Monday, 6 July 2020

இது ஒரு வசனக்கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

இதனை
வசனக்கவிதையென்றே எடுத்துக் கொள்ளலாம்!
மூன்றாம் அதிகாரத்தின்
நான்காவது பக்கத்தைப் புரட்டுங்களென்றால்
யாரும் புரட்டப் போவதில்லை!
பார்வைகள், ஓடிப்பிடிக்கும் வண்டிகளின் தூரத்தில்
அமர்ந்திருக்கிறது,
பெரிதாகிவிட்ட பிரச்சனைகள்!
எதையூற்றி அணைக்கலாம் என்கிறது சிந்தனை!
முக்கி முனங்கும் வண்டிக்குத் தீனியைப்போட்டு
கார்டை நீட்டி வாங்குவதற்குள்
வாங்கும் மேல் மூச்சு ஆயில் இல்லாமல் உரும...
பணத்தைப் பிடுங்கும் அரசியலை
எந்த மேடையிலமர்ந்து விவாதிக்க முடியும்?
சற்றுமுன்தான் அபராதம் கட்டினேன்
ஹெல்மெட்டிற்குள் முகக்கவசம் போடாதற்கு!
அடப்பாவிகளா!
கருணையேயில்லையா?
வந்த தும்மலை ஒருவன் அடக்கி வாசிக்கிறான்
வேறுவழியில்லை
பி.சி.ஆர் கருவிகள் கொரியாவிலிருந்து வாங்கிவிட்டார்கள்!
பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்ய வேண்டும்
திருச்சியிலிருக்கும் அம்மாவைப் பார்க்க
வெரிபிகேஷன் முடியவில்லை...
இந்தியா ஒரே நாடு!

- முகமது பாட்சா*
06/07/2020

No comments:

Post a Comment

Popular Posts