Monday, 29 June 2020

ஒத்திகை



யாரும் குண்டு வீசவில்லை
பதுங்கு குழிகளில்
தங்களைப் பதுக்கிக் கொள்கிறார்கள்!

புன்னகையை
அளந்து கொடுத்துவிட்டு
ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்!

நிழலையெல்லாம்
வெட்டிக் கொல்வதற்கு
ஆட்களைத் தேடுகிறார்கள்!

தாழ்ப்பாள்களை ஆட்டிப்பார்த்துவிட்டு
சட்டகங்களால்
கதவுகளைத் தைக்கிறார்கள்!

காற்றில் மிதந்த வாசகமொன்று
வாசல் கதவைத்
தட்டிக் கொண்டேயிருக்கிறது!

"அச்சப்படாதீர்கள்! ஆனாலும்
மரணத்திற்கான
ஒத்திகையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!"

- முகமது பாட்சா*
30/06/2020

No comments:

Post a Comment

Popular Posts