Friday, 3 July 2020

யன்னல் யாக்கை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
யன்னலை
சாத்தியே வைத்திருக்கிறேன்
புழுக்கம் வெளியேறட்டும்!

யன்னலுக்கு வெளியே வீசிய பார்வை

இன்னமும்
கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறது!

யன்னலுக்கு வெளியே

சில பறவைகளும் பெரும் வானமும்
அடைபட்டிருக்கிறது!

நங்கூரமறுத்த நாவாய்

யன்னலை மோதிக் கொண்டேயிருக்க
அறைக்குள் அலைகள்!

காற்றடிக்கும் போதெல்லாம்

யாக்கையும் யன்னலும்
அடிக்கடித் திறந்து மூடுகின்றன!

யன்னலை

எப்படி அழைப்பீர்கள்?
காலதர் என்பது பிழையாக இருக்கலாம்!

- முகமது பாட்சா*
03/07/2020

No comments:

Post a Comment

Popular Posts