயலில்
செங்கதிரும் சாயுது - ஆனாலும்
மக்கள் வயிறு காயுது - அதிசயந்தான் இது
வகையாக இந்த நாட்டில் என்று
மாற்ற முண்டாகுமோ? - கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ? 

 கவிஞர். பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

டிஜிட்டல் இந்தியா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

விதை நிலங்களில்
விவசாயிகளின் பிணங்கள்!
-அடிதட்டு மக்களின்
கனவுகளின் மேல்
அப்பார்ட்மெண்ட் வீடுகள்!
- சுயம் தொலைத்து 
சுயம் தேடும் கெளரவங்கள்!
- வட்டிக்கு பணம் வாங்கி
நகை வாங்கும் மோகங்கள்!
- அடகு கடைகளில்
படுத்துறங்கும்
நடுத்தரத்தின் கனவுகள்!
- ஒழுக்கு வீடுகளை
நனையாமல் பார்த்துக் கொள்ளும்
அலுமினிய பாத்திரங்கள்!
- அந்நிய நிறுவனங்களின்
ஆட் குறைப்பில்
அலைக்கழியும்
தொழில் நுட்பக் கல்விகள்!
- அடுத்த வேலை சோற்றுக்கு
அயல் நாட்டுத் தேவைகள்!
- காசுக்கு விலைப் போன
அரசு கல்விக் கூடங்கள்!
-மலிவு உணவகங்கள்?
-இலவச தேவைகள்
-இத்தனைக்கும் நடுவே
வாழும் எங்களுக்கு....
தூய்மை இந்தியா போய்
டிஜிட்டல் இந்தியா வந்தது!
....விளம்பரம்!...விளம்பரம்!....
எல்லாம் விளம்பரம்!
--- ஆம் ----
பணம் போட்டு பணம் எடுக்கும்
அரசியல் தந்திரங்கள்!

- மு.முகமது பாட்சா

ஏதோ ஒன்று நழுவுகிறது

எதையோ ஒன்றைத் தேடிச் செல்கிறேன் , 
ஏதோ ஒன்று 
நழுவி போய்க் கொண்டே இருக்கிறது ! 

நேற்று என்னிடம் இருந்ததை 
இன்று தொலைத்து விட்டேன் , 

இன்றையை, 
நாளைக்குத் தொலைத்து விடுவேன் , 
இல்லையென்றால் , 
நானே கூடத் தொலைந்து விடுவேன் ! 

வழித் துணைக்குத் துக்கங்களை 
கூடவே அழைத்துச் செல்கின்றேன் , 
அவைகள் , 
வழிகளை ,பின்னோக்கியே 
காட்டி அழைத்துச் செல்கின்றது ! 

நானொன்றும் 
வரலாற்றுப் பிழையாக இருக்க முடியாது ! 
வரலாறுகள் 
அவ்வப்போது திருத்த படுகின்றனவாம் ! 
நான் நிச்சயமாக வாழ்க்கைப் பிழைதான் ! 

உறவுகளின் தேடலில் 
நான் ஓர் ஒற்றைப் புள்ளிதான் , 
என் தேடல்களில்தான் 
உறவுகள் விரிகின்றது சமுத்திரமாக ! 

நான் , ஆசைகளைத் தேடிப் போகிறேன் , 
வாழ்க்கையோ 
என் மரணத்தைத் தேடிப் போகிறது ! 

என் தேடல்கள் கிடைக்காமல் போகலாம் ! 
வாழ்க்கையின் தேடல் 
அதற்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும் ! 

ஆனாலும் , 
எதையோ ஒன்றைத் தேடிச் செல்கிறேன் , 
ஏதோ ஒன்று 
நழுவி போய்க் கொண்டே இருக்கிறது ! 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 68

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

திருநங்கைகள் காகிதப்பூக்கள்

காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப்பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்

விதைவளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சதைவளர்க்கும் பிணம்நாங்கள்
சாவின் சிரிப்புகள்

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக் 
கடவுள் திருத்தட்டும்

தலைமீது பூவைப்போம்
தாரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

கவிஞர் நா காமராசன்

இரவின் படிமங்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒழுங்கில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது 
கோப்பையில் வழிந்து கொண்டிருந்தேன், 
குறையில்லாத இரவு தாலாட்டிக் கொண்டிருக்க 
தூங்காத குழந்தைகள் அழுது கொண்டிருந்தன, 
வயிற்றுப் பசியைக் களவாடிய இருட்டு 
வீதியெங்கும் இறைத்துவிட்டுப் போகிறது அழுக்குகளை, 
திருவோட்டில் விழுகின்றன பிச்சையாக எச்சில்... 
இழிவானப் பாத்திரத்திற்கேன் திருப் பட்டம்? 
வீசியெறிந்துவிட்டு நடக்கிறேன்......................... 
நடை பாதையில் காமம் பசியாற்ற 
யோனிகள் விற்பனைக்குப் பூச்சூடி நிற்கின்றன, 
விளக்குக் கம்பத்தின் கீழ் 
ஒரு தற்கொலை படித்துக் கொண்டிருக்கிறது, 
கட்டியவன் இயலாமையை 
காயங்களாய் தரிசித்துக் கொண்டிருக்கிறாள் பத்தினி, 
வேகமாய் வந்த வாகனமொன்று 
எச்சில் குழந்தையொன்றை துப்பிவிட்டுப் போகிறது 
கேவலங்கள் ஓடிச்சென்று கையேந்தி அழுகின்றன, 
இரவு ஆசிர்வதிக்கக் குழந்தை சிரிக்கிறது, 
கனவுகளில்லாத காயங்கள் 
நடை பாதைகளில் கண்ணுறங்கிக் கொண்டிருக்க... 
கூவத்திலே ஒரு பிணம் 
தலைவனுக்காகக் கால் பரப்பி அழுகிக் கிடக்கிறது, 
இருட்டு மௌனமாகவே அழுது கொண்டிருக்க.... 
ஒழுங்கில்லாமல்தான் மழை பெய்து கொண்டிருந்தது, 
இரவோடும் இருட்டோடும் 
அனைவரும் விழித்துக் கொண்டிருக்கிறோம். 
புரியவில்லையா? 
உங்களுக்கு நிச்சயம் புரியாது 
இரவின் படிமங்கள் நீங்கள் நினைப்பது போழில்லை, 
நீங்களாவது நன்றாக 
போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்குங்கள். 

