Thursday, 31 August 2017

மரண விளையாட்டு...

Image may contain: one or more people

இறந்து கிடந்தவனின் கையில் 
இரத்தத்தில் 
நீலத் திமிங்கிலமொன்று 
நீந்திக் கொண்டிருந்தது, 
விளையாட்டொன்று 
அவனைத் தின்றுவிட்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள், 
மதிப்பிழந்த பணம் 
மதிப்போடு வந்துவிட்டதாக 
மத்திய வங்கி அறிவிக்க, 
சிக்காத கறுப்புப் பணம் 
சில நூறு பேர்களின் கழுத்தை 
அறுத்துவிட்டு நகர்ந்திருந்தது, 
செத்த எலிகளாய் சிதறிக் கிடக்கும் 
குழந்தைகளின் கூட்டத்தில் 
ஆக்ஸிசன் பற்றாக்குறை 
காரணமாய் வந்து 
உட்கார்ந்து கொண்டது, 
கல்வியே சரியில்லையென்று 
கலைமகளை 
விற்றுக் கொண்டிருந்தவர்களின் 
சாட்டைச் சுழற்சியில் 
சில நூறுபேர் செத்துக் கிடந்தார்கள், 
வயல்களில் 
இறந்து கிடந்தவர்களின் விளையாட்டு 
என்னவென்று 
இதுவரை யாருக்கும் தெரியவில்லை, 
மாட்டுக்கறி விளையாட்டில் 
மற்றவர்கள்தான் 
நம்மைச் சாகடிப்பார்கள், 
மதவெறி விளையாட்டில் 
யாரும் யாரையும் சாகடிக்க உரிமையுண்டு, 
வாய் மூடிச் சாகும் விளையாட்டில் 
இந்தியர்களை விஞ்சிக் கொள்ள 
இதுவரைக்கும் யாருமேயில்லை, 
செத்துச் செத்து விளையாடுவதுதான் 
எங்களின் பொழுது போக்கு, 
இதில் புளூவேல் விளையாட்டு மட்டும் 
ஏன் தனியா கிடக்கு! 

- மு.முகமது பாட்சா

காதல் லாகரி

இதயம் க்கான பட முடிவு

கவிதைகளின் பொய்களுக்கு
காரணம் கேட்கிறாய் !
.அவை
நீ சொல்லிவைத்த 
பொய்கள்தான் என்பதை
நானெப்படி சொல்வது ?

***

கண்ணாமூச்சி 
விளையாட்டில்
கட்டவிழ்த்தே 
விளையாடுகிறாய்,
.
நீ பிடிப்பதற்காகவே
நானும்,
மாட்டிக் கொள்கிறேன் !

***

வரிகளில்
உட்கார மறுக்கும் சில வார்த்தைகள்
நீ சொல்லியதுதான் !
.
அஃது எனக்காக
எனக்காக மட்டுமே !

***

வாக்குறுதிகள்
வாக்குறுதிகளாகவே
மடிந்து போகிறது
தேர்தல் முடிந்த பின்பு...
.
நீ எப்போது
அரசியலில் சேர்ந்தாய்?

***

-மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் -52

இறப்பு

Image may contain: 1 person, closeup

சிறிதா பெரிதா
திலகமாய்த் திரண்டதா
பாழ்நுதலாய்ப் பரந்ததா
மாலியவள்
விழியாய்க் குறுகியதா
வாள்நோக்காய் நீண்டதா
அவள்
சடைபோல் ஒன்றா
சடையுண்ட குழல்போல பலவா
வண்டியாய்ச் செல்லுமா
பாலமாய் இருக்குமா
மணமடுத்த மஞ்சமா
மஞ்சமடுத்த துயிலா, உயிரா
கூண்டு தப்பிய கிளியா
கூண்டேகும் கிளியா
கூடேகும் புள்ளா
கூடு தப்பிய புள்ளா
வலைப்பட்ட புறாவா
சூடப் பறித்த மலரா
வாட எறிந்த பூவா
கிழியக் கழித்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா
காற்றணைந்த சுடரா
செய்வினையா
செயப்பாட்டு வினையா
தொடர்கதையின் ஒரு பிரிவா
சிறுகதையின் முடிவா
கால்புள்ளியா
முற்றுப்புள்ளியா ?
.
 சி மணி

குப்பைகளாய்

Image may contain: 1 person, closeup

ஆசையின்
விளைச்சலாய் இருக்கலாம்!
காமத்தின்
வியர்வை துளியாக இருக்கலாம்!
அல்லது
மோக வெறியின்
வழுக்கலாகவும் இருக்கலாம்!
நிச்சயம்...
குப்பைத் தொட்டி
ஈன்றிருக்க முடியாது!
ஆனாலும் , ஏன்
குப்பையாய் பார்க்கிறது
சமுகம்?

- மு.முகமது பாட்சா

நீ என்னத்த எழுதி


நீ என்னத்த எழுதி

காலச் சுவட்டில் எழுதியிருக்காயா?
இல்லை !
சாருவையும்,ஜேஎம் மையும் தெரியுமா?
தெரியாது !
தெருக் கூத்து, நிகழ்த்துக் கலை ?
கேள்வி ஞானம் !
நீயெல்லாம் என்னத்த எழுதி!
ஐயா,ஒரே ஒரு கேள்வி ,
என்ன ?
தமிழில் மொத்த எழுத்துகள் எத்தனை ?
.
நீ ஒன்றும் வாத்தியாரில்லை 
வெளியே போ !

- மு.முகமது பாட்சா

பெண்ணென்ற...

