கடைக்காலில் தூரெடுத்து நகர்கிறது
எறும்புகளின் வீடு....
சேமிப்பேயில்லாமல் சிந்திக்கிடக்கின்றன
சருகுகள்....
பறக்கின்ற பட்டத்தின் நூல் கண்டு
கீழேயே உருண்டு கொண்டிருக்க ; கண்கள்
உயரத்தைப் பார்த்து
வியந்து கொண்டிருக்கின்றன...
இறப்பைப் பற்றியெழுதும் கவிதைகளில்
இலக்கணப்பிழை...
உடைந்த கால்களில்
ஒட்டவைத்த சட்டகம் அதிகாரம்....
பூட்டி வைத்தாலும் மிஞ்சும் பெயர் 'பிணம்!'
ஆசையென்பது
தேவையில்லாத கொழுப்பு
ஆட்டம் முடிந்ததும்
இடம் மாறிவிடுவதுதான் கிரீடம்!
- முகமது பாட்சா*
31/03/2020
அச்சப்படு, ஆதுரம் தவிர் -என்று
புதிய பாரதி
ஆத்திச்சூடி எழுதுகிறான்...
உசிரைப் பற்றிச் சிலரும்
பசியைப் பற்றிப் பலருமாகப்
பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்!
வானம் தன் முகத்தைச்
சுத்தமாகத் துடைத்து வைக்கிறது!
வார்த்தையில்லாதவன்
மூளையை
அடிக்கடிக் கழுவிக் கொள்கிறான்!
கழுவிக்கழுவி ஊற்றிய நீரையும்
அழுக்கைத் துடைத்து
அமுதமாய் அருந்துகிறது பூமி!
நான் என்பதின் மீது
ஏறி மிதித்துக் கொண்டு நிற்கிறது
கொரானா என்கிற அற்புதம்!
சமத்துவம் பேசுவதற்கு
எவனும் முன்வரவில்லை....
காத்திருக்கிறான் நுண்ணுயிர் கிரிடன்!
- முகமது பாட்சா*
29/03/2020
வெளிச்சமில்லாத அறைக்கு
உலகம் என்று பெயர் சூட்டுகிறார்கள்....
காற்றைத் துவைத்தும் வெளுக்கவில்லை!
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீரை நிரப்பிக்
கடலென்று நீந்துகின்ற மீன்கள்
இரைக்காகப் பிரார்த்தித்து அலைகின்றன....
தேவ வசனங்களில்
காரணம் தேடும் நாடோடிப்பாடகன்
இரவை வெளிச்சமென்று
இசைக் குறிப்பில் எழுதுகிறான்....
இல்லாத கண்களில் வெளிச்சமிருப்பதாக
வாசிக்கும் சூஃபி
கருவறைக்குத் திரும்ப அச்சப்படுகிறவன்
கஃபன் துணியோடு அலைவதாகச் சொல்கிறார்...
உடலைப் பூட்டி பதுக்குகிறார்கள்
சாவி கிருமிகளின்
கையில் பத்திரமாகவே இருக்கிறது....
பூத்து உதிரும் மலர்களில் சந்தூக்கின் வாசனை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
26/03/2020
(கஃபன் துணி - சவத்துணி
சந்தூக் - சவப்பெட்டி)
அச்சம் அகல கைகளை விரித்து
அணைத்துக் கொள்கிறது...
ஆறாமறிவுக்குள்
நுழைந்துவிட்ட அகன்ற கிருமிகள்
தனிமையைப் பற்றிய பாடம் எடுக்கின்றன...
ஓடியொளியும் விஞ்ஞானத்தால்
மரணத்தை வெல்ல முடியவில்லை....
அஞ்சானம்
ஆலய வாசல்களை மூடிவிட்டு
கர்பகிரகத்தை
வீட்டு மாடங்களில் இழுத்து வைத்து
வேண்டிக்கொள்கிறது...
தனிமையென்பது
அமைதிக்கான கருவி மட்டுமல்ல...
அச்சத்தின் ஒப்பனையும்தான் என்று பாடுகிறது
ஞாலமெங்கும் சுற்றி வரும் காற்று!
- முகமது பாட்சா*
22/03/2020
அசாதாரணக் கொண்டையிலும்
புன்னகையிலும்
புத்தனைத் தேடிக் களைத்துப் போகிறார்கள்...
போதி மரமென்பது
கள்ளிகள் சூழ்ந்த கருவேலமரத்தின்
அடி நிழலாகவும் இருக்கலாம்...
போதிகனின் வெள்ளுரு, காயங்களை விடுத்துத்
தப்பியோடிக் கொண்டேயிருக்க...
சிறகுகளை வெட்டிவிட்டு
பறவைகளைக்
கூண்டிலடைப்பவன் பைத்தியக்காரன்...
ஞானமென்பது
மூளைக்குள் உட்கார்ந்திருக்கும் முசுடு...
வெளியில் வா!
கொண்டையில்லாமல்
தோளில் அமர்ந்திருப்பவன் பெயரும் புத்தன்தான்!
- முகமது பாட்சா*
21/03/2020
வழிந்தோடும் வார்த்தைகளை
பெட்டிகளில் வைத்துப் பூட்டுகிறார்கள்...