- மு.முகமது பாட்சா


Thursday, 28 September 2017

சூறாவளி

.........#சூறாவளி.........

தானியங்கு மாற்று உரை இல்லை.

சுழன்றடித்த காற்றை
'சூறாவளி' யென்றார்கள்!
_____சிலர், 'விதி' யென்றார்கள்?
காமத்தின் குழம்பில்
குளித்தெழுந்த கொடுரன் போல்
பார்த்தவிடமெல்லாம்
பரவிச் சென்றது!
------காமத்தின் மிச்சங்களாய்
நகரங்களும், கிராமங்களும்...
பொலி விழந்து
நகக் கீரலாய்!
-------தென்றல் வீசிய தென்னைகளையும்
சிதிலமாக்கி சிரித்தது காற்று!
-------முகவரி எழுதிய மூர்க காற்று
நாணலிடம் தோற்றது வெட்கம்தான்!
ஆம்...நாணல் தலை நிமிர்ந்தது!

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 67


ஆடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப் 

பசும்புல் வெளியில் 
பாதம் ஊன்றி 
துள்ளிய நாட்கள் 
முடிந்துவிட்டன 

காந்திக்கு பால்சுரந்த 
கருணைக்குப் பரிசு 
கழுத்தில் இறங்கிய 
கத்தி வெட்டு 

காற்றில் கலந்தது 
கடைசி மூச்சு 
காத்தவராயன் 
கடவுளே சாட்சி 

இனியென் பிணத்தை 
ஈய்க்கள் மொய்க்கும் 
ஆடைத் தோலுரித்து 
அம்மணமாகும் 

சமையலறைக் காற்றிலென் 
சதையின் வாடையில் 
உலர்ந்த நாக்குகள் 
உமிழ்நீர் சுரக்கும் 

வயிற்றுச் சுடுகாட்டின் 
அமிலத் தீயில் 
என்னுடல் துண்டுகள் 
எரிந்து மலமாகும் 

எருவாகிப் பின்பு 
செடிவேர் பற்றி 
கிளைகளில் அசையும் 
பூக்களில் சிரிப்பேன் 

விரல்கொய்த பெண்ணின் 
கூந்தலில் அமர்ந்து 
நாசிகள் உணர 
வாசனை அனுப்புவேன் 

ஆயினும்- 

உரித்த என் தோல் 
சாவுப் பறையில் 
இறப்பின் துக்கத்தை 
என்றும் ஒலிக்கும். 

பாடலாசிரியர் அண்ணாமலை 

சென்ற ஆண்டு மாரடைப்பால் காலமான திரைப்படப் பாடலாசிரியர் 'அண்ணாமலை' அவர்கள் குத்துப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் என்றாலும், நல்ல கவிதைகளுக்கும் சொந்தக்காரர் ! அவரது நினைவஞ்சலியாக அவரது கவிதையொன்று ! 

வஞ்சத்துள் வஞ்சம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

வஞ்சத்துள் வஞ்சம் உட்கார்ந்திருந்தது 
ஆசையின் வேள்விகளில் 
சாம்பலாய் உயிர்க்கிறது உறவின் பந்தம், 
துருபதனின் துரோகத்தீ 
திட்டத்துயுமனாய் சுழன்று கொண்டிருக்க, 
தமக்கையின் தீயாயில்லாமல் 
துரோணனின் பகையாய்ச் சுழன்றது, 
கள்ளன் கை கோர்த்தான் , 
துரோகத்தின் முனை பற்றி.... 
சூதாடித் தருமன் துணை போனான் 
'அசுவத்தமா இறந்துவிட்டான். 
ஆம் அசுவத்தமா இறந்துவிட்டான்!' 
சத்திரியம் சத்தியம் மறந்து பேசியது... 
யானையாய்ச் சாய்ந்தான் துரோணன் , 
திட்டத்துய்மன் 
திருட்டத்துய்மனாய் சாய்த்தான், 
அசுவத்தமன் அழவில்லை... 
வஞ்சத் தீயெடுத்து 
வாளுக்குள் சொருகிக் கொண்டான், 
முடிந்துவிட்ட குருசேத்திரத்தின் முடிவில் 
மீண்டும் ஒரு முகவுரை எழுதத் தொடங்கினான், 
திருட்டத்துயுமன் 
திட்டுத் திட்டாய் இறந்து கிடக்க 
கூடவே துணைக்கனுப்பினான் 
துரோக பாண்டவர்களின் கொழுந்துகளை.... 
ஏகலைவனின் விரல் இன்னமும் 
அங்கேயேதான் துடித்துக் கொண்டிருந்தது.... 
யாருக்காகடா இந்தப் போர்? 
ஏகலைவனின் வில் அம்பொன்று 
கண்ணனின்
கால்விரலைக் குறிப் பார்த்துக் கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*

