Friday, 3 July 2020

ஆதாரம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

ஆதாரத்தைத்
தேடிக் கொண்டிருந்தார்கள்
ஆதாரம் எப்படியிருக்கும் என்பது
விளக்கத்திற்கு வரவில்லை
பொய்ச்சாட்சியே ஆதாரமாகிப் போனால்
உண்மை எங்கே தூக்கிட்டு இறந்திருக்கும்?
ஆதாரம் எங்கே?
நீதி - கண்களையுருட்டி
கேள்வியைப் பலமாக எழுப்புகிறது...
குற்றவாளிகள்
கூண்டிற்குள் நின்று வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்!
துப்பைத் துடைத்துவிட்டு நீட்டியதில்
அப்பாவியின் ஆயுள் ரேகை அழிந்திருந்தது!
ஆதாரத்தின் சுமை யாருடையது?
நிரூபிக்கவியலா
ஆதாரங்கள் மெல்ல வெளியேறுகின்றன!
விசாரணை
இத்துடன் முடிவடைகிறது!

- முகமது பாட்சா*
02/07/2020

No comments:

Post a Comment

Popular Posts