Image may contain: one or more people and closeup

கொல்வதும் கூட ஒரு கலையாம், 
கல்விக் கூடங்களில் 
கற்றுக் கொடுக்காமல் நிகழ்கிறது ! 
பெண்களெல்லாம் அடிமைகள் 
மனதிற்குள் ஊறப் போட்டச் சிந்தனைகள் 
ஊற்று நீராய் வடிகின்றது ! 
பயத்தை விதைக்கும் 
தடித்த ஆண்மைகள் ! 
காபியும் காதலியும் ஒன்றுதான் 
கற்றுக் கொடுக்கிறது விளம்பரம் ! 
கணக்கில் சிக்காவிட்டால் கணக்கை முடி 
கதாநாயகன் கதைகளில் சொல்லித் தருகிறான் ! 
வசனமெழுதியவன் வீட்டுப் பெண் 
நாணமடைகிறாள் ஆபாச வார்த்தைகளில் ! 
செல்போன்களில் காதலிக்கக் கற்றுத் தருகின்றது 
சிம் கார்டு நிறுவனங்கள் ! 
தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க 
தனியொரு கூட்டம், 
தூமைகளில் நிறம் கூட்டி வர்ணம் தீட்டும் 
நிர்வாண ஓவியர்கள் ! 
பிணமாய்ப் போய் ,பிணமாய் வருகிறார்கள் 
மாணவிகள் ! 
காதலிக்க மறுத்தவளை ஒருவன் வெட்டுகிறான் 
இன்னொருவன் அமிலத்தால் அழிக்கிறான் , 
பெற்றவள்களின் முலைக் காம்புகளில் 
அமிலம் சுரக்கின்றது ! 
சாதியக் கூறுகளின் இடையே , 
கூரிய நகங்களுடன் ஆணாதிக்கச் சிந்தனைகள் ! 
முடியாத இந்தக் கவிதையைப் போல் 
பெண்களின் சுதந்திரமும்... 

- மு.முகமது பாட்சா

Wednesday, 30 August 2017

புத்தன் எங்கே?

No automatic alt text available.

போதிமரத் துண்டுகளை வெட்டி
துப்பாக்கிக் கட்டை செய்தவர்களைக் கேட்டேன்
புத்தன் எங்கே?
அவர்கள் காட்டிய திசையில்
அவன் கால் பரப்பி இறந்து கிடந்தான்,
அவன் உதிரங்களை பூசிக் கொண்டவர்கள்
அவனுக்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள்,
மௌனம் விதைத்தவனைப் புதைத்துவிட்டு
மௌனத்தை சிதைத்துக் கொண்டிருந்த அவர்கள்,
தமிழர்கள் மற்றும் 
ரோஹிங்கியாக்களின் இரத்தத்தை
தீர்த்தங்களாகப் பருகியே பரவசம் கண்டார்கள்,
மிதந்து கிடக்கும் 
பிணங்களின் மேல்தான் படுத்துறங்கினார்கள்,
போதிக்காத தியானத்திற்குள் புதைந்து போனவர்கள்
புத்தனை எழுப்புவதற்காக மணியாட்டியதுதான்
மிகவும்  வேடிக்கையாக இருந்தது
பிட்சுகளின் கைகளில் இப்போதெல்லாம்
பிச்சைப் பாத்திரங்கள் இருப்பதேயில்லை,
துப்பாக்கிக் குழல்களில்தான் 
சூப்புகளை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.
இறந்து கிடக்கும் புத்தனை எழுப்ப முயற்சிக்காதீர்கள்
அவர்கள் அவனை மறுபடியும் சாகடித்துவிட்டுத்தான்
பூசைகளையே தொடர்வார்கள்....
அவனாவது நிம்மதியாக இனி உறங்கட்டும்.

- மு.முகமது பாட்சா

கற்றுக் கொள்

கற்றுக் கொள்

No automatic alt text available.

கனவு காணக் கற்றுக் கொள்!
வாழ்க்கையின் 
அஸ்திவாரம் அதுதான்!

ஆசை வைக்கக் கற்றுக் கொள்!
வெற்றியின்
அடுத்தபடி அதுதான்!

தோல்விகளை சகித்துக் கொள்!
உன்னை
ஏற்றும் ஏணி அதுதான்!

மனிதர்களை புரிந்துக் கொள்!
நல்ல
வழித் துணை அவர்கள்தான்!

எதிரியையும் அணைத்துச் செல்!
நல்ல
பாடம் சொன்னது அவர்கள்தான்!

விழுந்து எழக் கற்றுக் கொள்!
சிறந்த
வாழ்க்கை என்பது அதுதான்!

- மு.முகமது பாட்சா

மூப்பில்லா முதுமை

Image may contain: one or more people, ocean, outdoor, water and nature

கவர்ச்சியின் கட்டுடல் 
காலத்தோடு கரைந்து போனது 
கவலைப் படாதே கண்மணி 
காதலுக்கு மூப்பே கிடையாது ! 

ஆபாசம் அறுவெறுப்பும் 
இளமைக்குதான் பல்லிளிக்கும் 
முதுமைக்கேன் முக்காடு ? 
தேவையில்லை முத்தழகி... 

இளமையின் நேசமெல்லாம் 
வேசமென்றும் பெயர்ச் சூடும் , 
முதுமைக்கோ வேசமில்லை 
முக்குளிப்போம் வா, காதலி ! 

மரணத்தின் காலம் நம்மை 
தொட்டுதான் காத்திருக்கு , 
மடிமீது தலை சாய்ந்து 
காதலை நாம் வாழ் வைப்போம் ! 

- மு.முகமது பாட்சா

என்ன செய்தாலும்

Image may contain: 1 person, closeup

விடிந்ததும் பல் துலக்கல் 
கடமையாகிறது,
தேநீர் கோப்பையோடு
நரசமானச் செய்திகள்,
அடுக்களைத் தேவைகளின்
திட்டமிடலில்
மண்டைக் காய்ச்சல்,
என்னதான் குளித்து
சிகையொதுக்கி 
நறுமணத்தோடு
அலுவலுக்குச் சென்றாலும்
வதங்கிய வெண்டைக்காயாய்தான்
வாசலில்
மறுபடியும் வந்து நிற்கிறேன்!

- மு.முகமது பாட்சா

என்ன செய்வாய்?

Image may contain: one or more people

அக்கினி வலம் வேண்டாம்
அருந்ததி பார்க்க வேண்டாம்
கால் பிடித்து
மெட்டியும் போட வேண்டாம்
சாய்ந்தழும் வேளையில்
தோள் கொடுத்தென்னை
தட்டிக் கொடுப்பாயா...
தாயன்புக் காட்டியேத்
தழுவிக் கொள்வாயா!