Wednesday, 27 September 2017

நானும் தேநீரும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பானம்

தேநீரின் குவளைக்குள்தான் 
விழுந்து கிடக்கிறேன்... 
அதன் ருசி 
என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது, 
நாசித்துவாரங்களில் ஊடுருவிய மணம் 
மூளை நரம்புகளுக்குள் உட்கார்ந்து 
மந்திரமோதுகிறது.... 
பிரச்சனைகள் 
அதனளவில் மெல்லக் கழல்கின்றன, 
சுற்றி நகரும் அதனாவியில் 
சுற்றிச் சுற்றி சுழல்கிறேன் 
கடந்த காலங்கள் கடந்து நகர 
எதிர்காலங்களோ 
நிரப்பாத வெற்றிடமாய் இருக்கின்றன 
நிகழ்காலத்தில் நான் மட்டுமே நிற்கிறேன்... 
முப்பருவங்கள் ஒவ்வொன்றும் 
மற்றொரு பருவத்தில் உட்கார்ந்து கொள்வதில்லை, 
மழைத் தராத மேகத்திற்காக 
வசந்தக் காற்றை நானெதற்கு வீசவேண்டும்? 
இரசனைக்குள் உட்கார்ந்திருக்கிறது வாழ்க்கை 
கற்றுக் கொடுக்கிறது ஒரு குவளைத் தேநீர்... 
ஒரு துளி மிடறும் சிறு துளி இரசனையும் போதும் 
வாழ்க்கையை 
இனிதாக வாழ்ந்து விடுவதற்கு. 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 66

க து மு இக்பால் க்கான பட முடிவு

எடிசன் எழுதுகிறேன்:

இருளைப் படைத்து
என்னை வெளிச்சத்திற்குக்
கொணர்ந்த இறைவனே
உனக்கு
எடிசன் எழுதுகிறேன்:

விண்ணில் உன் நட்சத்திரங்கள்
மண்ணில் என் விளக்குகள்

பகலை நீ வெளிச்சப் படுத்துகிறாய்
இரவை நான் அலங்கரிக்கிறேன்

உன் ஒற்றை விளக்குச் சாயும் போது
ஓராயிரம் விளக்குகளை நான்
ஏற்றி வைக்கிறேன்

உன் ஒளி புகமுடியாத
இடங்களில் கூட
என் விளக்குகள் எரிகின்றன

சூரியத் தூரிகைகள்
உன் பெயரை வரைகின்றன

விளக்கின் நாக்குகள்
என் புகழைப் பாடுகின்றன

அணையாத விளக்குகளின்
சொந்தக்காரன் நீ

அணையும் விளக்குகளை
ஆக்கியவன் நான்

நாம் இருவரும்
விளக்கின் காதலர்கள்

நம் ஒற்றுமை
வெளிச்சத்தில் மட்டுமல்ல
இருளிலும் மறைவதில்லை

இறைவா , எவரும்
என் விளக்குகளை அணைக்கலாம்;
என்னை அணைக்க முடியாது
ஏனெனில்
நான்
நீ ஏற்றிய விளக்கு

- க து மு இக்பால் (சிங்கை)

கதம்ப மாலை

நான்
இறந்துவிட்டதாக சொன்னேன் ,
மூக்கில் 
விரலை வைத்து பார்த்தவர்கள் ,
இன்னமும் சாகவில்லை 
என்றார்கள் !
.
செத்த பிணம்  பேசவா செய்யும் !

***

தேவதைகளுக்கு மட்டும் 
சிறகுகள் இருக்கின்றதே , 
ஏன் ? என்று கேட்டாள் , 
என் செல்லம்மா ! 
கடவுளிடம் சேதிகளைச் சேர்ப்பதற்கு 
சிறகுகள் வேண்டும்தானே என்றேன் , 
கடவுளிடம் சென்றுவிட்ட பாட்டிக்கும் 
சிறகுகள் முளைத்திருக்குமா ? 
என்று கேட்கிறாள் !

***

என்னை
தள்ளி வைத்துவிட்டுப் போகும்
அந்தப் பார்வை ,
யாரையோ
களவாடிக் கொண்டு போகிறது !

***

என் கவிதைகளில் போதையிருப்பதாக 
அவள் சொல்கிறாள் ! 
அவள் கண்களைப் பார்க்க முடியாமல் 
கவிழ்ந்து நிற்கிறேன் , 
கவிதைகள், காமத்தை தொட்டு விட்டால் 
கற்பிழந்ததாகச் சொல்லி விடுவாள் !

***

நெருப்பின் வார்த்தைகளில்
குளிர்ந்து போனதாக சொன்னார்கள் ,
சாத்தான் வேதம் ஓதுகிறான் !

***

அழுகையின் ஓசையில்  
குழந்தை ஜீவித்ததாய்  
சொன்னாள் தாதி ! 

அழாதே யென்றாள் அம்மா !  

அழவைத்தது காதல் ! 

அழுகையின் வாசலில் ஏழை ! 

அழுதுவிடு என்று உத்தரவு ,
துக்க நிகழ்வில் ! 

சுமைகள் குறையுமென்று ,  
அறிவியல் ! 

அழுகை , வாழ்க்கையின் வருகை !
.
***

உறங்கும் உண்மைகளை 
எழுப்பிவிடுங்கள் ,
வதந்தீகள் தீ வைக்கின்றன !

***

பிரார்த்தனைகள் 
இறைந்து கிடக்கின்றன , 

பூசாரியின் மடி நிரம்பும் காசுகள் , 

வரிசையில் வருகின்றது 
தீர்வு கேட்கும் பிரச்சனைகள் ! 

