Thursday, 19 December 2019

இறையழகன் 8,9

இறையழகன் 8

நுபுவத்தின் நூலிழையாய்
நூரே என்ற பேரொளி இழைந்தது
வஹபின் மகள் அழகு ஆமீனா முகத்தில்..

இறைவன் நாடினான்
இல்லறச் சொந்த இணையராக்க
அப்துல்லாஹ் என்ற அழகொளிச் சுடரை...

பெருமை கமழ்ந்தது
குறைஷியர்களின் குலப் பெருமைச் சுடர
முகம்மது எனும் திருமேனி
இத் திருக்குளத்தில்
நுபுவத்தின் உருவாய் பிறப்பதற்கு...

தாலாட்டுப் பாடினார் ஆமீனா
மணி வயிற்றில்
பூவாக அசையும் நபி முகம்மதிற்கு

கோலோச்சிய மூடத்தனங்கள்
சக்ராத்தில்
மெல்ல மேல் மூச்சு வாங்கத் தொடங்கின...

- முகமது பாட்சா*
08/11/2019


இறையழகன் 9

கருவின் திருவாக
நுவுவத்தின் நூரொளி உருவான போதே
கோலோச்சிய மூடத்தனங்கள்
சக்ராத்தில்
மெல்ல மேல் மூச்சு வாங்கத் தொடங்கின...

அண்ணலாரின் அருந்தேகம்
அன்னை ஆமீனாவின் தாய் கொடி நழுவி
பூமியைத் தொட்டு முத்தமிட்ட போது
ஷாமின் கோட்டைகள்
வெளிச்சத்தில் விளையாடின...

கொடுங்கோலன் கிஸ்ராவின் மாடங்கள்
அதிர்ந்து விழ
மஜூஸிகளின் நெருப்புக் குண்டம்
அணைந்து போனது...

அதிர்ந்த பூமியின் ஆட்டம் தாளாமல்
தலைக் குப்புற விழுந்தன
கடவுள்களாக ஒட்டிக் கொண்ட கற்கள்...

வறண்டிருந்த சமாவா ஓடையும்
வள்ளலாகி வழிந்தோட
மலர்ந்திருந்த இளம் புன்னகைக்கு
அபுதாலிப் இட்ட அழகிய பெயர்
முஹம்மது (ஸல்) எனும் திரு நூராகும்

- முகமது பாட்சா*
09/11/2019

No comments:

Post a Comment

Popular Posts