- மு.முகமது பாட்சா

கொசு அறியாதது

No automatic alt text available.

புத்தகத்தின் முனையில் 
உட்கார்ந்த கொசுவொன்று 
மொத்தம் படித்த மெத்த 
அறிவாளி தான் தானென்று 
சொல்லித் திரியும் வேளையில் 
ஊசியின் காதில் நுழைய 
வழி கேட்ட ஒட்டக விலங்கிடம் 
தன் பின்னால் வரச் சொல்லி, 
ஊசியின் காது வழி 
நுழையும் முயற்சியில் 
சிக்கிச் சிதைந்திருந்த 
கொசு கேட்டிருக்க வாய்ப்பிலை, 

நாட்டின் பொருளாதாரம் 
சிக்கிச் சீரழியும் கதை !

- மு.முகமது பாட்சா 

எழுதும் மடல்

No automatic alt text available.

ஒரு மடல் 
எழுதும் மடல், 
ஒரு நிசி 
யின் விசை 
பாய் விரிக்கும் 
தேகமிசை
விசை யிசை 
இயையுமொரு 
தாகச்சுவை 
மோகம் குளிர் 
நனை நனை 
தேகமணை, 
சுவை யிதழ் 
சுரம் தணி 
கனை கணை 
பாயும் சுனை 
தளி சுகம் 
தளும்பும் தமிழ் 
சகம் தனம் 
தழுவும் கரம் 
பரம் தரும் 
சுகம் தவம் 
இதழ்ச் சுவை 
சுவைத் துவை 
விழித் துயில் 
நனை மழை 
முகம் துகம் 
முழுதும் துழை 
அகம் சுகம் 
தரும் பரம் 
விரல் திறம் 
உரம் கரம் 
உலவும் தகம் 
உழலுமகம் 
உயரும் தனம் 
நுரம்பு மனம் 
நுரைக்கும் பதம் 
பதமிசை 
புவியுமசை 
வரம் தரும் 
மரம் தேகம் 
மிகும் காமம் 
நிவம் மேவும் 
நிறையும் தேகம் 
சுகம் மடல் 
எழுதும் மடல் ... 

- மு.முகமது பாட்சா

கறைப் படிந்து

affliction man painting க்கான பட முடிவு

என் இருக் கைகளையும் 
இறுக மூடியே வைத்திருக்கிறேன்
அதன் உள்ளிருந்து 
ஒரு வெப்பக்காற்று கழன்று திமிர்க்கிறது,
ஒரு வனம் 
தன்னையே தகவமைக்க முயற்சிக்கிறது,
சமுத்திரமொன்று 
அலையெழுப்பி அலையெழுப்பி ஓய்கிறது
முடிக்க முடியாத கவிதையொன்று 
ஒரு யுகமாய் மூச்சிறைக்கிறது,
பிராகாரத்து புஷ்பங்களெல்லாம்
தீ பற்றியெரிகின்றன,
சில்லென்ற காற்றுக்கேங்கும் நிழலாய்
நான் ஓர் ஓரமாய் நடந்து செல்கிறேன்...
என் இருக் கைகளையும் 
இறுக மூடி வைத்துக் கொண்டே, 
என்னை தூக்கிச் செல்லும் 
அந்த நால்வருக்கும் கூடத் தெரியாது
என் விரல்களுக்கிடையில் வழியும் நதி
கறைப் படிந்துதான் ஓடுகிறதென்று!

- மு.முகமது பாட்சா

Saturday, 26 August 2017

முழுவதும் நீ


Image may contain: 1 person

நான் 
கவிதைக்கான தளத்தை உருவாக்கி 
கம்பியூட்டர் முன் உட்கார்ந்திருக்கிறேன், 
வெற்றிடத்தைப் பார்வைகள் 
முதலில் நிரப்பிக் கொள்கின்றன, 
மூளை சற்றே கண்மூடி கண் திறக்கிறது, 
எழுத்துகளை வார்த்தைகளாக்கி 
வட்டமிட்டு ஊதுகிறது 
விரல்களின் நுனியில் 
உட்கார்ந்து கொண்ட வார்த்தைகள், 
தட்டச்சின் விசைகளுக்குள் விளையாடி 
இணையத்திற்குள் நுழைந்து மெல்லச் சிரிக்கிறது, 
கண்கள் தாயாகி பரவசமடைய 
வார்த்தைகள் பால்கேட்டு அடம் பிடிக்கின்றன, 
நீ கொடுத்த டீ 
மெல்ல இதம் வருடி என் இணையத்தில் நுழைய 
பரவசம் 
மேலும் சில வார்த்தைகளைப் பிரசவிக்கின்றன, 
இடையே நீ மெல்லிதழால் இதம் வரைகிறாய், 
தலை கோதி கன்னத்தில் பழம் பறிக்கிறாய், 
வார்த்தைகள் குளிராகி 
நடுக்கத்தில் போர்வையைக் கேட்கின்றன, 
உன் இடது கையணைப்பில் இதயம் சூடாக 
வார்த்தைகள் வசமிழந்து ரசம் பிழிகிறது, 
இருவரும் சேர்ந்து கவிதையைப் பருகுகிறோம் 
நதியொன்று நம்மை நனைத்துவிட்டு நடந்து போகிறது, 
போதை தெளிந்து நிமிர்ந்து பார்க்கிறேன் 
கவிதையின் அடியில் 
என் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க, 
கவிதை முழுவதும் நீ மறைந்து கொண்டிருக்கிறாய்.

- மு.முகமது பாட்சா

Friday, 25 August 2017

காட்சி மாற்றம்



காலங்கள் மாறும் போது
காட்சிகளும்,
மாறத்தான் செய்கின்றன!
           முன்பிருந்த 
           நிலைமை யெல்லாம்
           முதுகில் ஏறிக் கொள்ளும்!
சற்றே இளைத்து போனால்,
நரி கூட, சிங்கத்தைக் கேட்கும்
"செளக்கியமா?" என்று
             காளான் கூட
             கர்வித்துக் கொள்ளும்
             புல்லுக்கு, குடை பிடிப்பதாக!
    எல்லாம்,
சற்று, சிலிர்த்தெழும் வரை!
மழை, குளிர்த்து விழும் வரை!
              காலங்கள் மாறும் போது
              காட்சிகளும்
              மாறத்தான் செய்கின்றன!