ஸ்பெஷல் தரிசனத்தில் 
சிறப்புக் கோரிக்கைகள் , 

அடிக்கும் கொள்ளைகளுக்கு 
பாதுகாப்புக் கேட்டு ! 

வெளியிலிருந்து வீசப்பட்ட 
பிரார்த்தனை யொன்று ,

'தேசத்தைக் காப்பாற்று ! ' 

நடை கதவை சாத்துகிறார் அறங்காவலர் , 
சிலை திருட்டு அதிகமாகிவிட்டது ! 

***

சாத்தானின் 
எச்சில் மரங்கள் 
நிழல் கொடுப்பதில்லை !

***

தேர் போன பாதையில்தான்
நானும் போனேன்,
தேர் வந்து சேர்ந்தது...
நினைவுகள் மட்டும்
அங்கேயே நிற்கிறது!
.
.........இருத்தியது யார்?.......
***

- மு. முகமது பாட்சா 

Tuesday, 26 September 2017

அழியும் சமூகம்


தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓர் அழிவைச் சந்திக்கும் முன்பாக 
எல்லோரும் அதைப் பற்றியேத்தான்
பேசிக் கொண்டிருந்தார்கள், 

கடல் நுரைத்து கபளிகரிக்கும் அபகரிப்பில் 
தொலைந்துவிடுவோம் என்று பயந்தார்கள், 

நட்சத்திரங்களின் எரிக்கல் மழைகளில் 
பொசுங்கிப் போகும் பூமியென்றார்கள், 

பூமிப் பசியின் அடிவயிற்று ஆழத்தில் 
சீரணிக்கவும் வாய்ப்புண்டாம், 

மாயன் காலண்டரும், மதவாதிகளும் 
மல்லுக் கட்டிக் கொண்டிருக்க... 

ஆங்காங்கே பறவைகள் 
இறந்தே வீழ்கின்றன, 

காரணமேயில்லாமல் விலங்குகள் கூட 
காணாமல் போயின, 

தொலைந்து போன வனங்களின் வேர்கள் 
மூர்க்கம் பேசிக் கொண்டிருக்க, 

கனிமங்களைக் குடிக்கும் ஆழ் குழாய் கிணறுகள் 
ஆக்ரோசம் புதைக்க, 

அணு உலைகளின் பெரு மூச்சு 
அகலாமல் விட்டுக் கொண்டிருக்க, 

உலகத் தலைவர்கள் ஐ நா மன்றத்தில் 
பசுமைக்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், 

ஆயுதங்களுக்கான ஒப்பந்தம் 
அங்குதான் கையொப்பமாகிறது, 

அடுத்த யுகத்திலும் கூட யாரும் 
அறிந்து கொள்ள வாய்ப்புகளில்லை, 

புதைகுழி வெட்டிக் கொண்டு புதைந்து போன 
ஓர் அறிவியல் சமூகத்தைப் பற்றி. 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 65


தண்ணீர்



வெய்யிலின் வாய் உன்னை
விழுங்கி விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்
மழையாக நீ
மண்ணுக்குத் திரும்பும் வரை!

கடலுக்குள் ஆறாய்க் கலந்து நீ
களங்கப்பட்டு விட்டதாகக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்
ஓரக் கரையில் நீ
ஊற்றாகச் சுரக்கும் வரை!

இறங்கிவர மட்டுமே
உனக்குத் தெரியும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
ஆவியாக நீ
ஆகாயத்தில் ஏறும் வரை!

உயிர்களை உண்டாக்கும்
உன்னதப் பொரளாகவே
உன்னைப் பாடிக் கொண்டிருந்தேன் -
மூழ்கிச் செத்தவர்களை நீ
முதுகில் சுமந்து காட்டும் வரை!

தண்ணீரே..
புற அழுக்கை மட்டுமே உன்னால்
போக்க முடியும் என்றிருந்தேன் -
என் சோக அழுக்கை
நீ கண்ணீராக வந்து
சுத்தம் செய்யும் வரை!

கவிஞர் க.து.மு.இக்பால்

சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் 
இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது, மோண்ட் பிளாங் இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

மீண்டும் ஒரு புதிய கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கணுக்களின் 
விளிம்புகளைப் பற்றி ஏறிக் கொண்டிருக்கிறேன்
தனிமையின் நீட்சி நீண்டு உயர்கிறது
நினைவுகளின் 
படிமக் குழம்புகள் பாசியாகப் படர்கின்றன,
கேலிமப் புன்னகைகள் சுற்றிச் சுழன்றடிக்க
இடறிவிடும் 
உறவுகளின் வஞ்சம் மரணம் விளிக்கிறது,
சிதைவுகளின் கோட்பாட்டுக் கொடிகள் அறுந்து வீழ
கை கால் பரப்பிக் கீழிறங்குகிறேன்...
பற்றிக் கொண்ட 
கள்ளிக் கொடியின் பால்சுரப்பும் எனக்கானதல்ல...
மரணமும் விளிம்புதான் சற்றை நொடியில்,
தேகம் பூசிய உதிரக் குழம்புகளின் வரட்சியிழுக்க....
சொருகும் கண்களுக்குள் சொக்கட்டானாடிப் பறக்கும்
 இரை தேடும் பறவையொன்று
புத்தியொன்றைப் பொதுவில் வைத்துவிட்டு நகர்கிறது
மூச்சிழுத்தெழுகிறேன்....
முடிவிலிருந்தே தொடங்கட்டும்
மீண்டும் ஒரு புதிய கதை.

