
உறைந்துகிடக்கும் முத்தங்களை
அள்ளி அருகில் வைத்துவிட்டு
கவிதையை எழுதத் தொடங்குகிறேன்...
தேநீர் கோப்பையில்
ஒட்டிக் கொண்டிருந்த முத்தத்தை
ரசித்த கவிதை
என்னிடம் இல்லை!
வண்ணமொட்டிய முத்தங்கள் வெறும்
பகட்டென்று நீ சொன்னபோது
என் இமைகளினோரம்
உன் இனிய முத்தம் ஒட்டிக் கொண்டது!
- முகமது பாட்சா*
06/07/2020
No comments:
Post a Comment