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 51

2083 ஆகஸ்ட் 11

Image may contain: 1 person, sunglasses and closeup

என் கவிதை ஒன்று 
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் 
கிடைத்தது 
கடற்கரையில் 
நானும் ஞானக்கூத்தனும் 
பேசிக்கொண்டிருந்தோம் 
சுண்டல் வாங்கிப் பிரித்தால் 
காகிதத்தில் ஒரு கோடு 
ஆத்மாநாம் எனும் வாசகங்கள் 
கவிதை ஆரம்பம் 
ஆச்சர்யத்துடன் 
ஞானக்கூத்தனைக் கேட்டேன் 
இன்னும் இங்கேவா இருக்கிறோம் 
அவர் 
சூளைச் செங்கல் குவியலிலே 
தனிக்கல் ஒன்று சரிகிறது 
என்றார் 
என்ன இது வினோதம் 
இருந்த இடத்திலேயே இருப்பது 
என்றேன் 
இருப்பதை உணர்வதே வாழ்க்கை 
என்றார் 
நகுலன் எங்கே என்றேன் 
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார் 
என்றார் 
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன் 
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள 
என்றார் 
நன்றி என்றேன் 
அப்பொழுதுதான் 
ஒரு அணுகுண்டு வெடித்த 
சப்தம் கேட்டது 
இருவரும் 
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.
.
கவிஞர் ஆத்மநாம்

உமிழ்ந்துக் கொள்

Image may contain: one or more people, people standing and outdoor

2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
மாட்டுக் கறிக்காக 
மனிதக் கறி உண்பவர் நாட்டில், 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
கருத்துச் சுதந்திரம் பேசுபவர் கழுத்தை 
அறுக்கும் நாட்டில் 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
சமத்துவம் செத்துத் தீண்டாமை 
வாழும் நாட்டில் 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
தேசிய கொடியில் முகம் துடைத்து 
தேசியம் பேசுபவர் நாட்டில் 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
அன்னிய நாட்டின் அரசியல் 
கைக் கூலிகள் வாழும் நாட்டில் 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 
மனைவி அமந்தேய் உடலை 
காளஹந்தி மஜ்ஹி 
சுமக்கும் காட்சிகள் பார்த்த பின்பும் 
2020 ல் இந்தியா வல்லரசு 
மல்லாக்க படுத்து 
மார்பில் உமிழ்ந்துகொள் மனிதனே ! 

- மு.முகமது பாட்சா
ஆகஸ்ட் 26 - 2016

கண்ணீர் விற்பனைக்கு

Image may contain: one or more people

கண்ணீர் 
வாங்கப் படும் 
அரசு அறிவிப்பு ! 
சந்தோசக் கண்ணீர் 
சற்றும் உதவாது , 
ஏழைகளின் கண்ணீருக்கு 
விலை யதிகம் ... 
உப்பும் அதனில் 
சொச்சமாய் எடுக்கலாம் ! 
ஆதார் கார்டு 
முக்கிய அவசியம் , 
வங்கி மூலம்தான் 
பணம் பட்டுவாடா ! 
வாங்கிய கடனை -அதில் 
பிடிக்கப் படும் ! 
கூடுதல் 
கண்ணீர் வர வழைக்க 
அரசு உத்தரவாதம் ! 
பரிதாபக் கண்ணீர்களுக்கு 
நிச்சயம் விலையில்லை ! 
உச்சுக் கொட்டுவதை 
நிறுத்திக் கொள்ள உத்தரவு ! 
ஏழைகளின் பசி போக்க 
நல்லதொரு திட்டமென்று , 
அரசு விளம்பரத்தில் 
கண்ணீரின் மகிமைகள் ! 
ஏழைகளாய் மாறுவதற்கு 
மக்கள், 
ஒத்துழைக்க வேண்டுமாம் ! 
அன்னிய முதலீட்டில் 
அதற்கான ஒப்பந்தம் ரெடி! 
கண்ணீர் விற்க 
காத்து நிற்கின்றது கூட்டம் , 
கால் வலியும் சேர்ந்து வந்தால் 
கூடுதலாய் கிடைக்கும் 
கண்ணீர். 

- மு.முகமது பாட்சா

கோபம்

கோபம்

Image may contain: 1 person

மூக்கின் நுனி வரை
முத்தாய் துளிர்த்து,
.....கொவ்வைப் பழம் போல்
முகத்தில் வெடித்து,
.....கண்களில்,அரக்க 
குணத்தைக் காட்டி,
.....கை, கால் களெல்லாம்
நடு நடுங்க,
.....புத்தி, சுயமும்
விட்டு விலகி,
.....பித்தன் போன்ற
நிலையில் நிறுத்தி,
.....மானம் தன்னை
இழக்கச் செய்யும்
.....மாபெரும் பொருளே....
கோபமாகும்!

-மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 50


நான் இல்லாமல் என் வாழ்க்கை



நான் இல்லாமலே 
என் வாழ்க்கை 
எதேச்சையில் 
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக் 
கற்பிக்க 
நான் இல்லாததால் 
நீல வியாபகம் கொண்டது

எதை துறந்தோம் என்று 
அறிய வேண்டாத 
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின் 
பொது ரீங்காரம் மட்டும் 
தொடர 
நிழல் வீழ்த்தாமல் 
நடமாடியது

கூரைகளுக்கு மேலே 
தன்மைகளின் எதிர்ப்பை 
அலட்சியம் செய்து 
அசைவு தெரியாமல் 
பறந்து திரிந்தது

பூமியை துளைத்து 
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு 
அகப்படாமல் 
நுட்பம் எதுவுமற்ற 
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து 
குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம் 
புகைந்து அடங்குவதை 
வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து 
தொலைதூரத்து வாசனையாய் 
மிஞ்சிற்று

எனது குறியீடுகளின் 
குறுக்கீடு 
இல்லாது போகவே 
தன்னைத் தனக்குக் 
காட்டிக் கொண்டிருப்பதையும் 
கைவிட்டது 
.
கவிஞர். அபி (எ) ஹபிபுல்லாஹ்