- மு.முகமது பாட்சா




Monday, 25 September 2017

நட்பு எது?


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

வெட்ட வெளி பொட்டலிலே
புல் முளைத்தால் நட்பு அது

கட்டும் குளிர் காலத்திலே
கந்தல் துணி நட்பு அது

பட்ட மரக் கிளையினிலே
தொட்டெழுந்துளிர் நட்பு அது

சுட்டெரிக்கும் பாலையிலே
ஒற்றை நிழல் நட்பு அது

கால் இடறி விழும் போது
தாங்கும் கையும்  நட்பு அது

நா தவிக்கும் நேரத்தினில்
சொட்டு நீரும் நட்பு அது

................மொத்தத்தில்.............

ஒட்டு மொத்த விரல்களுக்கும்
கட்டை விரல் நட்பு அது!

- மு.முகமது பாட்சா

கோடுகளுக்குள் நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

கோடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும் நான் 
என்னை விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன், 
என் மீது பூசப்பட்ட மாயங்கள் கழன்று 
தொன்ம பூச்சுகளுக்குள் ஓருலகம் விரிகின்றது... 
தொலைத்தவற்றைத் தேடியெடுக்கிறேன்.... 
கைகளில் 
கூழாங்கற்களும் சிப்பிகளும் நிறைந்திருக்கின்றன, 
ரவிவர்மாவின் அழகியொருத்தி 
என்னைப் பார்த்து விட்டுச் சிரித்துப் போகிறாள், 
அவளுக்கு எப்படித் தெரியும் 
எம்.எஃப்.உசைனின் குதிரைகளில்தான் 
நான் பயணித்து வந்திருக்கிறேன் என்று, 
வான்கோவின் வயல் வெளி பச்சையங்கள் 
இன்னமும் என்மீது ஒட்டிக் கொண்டிருக்கின்றன, 
இவன் நவீன ஓவியமென்று நகைக்கிறீர்கள் 
நகைத்துவிட்டுப் போங்கள்.... 
நுண்ணருவ (abstract )ங்களுக்குள் நுழைந்து 
எண்ணங்களை எடுத்துவருகிறேன், 
நீங்கள் புரிந்ததை படித்து முடிப்பதற்குள் 
நானொரு காவியத்தை வரைந்து முடித்திருப்பேன், 
புரியவில்லையென்றாலும் பரவாயில்லை 
நீங்கள் மரபுகளையும் 
அப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். 

- மு.முகமது பாட்சா

(படத்தில் என் மகன் முகமது ஃபாரூக், படம் எடுத்தது இளைய மகன் முகமது ஃபைசல்..இடம் ஆர்ட்டிஸ்ட் அருணகிரி அவர்களின் ஓவிய காட்சியகம்)

Friday, 22 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 64


ஜனநாயகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

இன்று, இந்த வருடம்,
எப்போதுமே
சமாதானம் , அச்சம் மூலமாக
ஜனநாயகத்தைப் பெறமுடியாது
என் இரண்டு காலில் நிற்க
நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள,
எனக்கும் எல்லா உரிமைகளும் உண்டு
அவனுக்கு இருப்பது போலவே.
நடக்கும் போது நடக்கும் என்று
எல்லோரும் சொல்வதைக் கேட்டுப் புளித்துப் போனது,
நாளை மற்றுமொரு நாளே
நான் இறக்கும் போது எனக்குச் சுதந்திரம் தேவையில்லை
நாளைய ரொட்டியை நினைத்து என்னால் வாழமுடியாது.
சுதந்திரம்
என்பது ஆழமான விதை
மிகத் தேவையோடு
பயிரிடப்பட்டது.
நானும் இங்கு வாழ்கிறேன்,
உன்னைப் போல.
சுதந்திரம் எனக்கும் வேண்டும்.
oOo
:லாங்ஸ்டன் ஹியூஸ்

தமிழில் :தி இரா மீனா
( நன்றி:சொல்வனம்)

Thursday, 21 September 2017

எது வெளிச்சம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், இரவு, வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

இருட்டை இழுத்துப் போர்த்தி உட்கார்ந்திருந்தேன், 
வெளிச்சமொன்று 
என் தோளில் கையைப் போட்டது. 
ஆம் அதே சூஃபிக் கிழவன் உட்கார்ந்திருந்தான், 
கவலை சூழ்ந்ததற்குக் காரணம் கேட்டான் 
வாழ்க்கை இருட்டாய் இருக்கிறதென்றேன், 
தொலைக்காத சிரிப்பை மீளுரு செய்தான், 
இருட்டு எப்படியிருக்கும்? என்றான் 
வெளிச்சத்தைத் தின்றிருக்கும் என்றேன், 
மீண்டும் அதே சிரிப்பு... 
இரவின் வானத்தில் என்ன தெரிகிறதென்றான், 
நிலவையும் நட்சத்திரங்களையும் பட்டியலிட்டேன், 
பகலின் வானத்திலெனக் கேட்டான் 
சூரியன் மட்டும் என்றேன்... 
இப்போது தெரிகிறதா எது வெளிச்சமென்று 
திருப்பிக் கேட்டவன் 
எழுந்து போ இருட்டுதான் வெளிச்சம் என்றான். 
எனக்குள்ளொரு வெளிச்சம் 
மெல்ல எட்டிப் பார்த்தது 
அவன் தூரத்தில் சென்று கொண்டிருந்தான்.

