
நான்
பூனையின் கண்களோடு
உலாவிக்கொண்டிருக்கிறேன்...
வேட்டைதான் என் தொழில்...
நீங்கள்
எலிகளின் கண்களோடு இல்லையென்பது
எனக்கு நன்றாகத் தெரியும்...
நீங்கள்
பசுக்களின் கண்களை வைத்துக் கொண்டாலும்
எனக்குக் கொண்டாட்டம்தான்...
புலிகளே
பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்...
ஆனாலும்
நீங்கள் ஆடுகளின் கண்களைத்தான்
அதிகம் விரும்புகிறீர்கள்...
அடர்ந்த இருட்டிலும் வேட்டையாட
எனக்குப் பூனையின் கண்களே
போதுமானதாக இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
01/04/2019




