அவள் பெயர் சீதையென்றும்

Image may contain: 1 person, closeup

ஆபனிகன் வலைக்குள் 
அகப்பட்ட மானொன்று 
மாயையின் வித்தைகளால் 
மாரீசனாய் உருமாறி 
மருட்கையுணர்த்தி 
வெருண்டொடும் வேளையில் 
மயங்கும் விழியாளொருத்தி 
விரித்த வலைக்குள் 
வீழ்ந்தும் மீளாத்துயரில் 
தப்பும் வழியறிந்தும் தப்பாது 
சிறையிருக்கும் நோவினைக்கு 
முத்த மருந்திட வருவாளா 
என்றே காத்திருக்கும் 
நொடிப்பொழுதில் 
மொத்த மழையாய்த் தந்த 
கன்னிகைக்கு, 
உறவென்றே வந்த ஒருவன் 
உதறி வீசிய வாள் வீச்சில் 
வீழ்ந்த ஈர் உடல்களில் 
வழிந்த உதிரத்துளிகளில் 
எழுதுகோல் கொண்டொருவன் 
வாழ்க்கைப் பிழையென்று 
எழுதிவிட்டு நகர 
சாதிய நரிகளெல்லாம் 
மான் கறி விருந்தில் 
மகிழாட்டம் ஆடும் அவ்வேளையில்.... 

தூரத்தில் நின்று 
கண்ணீர் வடிக்கும் அவளின் பெயர் 
சீதையென்றும் கூட இருக்கலாம்.

- மு.முகமது பாட்சா 

காதல் மொழி

No automatic alt text available.

கசங்கிய காகிதங்களில் 
கவிதை மொழிகள் வாழ்விழந்து, 

தேடல்களில் களைத்து போகும் 
பேனாவின் முனை , 

அவள் அழகிற்காகத் தேடபட்ட சொற்கள் 
அகராதிகளி லில்லை ,
 
அப்படியென்ன அவ்வளவு அழகா நீ?
 
காதலிக்கும் வரை 
ஒப்பனைப் பூசும் மொழிகள்,
 
காலம் கடந்ததும் கலைந்து போகலாம்
வர்ணனைகளின் வார்த்தைகள் 
கசங்காத காகிதங்களாய்,
 
கற்பிழந்து சிரிக்கும் , 
வெள்ளைத் தாளில் "நேசிக்கிறேன்" 
என்ற ஒற்றை வார்த்தை போதுமே ,
 
நீ நீயாகவே இரு , நான் நானாகவே இருக்கிறேன், 

நிலவுகளையும், மலர்களையும் 
தொந்திரவு செய்ய வேண்டாம் ! 

- மு.முகமது பாட்சா

Thursday, 24 August 2017

உடனே விடுதலை செய்

Image may contain: 1 person

நீ பிணைத்த சொற்களில் எது காதல்மொழி? 
உன் மனதிற்குள் மௌனித்த 
மரணச் சொற்களை நானெப்படி அறிவேன்? 
சில்லிட்டுவிழுந்த மழைத் துளிகளின் 
க்ளிங் ரீங்கார சப்தம் காதலை இசைக்கிறது, 
பின்னிக் கிடக்கும் கொடிகளில் 
எது நீ? எது நான்? 
துன்பங்களில்தான் காதல் உட்கார்ந்திருப்பதாக 
சூபிக் கிழவன் சொல்லிவிட்டுச் சிரிக்கிறான், 
மோனக் கிறுக்கர்களுக்கு 
காதலின் சோகமும் காதலாகவே இருக்கிறது, 
உணர்வுகளுக்குள் 
ஒளிந்திருக்கும் ஒற்றைச் சொல்லை 
கண்கள்தானே முதலில் கவிதை செய்கின்றன... 
ஒப்பனையில்லாத நம் புன்னகைகள்தானே 
ஒப்பந்தம் போடுகின்றன, 
பிறகேன் வார்த்தைகளை ஒளித்து வைக்கிறாய்? 
வாசலில் நிற்பவன் யாசகனல்ல 
உன் வாசகனென்பதை உணர்ந்து கொள். 
காதல் மொழிகள் சிறையிலிருக்கின்றன 
சர்வாதிகாரியே உடனே விடுதலை செய்! 

 - மு.முகமது பாட்சா

மரண விளையாட்டு

Image may contain: one or more people, night and fire

அகலிடமெங்கும் தீ கொழுந்துவிட்டெரிய 
அனைவரும் ஓடியாடி விளையாடுகிறோம், 
பற்றியெரியும் தீயில் 
தேகம் பொட்டெனப் பொசுங்காமல் 
பொலிவிழந்து சிரிக்கிறோம், 
சீமையெண்ணெய்க் குழாய்கள் 
தீயினை அணைக்க எத்தனிப்புகள் செய்கின்றன, 
கால் நழுவும் பூமியில் 
கச்சா எண்ணெய்கள் பீறீட்டெழ, 
காய்ந்தக் கானகம் 
சாமரம் வீச முயற்சிக்கிறது, 
ஓசோனின் ஓட்டைகள் நிழல் விரிக்கை விரிக்க 
சூர்யக் கதிர்கள் குளிர் மழை பொழிகின்றன, 
அரசனின் நாற்காலியை 
ஆயுதம் தாங்கிய பண மூட்டைகள் காவல் காக்க, 
செத்து விளையாடக் கடலுக்குள் வீழ்கிறோம் 
செத்த மீன்கள் மீண்டும் எங்களைக் கரை சேர்க்கிறது, 
இறந்துவிட்ட எங்களிடம் ஆதார் கேட்டு 
சலுகைகள் வழங்க அரசன் காத்திருக்கிறான், 
நாங்களும் சாபத்தைப் பதிவு செய்துவிட்டு 
மீண்டும் மண்ணுக்குள் புதைந்து 
மரண விளையாட்டை மகிழ்வுடன் களிக்கிறோம். 

- மு.முகமது பாட்சா

Wednesday, 23 August 2017

விதைகள்

விதைகள்

சாமியை தரிசிக்க வந்த
பக்தன் சொன்னான்,
'கடவுளுக்கு கண்ணில்லை!            