- மு.முகமது பாட்சா

Wednesday, 20 September 2017

வண்ண ஓவியம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கேன்வாசின் மீது தெறிக்கப்பட்ட வண்ணங்கள் 
குடிசையின் ஒழுகலாய் வழிந்து நிற்க 
சற்றே உற்றுப் பார்க்கிறேன், 
அதில் பாலகியொருத்தி பாழ் சிதைவில் கிடக்க, 
சுற்றிலும் யோனியின் உதிரம் கொட்டிக் கிடக்கிறது, 
பட்டை தூரிகையெடுத்து நிட்டை கலைக்கிறேன், 
துப்பாக்கிப் பிடித்த ஒருவன் வைத்த பொட்டுகளில் 
சிதறிக் கிடக்கின்றன உடற் பாகங்கள், 
ஒன்றிரண்டு கோடுகளால் தூரிகையை அலசுகிறேன், 
நித்திரை கலைந்த சாமியாரின் பின் 
ஒரு லார்வாப் புழு அசுரம் எடுக்க , 
காலடியில் 
ஆடையிழந்தப் பெண் அழுது கொண்டிருந்தாள், 
தூரிகையை மாற்றி வனங்களை இழுத்தேன், 
இடையில் எவனோவொருவன் 
மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான், 
வானம் வரைந்தேன் 
நீலத்திட்டுகளின் ஒழுகலில் 
ஓசோனின் ஓட்டை அடைய மறுத்தது, 
நதிகளை வரைந்த போதும் , 
வயல்வெளிகள் இரத்தத்திட்டுகளில் இறந்து கிடந்தன. 
மூளைக்குள் நெளிந்த நெகிழிக் குழம்பால்... 
நான்கைந்து வண்ணங்களை ஒன்றாக்கி வீசினேன், 
போதி மரத்தின் கீழ் பாம்புகள் நெளிந்து கொண்டிருக்க, 
புத்தன் எங்கோ சென்று கொண்டிருந்தான். 
அபாரம்! அபாரம்! என்று 
எல்லோரும் எழுந்து நின்று கை தட்ட 
என் கைகளைச் சாத்தான் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். 

- மு.முகமது பாட்சா

Tuesday, 19 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 63


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

போஸ்ட் மார்ட்டம்

நான் நகரத்தின்
பிரபலமான ஒரு பிணக்கூறு மருத்துவன்
பிரபலமான பல பிரேதங்களை
அறுத்திருக்கிறேன்
மர்மமாக கொல்லப்பட்டவனின்
பிரேத பரிசோதனை மேஜைக்கு
கருவிகளுடனும்
ஏற்கனவே தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்களுடனும்
நான் வருகிறேன்
பிரேதம் நிச்சலனமாக
படுத்திருக்கிற து
என் முகத்தில் லேசான பிரேதக்களை படர்ந்திருப்பதாக
எனது உதவியாளர்கள் கூறினார்கள்
அரசாங்கப் பிணங்களை 
அறுக்கும்போது மட்டும்
ஏனோ என் கைகள் 
நடுங்குகின்றன
போஸ்மார்ட்டம் மேஜையில்
படுத்திருந்தவன் 
வறண்ட கண்களோடு
கேலியாக புன்னகைக்கிறான்
மருத்துவர்களாகிய நாங்கள்
கடவுளுக்கு நிகரானவர்கள்
நாங்கள் அறியாதது 
ஒன்றும் இல்லை
நான் அவனது புன்னகையைப் பார்க்க விரும்பவில்லை
ஒரு செத்த மாட்டை உரிப்பதுபோல
அந்த உடலை
அவனது மார்பிலிருந்து நேராக கீறினேன்
ஒரு உயிருள்ள உடலைவிட
வினோதங்கள் நிரம்பியது 
ஒரு செத்த உடல்
அந்த உடலில் எதையோ
தேடுவது போல 
பாவனை செய்யத்தொடங்கினேன்
உண்மையில் அந்த உடலில்
நான் அறிவதற்கு ஒன்றுமே இல்லை
" டாக்டர் என்ன தேடுகிறீர்கள்"
என்றான் மர்மமாக இறந்தவன் .
"உன் சாவிற்கான காரணங்களை "
என்ற என் பதிலை சலனமில்லாமல்
கேட்டுக்கொண்டான்
பிறகு ஏதோ நினைத்துக்கொண்டவனாய் 
சட்டெனெ தன் விலாவை 
திருப்பிக்காட்டியவன்
" மறைப்பதற்காக
உங்களிடம் கொடுத்தனுப்பப்பட்ட
அந்தக் கொலைக் கருவியை
எங்கே வைப்பது என்று சிரமப்படாதீர்கள்
இதோ இந்த விலா எலும்பின் கீழ்
வைத்து தைத்துவிடுங்கள் 
யாருக்கும் தெரியாது" என்றபோது
அவனது உடலைவிட 
அவனது குரல்
குளிர்ந்திருந்தது.
என் க்ளவ்ஸ்களை கழற்றிவிட்டு
பிரேத பரிசோதனை அறிக்கையில்
குனிந்து கையெழுத்திட்டபோது
யாரோ ' களுக் ' என்று 
சிரித்ததுபோலஇருந்தது.
உண்மையில்
அங்கே யாரும் இருக்கவில்லை
.
 - மனுஷ்ய புத்திரன் 