***

நான் என்ற ஒற்றைச் சொல்லில்
அகம்பாவம் தொக்கி நிற்கிறது!

***

நல்ல தகப்பனாய் இருப்பதைவிட
நல்ல தோழனாக இருங்கள்,
அவர்களும், உங்களுக்கு
நல்ல பிள்ளைகளாகவே இருப்பார்கள்.

***

பழங்களுக்கு தெரிவதில்லை
தாம் ஒரு விருட்சத்தை
வைத்திருக்கிறோம் என்று!

***

தூங்கி விழித்த பிறகுதான் 
தெரிந்தது...
'நான், இப்போதுதான்
பிறந்திருக்கிறேன்!'

***

காதல் சொல்ல வந்தவன்
காமத்தில் மூழ்கிப் போகிறான்!
'இவன்,என்ன மாடல்?'

***

மருமகள்
புள்ளி வைத்துக் கோலம் போடுகிறாள் 
முதியோர் இல்லத்தில் 
மாமனார்,மாமியார் !

***

கோட்டைப் போட்டு 
தாண்டாதே என்கிறான்
லட்சுமண ரேகையை தாண்டியவள்தான் 
சீதையென்கிறாள்!

***

மு.முகமது பாட்சா

பசி

               பசி

Image may contain: one or more people and people sitting

பார்த்த இடமெல்லாம்
விளைந்திருந்தது பசி,

ஏழ்மையின் தயவால்
வயிற்றுப் பசி,

உழைத்த வேலைக்கும்
ஊதியம் கிடைக்காமல்
வறுமையின் பசியினால்
வாடினர் சில பேர்,

வயிற்று பசி 
தொலைத்தவனையும்,
ஆசைப் பசி
அகோரமாய் ஆட்கொண்டது,

முற்றும் துறந்த
முனிவனைக் கூட
சற்றே ஆட்டி வைத்தது
காமப் பசி,

அறுக்க, அறுக்க
விதைகளே யில்லாமல்
விளைந்து கொண்டிருந்தது
பூமியில் அனேக பசிகள்!

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 49


ஒளிக்கு ஒர் இரவு

Image may contain: 1 person, sunglasses and closeup

காக்கை கரைகிறதே 
பொய்ப்புலம்பல் அது. 
கடலலைகள் தாவிக் குதித்தல் 
போலிக் கும்மாளம். 
இரும்பு மெஷின் ஒலி 
கபாலம் அதிரும். 
பஞ்சாலைக் கரித்தூள் மழை 
நுரையீரல் கமறும். 
அலமறும் சங்கு இங்கே 
உயிர்ப்புலம்பல். 
தொழிலின் 
வருவாய்தான் கும்மாளம். 
லாப மீன் திரியும் 
பட்டணப் பெருங்கடல். 
தாவிக் குதிக்கும் 
காரியப் படகுகள். 
இயற்கைக்கு ஓய்வு ஓயாத 
மகத் சலித்த அதன் 
பேரிரவு.
.
பிரமிள்

யாரும் இங்கில்லை

Image may contain: one or more people, outdoor and water

சிக்கந்தர் துல்கர்னைன் 
கொண்டு சென்றதொன்றுமில்லை , 
சாலமனின் மரணத்தை 
ஜின்களுமே அறியவில்லை , 
இறைத் தூதரென்று வந்த 
நபிகள் யாரும் உயிரோடில்லை , 
அளவிற்கதிகம் சேர்த்துவைத்த 
காரூனும்தான் பூமிப்பிள்ளை , 
தேசத்திற்குச் சண்டையிட்ட 
பாண்டவர்களும் வாழவில்லை , 
இராவணனை கொன்றழித்த 
இராமனுக்கும் ஆயுளில்லை , 
நாடுவிட்டு நாடு வாழ்ந்த 
ஹிட்லரும்தான் இன்று இல்லை , 
நல்லவரோ ,கெட்டவரோ 
நாள் கடந்து வாழ்ந்ததில்லை , 
வாழ்கவென்ற புகழ் மொழியால் 
வாழ்ந்ததாக வரலாறில்லை , 
பூமியில் நாமெல்லாம் 
வந்து போகும் செல்லப் பிள்ளை 
நேசம் மட்டும் இருந்துவிட்டால் 
போகும் காலம், இல்லை தொல்லை! 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 48

அடிமைகள்

Image may contain: 1 person

அடிமைகள் அன்றியே வேறோ? - மனம் 
ஆற அறிந்ததை அஞ்சுவராயின் - (அடிமை) 

தம்நிலை தாழ்ந்துள மக்கள் - சற்றும் 
தம்வலி இன்றித் தவித்திடும் மக்கள் 
தங்களுக் காகவே தாங்கிப் - பேசும் 
தைரியம் இல்லாத பேடிகள் தாமும் - (அடிமை) 

நெஞ்சறி உண்மையைக் கூறின் - நேரும் 
நிந்தனை புன்சொல் நிஷ்டூரங்கள் ஆதிச் 
சஞ்சலம் என்று பயந்து - தக்க 
மந்திரம் என்று வாய்மூடி இருப்போர் - (அடிமை) 

இரண்டொருத் தர்என எண்ணி - உண்மை 
கொண்டவர் பக்கவே கெண்டிடல் விட்டு 
கண்ட பெயர்களை அஞ்சி - மனம் 
கண்டதோர் உண்மை கரந்திடுவோர்கள் - (அடிமை) 

அ மாதவய்யா 
.
(ஆங்கிலக்கவிஞர் ஜேம்ஸ் ரஸ்ஸல் லோயல் (James Russel Lowell) எழுதிய 
சுதந்திரம் என்னும் கவிதையை இவர் மொழி பெயர்த்திருந்தார். 
கவிதை போட்டியில் பாரதியை வென்றக் கவிஞரும் இவர்தான்)

இரண்டும் வெவ்வேறு கவிதைகளல்ல

Image may contain: 1 person, closeup

இளவரசியைக் கடத்திச் சென்றவனை 
தேடிச் செல்கிறான் விறகுவெட்டி , 
மாயக் கம்பளத்தில் கடத்திப் போனதாக 
கழுகொன்றுச் சொல்லிவிட்டுப் பறக்கிறது , 
இறகுகளை வரைந்து கொண்டு 
எளிதாகப் பறக்கிறான் விறகு வெட்டி , 
கடத்திப் போனவன் சூன்யக் காரனென்று 
எதிரில் வந்த நாகமொன்றுச் சொல்லிவிட்டு மறைகிறது , 
ஏழு கடல்கள் தாண்டியும் 
எளிதில் கிடைக்காத இளவரசியை 
மரத்தை வெட்டி உருவாக்கி ,உயிரை கொடுக்கிறான் , 
மன்னருக்கு மகள் கிடைத்த மகிழ்ச்சியில் 
ஏழைகளுக்கு இலவச நல் விருந்து , 
வரிசையில் பசியோடு காத்திருக்கிறாள் 
உண்மையான இளவரசி ! 
அன்னதானம் வழங்குவது மரவெட்டியும், மர இளவரசியும்! 

அன்னிய நாட்டிலிருந்து 
இறக்குமதி 
அரிசியும் பருப்பும், 
கான்கிரிட் பயிர்கள் 
வரிசையில் காத்துக் கிடக்கின்றன. 

இரண்டும் வெவ்வேறு கவிதைகளல்ல ; 
எங்கோ ஒரு முடிச்சி 
இழுத்துப் பிடிக்கிறது இரண்டையும் ! 

- மு.முகமது பாட்சா

பிறக்கவா ? இறக்கவா ?

Image may contain: 1 person

என்னைத் துளைத்தூடுருவும் குண்டுகள் 
ஈயத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டிய 
அவசியமில்லை, 
உன் வார்த்தைகளால் கூட 
வடிவமைக்கப் பட்டிருக்கலாம். 
என் பாதைகளை இருட்டாக்கி விட்டுத்தான் 
நீ துப்பாக்கியின் விசைகளையே 
அழுத்துகிறாய். 
மௌனம் சூழ் அடர்வெளியில் 
என்னை ஓடவிட்டுச் சுடுவது 
உனக்கு என்றுமே கை வந்த கலை, 
நான் 
இறந்தும் பிறந்தும் அடிக்கடிச் சாகிறேன், 
என் கல்லறைப் பூக்கள் மட்டும் 
என்றுமே காய்வதேயில்லை. 
இறந்து கிடக்குமென்னை 
எல்லோரும் பார்த்துவிட்டுப் போகிறார்கள் 
நான்தான் உன்னைச் சுட்டுவிட்டதாக 
அவர்களிடம் சொல்லிவிட்டு அழுகிறாய், 
நான் இப்போது 
இறக்க வேண்டுமா? அல்லது பிறக்க வேண்டுமா? 
அதையும் சொல்லிவிட்டு போய்விடு.

- மு.முகமது பாட்சா

Tuesday, 22 August 2017

முகநூல் பார்வைகள்

Image may contain: one or more people

கனவு பற்றிய பதிவிட்டேன் 
கடந்து போனார்கள் ! 
காலம் பற்றிய பதிவை படிக்க 
நேரமில்லை ! 
வாழ்க்கை பற்றிச் சொல்லவே வேண்டாம் 
வேடிக்கையானது ! 
இயற்கை பற்றிய பதிவிற்கு 
ஒன்றிரண்டு லைக்கினார்கள் ! 
மாசு, மீத்தேன்,கெயில், 
அணு உலைகளுக்கு 
வெட்டிபயலென்று எள்ளியிருப்பார்கள் ! 
அரசியல் பற்றி எழுதிவிட்டால் 
வதைக்கும் வார்த்தைகள் வாங்க வேண்டும் ! 
காதல் பற்றிய பதிவிற்கோ... 
கணிசமாய் வந்தது கமெண்டுகள் ! 
காதலி பற்றிய கவிதைகளுக்கு 
ஆஹா,ஓஹோ,பேஷ்! பேஷ் ! 
ஆனாலும் 
நடிகைகளின் படங்களுக்கும்,கவர்ச்சிக்கும் 
கல்லா கட்டியது கமெண்டுகள் ! 
சமுகப் பிரச்சனைகளுக்குத் தாலாட்டி விட்டு 
2020ல் இந்தியா வல்லரசு ! 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 47

           கனவு

தொடர்புடைய படம்

தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கில் நண்பகல் வெம்மையில்
என் மார்பில் ஒரு குண்டு தைத்திருக்க,
அசைவின்றி விழுந்துகிடக்கிறேன்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், மார்பு நனைத்து…
பள்ளச்சரிவின் மணலில்
விழுந்துகிடக்கிறேன் நான் மட்டும் தனியனாய்.
என்னைச் சுற்றிலுமிருக்கும் பாறை முகடுகளில்
மஞ்சள் சிகரங்களைப் பிரகாசித்து
அவை மீது சுட்டெரிக்கிறான் போலும் சூரியன்.
என்னையும் சுட்டெரிக்கிறான் போலும்.
உறக்கத்தில் ஆழ்கிறேன்,
சாவின் விளிம்பில் ஒரு கனா காண்கிறேன்…
என் தாயகத்தி்ல் ஆர்ப்பாட்டமாய்
கொழுக்கின்றன எழுந்தாடுகின்றன
கொண்டாட்டங்களின் ஜுவாலைகள்.
வண்ண வண்ண உடைகளில் திரைகளில்
குழுமுகிறார்கள் இளம் பெண்கள், சந்தோஷத்தில்.
என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்…
அந்தச் சந்தோஷ பேச்சுகளிலிருந்து
விலகி நிற்கிறாள் ஒருத்தி.
சோகச் சிந்தனையொன்றில் ஆழ்ந்தவளாக
தனியாக அமர்ந்திருக்கிறாள்.
அவளது இளம் இதயம் உறைந்து போயிருக்கிறது,
துயரத்தில் இருக்கிறது.
அவள் கனவில் தன்னை இழந்திருந்தாள்.
என்ன கண்டாள், கடவுளுக்கே வெளிச்சம்!
தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கை
அவள் தன் கனவில் கண்டாள்.
அவளுக்குத் தெரிந்தவன் ஒருவனின் பிணம்
தரையில் விழுந்துக் கிடக்கக் கண்டாள்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், தரையெல்லாம் நனைந்து, குளிரில் உறைந்து… 

கவிஞர் லெர்மான்த்தோவ் மிகையீல் யூர்யேவிச்
- (ரஷ்யாவை சேர்ந்த 17ம் நூற்றாண்டின் இணையற்ற
ரொமேண்டிக் கவிஞர். நாடகம், நாவல்களும் எழுதியுள்ளார்)


தமிழில்: செ ச செந்தில்நாதன்

பூக்கள்

பூக்கள்

முத்தங்களை
பத்திர படுத்துங்கள்
இல்லை யென்றால்
எச்சில் பாத்திரமாகும்
உங்களின் உதடுகள்!