பேரம்

bargain painting க்கான பட முடிவு

பேரம் பேசியும் படியாதவர்கள் 
அங்கேயே உட்கார்ந்திருக்க, 
படிந்துவிடும் நம்பிக்கையில் 
பேசிக் கொண்டேயிருந்தார்கள், 
நுட்பமாகவே நகர்கிறது பேரம் 
பிணைத்த சங்கிலிகள் 
ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன, 
வெட்கப்படாமல் பேரம் எகிர்கிறது 
அவர்களுக்குத் தெரியும் 
குதிரைகள் விற்பனைக்கென்று 
கடிவாளங்களைக் கழற்றியோட 
குதிரைகள் எத்தனிக்கின்றன... 
துப்பாக்கிகளின் கண்கள் 
தோட்டாக்கள் வழி குறி பார்க்க... 
பேரம் பேசியவர்கள் 
கை கலப்பில் இறங்கியிருந்தார்கள், 
பேரத்தின் முடிவில் இதுவும் சாத்தியம், 
சந்தைக்கடை முழுவதும் அவர்களையே 
வெறித்துக் கொண்டிருக்க. 
ஒன்றிரண்டு குதிரைகள் இறந்து கிடந்தன, 
அங்குவந்த அதிகாரிகள் 
பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் 
கரண்சிகள் இடம் மாறியவுடன் 
'இதெல்லாம் அவர்கள் பிரச்சனை 
நமக்கேன் வம்பு' என்று நகர்ந்துவிட்டார்கள். 
மீண்டும் பேரம் தொடங்கியது... 

- மு.முகமது பாட்சா

ஒற்றை புள்ளி

தானியங்கு மாற்று உரை இல்லை.

அழுகையின் 
விசும்பல்கள் இடையே
தூலமாகத் தேகம்!
.
மார்பில் புதைந்து
மாய்ந்து போக நாட்டம்...
...தொண்டைக் குழியில்
ஏதோவொன்று தடுக்கிறது!
.
அணுத் துகல்களின்
வெடிப்பில்
புகை மூட்டம்!
அவனின் 
நினைவுச் சிதறல்கள்..
தேகம் முழுதும்
தெரித்து நிற்கிறது!
.
அவன்...
பறப்பானா?
மிதப்பானா?
.
சுவனத்தில் 
நின்றுக் கொண்டு
"வா!" வென்றழைப்பானா?
கடும் நரகத்தின்
வெளியில் நின்று
"போ!"என்று உரைப்பானா?
.
அவனது ஆளுமைகள்
பறந்து நழுவி
அன்பு மட்டும்
வழிந்து நிற்கிறது!
.
அவன் தந்த
எச்சில் முத்தங்களின் ஈரம்
உதட்டின் வழி நுழைந்து
இதயத்தில்
மிச்சமாய் இருக்கிறது!
.....காதலின் மரணம் வேதனை!.....

- மு.முகமது பாட்சா

இது என்ன நீதி


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம் மற்றும் வெளிப்புறம்

பரல்களின் மாற்றத்தால்
கொலை களம் மாறியது

நீதி கேட்டவளின் நியாயத்தில்
இரண்டு உயிர்கள்
இடம் மாறிப் போயின!
...
குற்றவாளி பொற்கொல்லன்
பிழைத்துக் கொள்கிறான்
.
விட்டெரிந்த முலையால்
பற்றியெரிகிறது நகரம்
.
.....இதுவென்ன நீதி?.....
.....
- மு. முகமதுபாட்சா

தேர்தல்

தேர்தல்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் சதுரங்கம்
.
சதுரங்க ஆட்டம்
துவங்கிவிட்டது...
.
நீங்கள்
ஒரு காயை நகர்த்தினால்
அவர்கள் 
ஒரு காயை நகர்த்தினார்கள்!
.
அதற்குள்
வாய் சண்டை போட்டால் எப்படி?
.
ம்..
அடுத்த காயை நகர்த்துங்கள்...
.
நகர்த்தலின் களத்தில்
வாய் சண்டைக்கு 
வேலை யில்லை...
.
இல்லை யென்றால்
ஆட்டத்திலிருந்து
தூக்கி விடுவார்கள்!
.
.....சூடு பிடிக்கிறது.....


- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 62

எனது குருதியை எடுத்துக்கொள்ளுங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்


எனது குருதியை
எடுத்துக் கொள்ளுங்கள்
எனது சவப் போர்வையை
எடுத்துக் கொள்ளுங்கள்
எனது உடம்பின்
மிச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

தனியனாய் சவக்குழியில் வைத்து
எனது சவத்தை
புகைப்படமெடுத்துக் கொள்ளுங்கள்

வெளி உலகுக்கு அதனை அனுப்புங்கள்
நீதிபதிகளுக்கு
மனசாட்சியுள்ள மனிதர்களுக்கு
மனிதநெறி கொண்ட மனிதர்களுக்கு
பரந்த மனப்பான்மையுள்ள மனிதர்களுக்கு
அதனை அனுப்புங்கள்

இந்தக் குற்றமற்ற ஆன்மாவின் பொருட்டு
உலகின் முன்
குற்றவுணர்வை அவர்கள் சுமக்கட்டும்

தமது குழந்தைகளுக்கு முன்
வரலாற்றுக்கு முன்
அவர்கள் குற்றவுணர்வு கொள்ளட்டும்
பயனிலாமல் ஆகின
பழிபாவமற்ற இந்த ஆன்மாவின் பொருட்டு

‘காப்பாளர்கள்’ அல்லது ‘சமாதானத்தின்’ கைகளில்
துன்புற்ற இந்த ஆன்மாவின் பொருட்டு
.
கவிதை: ஜூமா அல் தொஸாரி (கைதி)
.
நன்றி : மொழியாக்கம்.   யமுனா ராஜேந்திரன்

அமரிக்க அடக்குமுறையின் " குன்டனான்" என்ற சிறையில் வாடிய  கைதிகளில் ஒருவரின் கவிதை இது.
இன்று தமிழகத்தின் சிறைக் காவலுக்கும் பொருத்தமாகவே இருக்கும்.

விசாரனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சிறைகளுக்குள் 
ஆட்பட்டு 
எத்தனையோ காலமாச்சு , 
சாதியம் எழுப்பிய 
சிறையின் சுவர்களில் 
சூரிய ஒளிகள் 
இருப்பதேயில்லை ! 

சாத்திரன் செய்யும் 
கொலைகளுக்கும் 
சூத்திரன் பொறுப்பென்று 
எவன் எழுதினானோ, 
அன்றே தொடங்கியது 
அடிமையின் வாசனை ! 

நீதி தேவதையும் 
நெளிந்து கொடுக்கிறாள் 
ஆட்சிமையின் அதிகாரத்திற்கு  

விசாரனைகளென்பது 
ஜோடிக்கும் ஒப்பனைகளாக 
மாறி விடும் போது

சிறை வாசம் என்பதும் 
மரணத்தின் 
மற்றுமொரு வாசல்தான் ! 

தீர்ப்புகள் 
திருத்தபடுவதில்லை, 
சாகடிக்கப் படுகின்றன ! 

யுக்திகள் மட்டுமே 
யோசிக்கப் படுகின்றன, 
மரணத்தின் காரணங்களுக்காக ! 

தீர்ப்புகளை நீங்களே 
யூகித்து விடுங்கள் 
அடுத்தக் கொலைகளுக்கான 
காரணத்தை 
ஆராயும் முன்பாக ! 

- மு.முகமது பாட்சா

வார்த்தைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

வார்த்தைகளுக்குள்தான் 
இருவருமே வசிக்கிறோம் 
சிலநேரம் வாசிக்கிறோம், 
சிலநேரம் வசைக்கிறோம், 
சிலநேரம் வார்த்தைகளே 
வெளிநடப்பும் செய்கின்றன !

நமது மெளனத்தில் கூட 
ஒரு சில வார்த்தைகள் 
ஒளிந்து கொண்டுதான் நிற்கின்றன ! 

இப்போதும் நான் 
ஒரு சில வார்த்தைகளை 
தேடிக் கொண்டிருக்கிறேன்,

உன் வார்த்தைகளோடு 
என் வார்த்தைகள் உறவாட ! 
.
- மு.முகமது பாட்சா 

மகளதிகாரம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கடவுளுக்கு மரணமில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வரைதல்

மதுவின் சுவையைக் கூட்டத் தெரியுமா, 
அடிமைகளின் உதிரத்தை அதில் சேர்த்துப் பருகுங்கள் , 
உச்சத்தின் ருசி 
அப்போதுதான் தெரியும் உங்களுக்கு, 
உங்களுக்கும் கர்வம் முளைக்க 
என் பெயரை உச்சரித்துப் பாருங்கள் 
'கேயெஸ் சீசர் ஜெர்மானிக்ஸ்' 
ஆனால் அவர்களென்னை 
'கலிக்யூலா' என்றுதான் அழைக்கிறார்கள், 
அழைத்துக் கொள்ளட்டும் 
அவர்களுக்கு அந்தச் சுதந்திரமும் இல்லையென்றால் 
நான் நிச்சயம் அவர்களின் கடவுளாக இருக்க முடியாது...
டைபிரீயஸ் கிழவனின் மரணத்தைக் கொண்டாடியவர்கள், 
என் மரணத்தை மட்டும் விட்டுவிடவாப் போகிறீர்கள்,  
அடிமை புத்தி இருக்கும் வரை , 
ஆதிக்கப் புத்தி  இருப்பதும் தர்ம நியதிதான். 
நீங்கள்தான் எனக்காக அழுதீர்கள், 
நீங்கள்தான் எனக்காகப் பூச்சொரிந்தீர்கள்...
இன்று மட்டும் என்ன வந்தது? 
பசியென்று அழுதீர்கள், 
உங்களை மிருகங்களுக்கு இரையாக்கினேன், 
வேலையில்லையென்றீர்கள் , 
விபச்சாரத்தைத் தொழிலாக்கினேன், 
என் சகோதரிகளையும்தான் பொதுவில் வைத்தேன், 
தேவையென்றால் அவர்களையும் ருசித்துக் கொள்ளுங்கள் , 
பணம் மட்டும் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும், 
நான் கடவுள், 
நீங்களென் அடிமைகள்...
உங்கள் குறைகளை என் கான்சலிடம் (அமைச்சர்) தெரிவியுங்கள், 
அவர் என் குதிரையாக இருந்தாலென்ன.
அவருக்கும் காதுகள் இருக்கிறது
தீவனத்தை மட்டும் ஞாபகமாக வைத்து விடுங்கள் 
ஓ என் அடிமை 'காஷியல் செயிரீயா' 
நீ எனக்கான கத்தியை தீட்டி வைத்திருப்பதைப் 
பத்திரமாக வைத்துக் கொள், 
உன் கத்தி வேண்டுமென்றால் ஒரு நாள் 
ஒரு விடுதலையை வாங்கிக் கொடுக்கலாம், 
உன்னைப் போல் முட்டாள்கள் 
நாட்டில் அவ்வப்போது முளைத்துவிடுகிறார்கள், 
நீயும் என்னைப் போல் மாறிப்பார், 
அவர்களின் சுயம்  விளங்கிவிடும், 
என்னைப் போன்ற கடவுள்களைக் கொன்றாலும் 
மீண்டும்தான் பிறந்து விடுவார்கள், 
கடவுளுக்குத்தான் மரணமில்லையே.

- மு.முகமது பாட்சா

Popular Posts