         000

பழங்களைத் தின்ற
நன்றி கடனுக்காக
மரங்களை விதைக்கிறது
பறவைகள்!

         000

மனிதர்கள்
மலர்களை நேசித்தாலும்,
மலர்கள் என்னவோ
வண்டுகளைதான் நேசிக்கின்றன!

         000

புத்தகங்கள்
சுவாசிக்கின்றன
மனிதர்கள்
உயிர் வாழ்வதற்கு!

           000

"காதலாவது!...கத்திரிக்காயாவது!"
என்றாள் அம்மா
தன் பழைய காதலை
மனதில் ஓடவிட்டு!

             000

உறக்கம் போல் மரணம்
தினம் தினம் இறக்கிறேன்,
தினம் தினம் பிறக்கிறேன்,
அத்தனை பிறவியிலும்
உத்தமனாய் இல்லாமல் !

                000

நீயாவது சொல்லிவிடு
அல்லது 
நானாவது சொல்லி விடுகிறேன் ,
பிரிவு என்பதும்
ஒரு வகை தயக்கம்தான் !

- மு.முகமது பாட்சா

கதையாய் ஒரு காதல்

கதையாய் ஒரு காதல்

Image may contain: sky, cloud and outdoor

'நிலா நிலா ஓடிவா' என்றான்
'உன்னை நம்பிதான் ஓடி வரேன்' என்றாள்
'நில்லாமல் ஓடி வா!'
'உன்னை நம்பினதுக்கு கால் வலிதான்டா 
மிச்சம்?' என்றாள்.
'மலை மீது ஏறி வா!'
'ஏன், ஒரேடியாய் சாகடிக்கவா?' என்றாள்
அடுத்து,
'காக்கா காக்கா மை கொண்டா!' என்றான்
'நீ முதல்ல எனக்கு சோறு கொண்டா!' என்றாள்
'காடைக் குருவி மலர் கொண்டா!'
'அப்படியே, ஒரு விலக்கு மாறும் கொண்டாரச் சொல்'
என்றாள்!
'பசுவே பசுவே பால் கொண்டா!'
'அடச் சோம்பேறி!
அதைக் கூட அதுதான் எடுத்துவந்து,
உன் கையில் கொடுக்கணுமா?'
'பச்சை கிளியே பழம் கொண்டா!' என்றான்
'டேய், உன்னை நம்பினதுக்கு,
அதுகளை நம்பி ஓடி யிருக்கலாம்!- 
நிலா ஓடினாள்
அவன், பின்னாலேயே ஓடி வந்தான்....
'நிலா நிலா ஓடி வா!'
'செருப்பு பிஞ்சிடும், 
ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு!'

- மு.முகமது பாட்சா

கரையாத காவியங்கள் - எழுத்தாளுமை - 1


                                                          லட்சுமி


                                               
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் லட்சுமி அவர்களுக்கு 
தனி இடம் உண்டு. லட்சக்கணக்கான வாசகிகள் 
அவரின் எழுத்துகளுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

‘புத்தகம் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் 
லட்சுமியின் எழுத்தை நிச்சயம் படித்திருப்பார்’ என்பதை 
மெய்ப்பிப்பது போலவே இருந்தன அவர் எழுத்துகள். 
பெண்களின் ஆதர்ஷ எழுத்தாளர் என்று சொல்லலாம்  

இயற்பெயர் திரிபுரசுந்தரி. 1923, மார்ச் 21 அன்று திருச்சி மாவட்டம் 
தொட்டியம் என்கிற ஊரில் பிறந்தார். சிறு வயதில் 
பாட்டி சொன்ன கதைகள் மனதில் வேரூன்ற, எழுத்தின் 
மேலான வசீகரம் அவரை ஈர்த்தது. 

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். 
இரண்டாம் உலகப் போர் நடை பெற்ற நேரத்தில், 
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, 
தந்தை சீனிவாசன் இவருடைய படிப்பை நிறுத்த முடிவு செய்தார். 
லட்சுமியோ பத்திரிகைகளில் எழுதி, அதில் வரும் வருவாயைக் கொண்டு 
படிப்பைத் தொடரலாம் என்று எண்ணினார். 
தொடர்ந்து எழுதவும் ஆரம்பித்தார். 

படித்து முடித்து அரசு மருத்துவராக வேலையில் சேர்ந்தார். அங்கு
கண்ணபிரான் என்பவரை காதலித்து, மணம் செய்து கொண்டார். 
கணவருடன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் வாழ்ந்தார். 

தென்னாப்பிரிக்காவிலும் அரசு மருத்துவராகவே பணியாற்றினார். 

இந்தத் தம்பதிக்கு மகேஸ்வரன் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 
1968ல் கணவர் இறந்த பிறகு ஒன்பதாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் 
இருந்தார். பிறகு, தமிழகம் திரும்பியவர் பகுதி நேரமாக 
மருத்துவம் பார்த்துக் கொண்டு, முழு நேர எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார்.

 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150 நாவல்கள், 5 கட்டுரைத் 
தொகுப்புகள், 6 மருத்துவ நூல்களை எழுதியிருக்கும் இவர். 
தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். 

இவருடைய ‘ஒரு காவிரியைப் போல’ என்கிற நாவலுக்கு 
சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1987ம் ஆண்டு காலமானார்.


- மு.முகமது பாட்சா

Popular Posts