போதிமரம்
அசைவதை நிறுத்திக் கொள்கிறது!
வாசற்கதவைத் தட்டும்
தேவதூதன்
பிரார்த்தனைகளைச் சேகரிக்க...
கடவுளுக்கும் காய்ச்சலென்று வதந்தி!
காற்று எப்போதும்
இருமிக் கொண்டேயிருக்கிறது...
சிறகுகளை
மடித்துவைத்துவிட்டு
கைகளைப் பலமாகத் தட்டுகிறார்கள்...
கதவுகள் தம்மை
தாழ்ப்பாள் இட்டுக் கொள்கின்றன...
இடுகாட்டான்
ஒப்பாரிப் பாட்டிற்கு மெட்டமைக்கிறான்
நான்கு கால் குதிரை
வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
20/03/2020
நீளம் அகலம் பார்த்து
வெட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்...
தேசம் என்பது
சுருங்கிக் கொண்டே போகிறது...
கடவுள்களின்
ஆலயங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன...
மனிதர்கள்
கைகளைப் பதுக்கிக் கொள்கிறார்கள்...
மூச்சுக் காற்றிற்கு
முகத்திரைகள் போட்டுத் திரிவதால்
முத்தங்கள்
அநாதைகளாகக் கிடக்கின்றன..
விபச்சாரிகளின்
கல்லறைகளில் ஒட்டிவைக்க வாசகமொன்று
தயாராகிறது...
'இவள் கரோனாவால் இறந்தவள்!'
- முகமது பாட்சா*
19/03/2020
துக்கங்களின் கரைசல்
நச்சுப்புகையென விரவிப் பரவ ...
கோமாளியின் முகம் தூக்கி நாடற்றவன்
பாடிக் கொண்டே திரிகிறான்!
தந்திர விரல்களின்
இழுப்பில் மின்னல் கீற்று ...
அரிதாரம் பூசி அலைகிறது தேசத்தின் துயரம்...
அரியணையில் ராஜபோகி அமர்ந்திருக்கக்
கட்டியச்சங்கீதம் பாடாதவன்
சாத்தானென்று
அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்றன...
உதிரப்பூக்களில் நடந்து போகும்
அதிகாரத்தின் போதைக்குத் தெரியவில்லை
அன்னையின்
சூதகப்பித்தமும் கலங்கிக் கலந்திருப்பது...
அட்சய ரேகையின் கோட்டில்
ஆழப்பிளந்து செல்லும்
வேர்களின் துயரக் கதையை எழுதுகிறவன்
நாடற்றவனின் நாலாம் தம்பி...
இறுகிக்கிடக்கிறது இவர்களின் வானம்...
பிரளயத்தின் பெருமூச்சோடு!
- முகமது பாட்சா*
13/03/2020
ஒரு கதைக்குள்
முடிவைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறேன்...
பாதைகள் குறுகலாக இருக்கின்றன!
வார்த்தைகள் வம்பிழுத்து நிலைகுலையச் செய்கிறது...
குறியீடுகள்
டேக் டைவர்சனில்
வாசித்தவிடத்தில் கொண்டு வந்து நிறுத்த...
முடியாத அந்தக் கதையை
மூடிவிட்டுப் படுக்கிறேன்....
என்னருகிலிருந்த அந்தப் புத்தகம்
மெதுவாக என்னை வாசிக்கத் தொடங்க...
நான் புரண்டு கொண்டிருக்கிறேன்!
- முகமது பாட்சா*
12/03/2020
வார்த்தைகளை வசதிக்கிழுத்த போது
சுலபமாக வருகிறது!
நாணில் வைத்து இழுத்து விடுகிறான்...
இடறல்களில்
அடிக்கடித் தப்பித்துக் கொள்கிறாள்....
உணவு மேசையை
முகர்ந்து கொண்டிருக்கும் பூனை
தூங்குவதாகப் பாவனையைச் செய்ய...
எலியாக மாறுகிறவள்
தந்திரங்களுக்குள் தப்புகிறாள்!
உருட்டப்பட்ட தாயத்தில்
உருவிவிட்ட சேலையின் நுனியில்....
வேடிக்கைக் கிழிசல்!
இரவைப் படுக்கையில் வைத்து நுகரும்
அவனிடம் மிருகத்தின் வாசனை....
- முகமது பாட்சா*
11/03/2020
பிரபஞ்சத்தின் கடைசி உதிர்தலாய்
ப்ரியத்தின் சொட்டு விழுந்து மறையலாம்...
மனிதனின் கடைசி மூச்சு
நேசத்தின் காற்றாக இருக்கலாம்...
அழுகையின் கரைசலில்
அன்பின் உப்பு மிகுத்து வழிகிறது...
கருணையை
இதயத்திற்குக் கடத்துகின்றன கண்கள்!
நிழல் இருட்டல்ல வெளிச்சம்...
- முகமது பாட்சா*
11/03/2020
&
தொடர்த் தூறலில் நனையும்
செம்போத்துகள்
கூடுகள் கரையாமலிருக்க வேண்டுகின்றன...
அசைக்கும் காற்று
சூறாவளியாகும் சூட்சமத்தை
இலைகள் மரித்து எழுதிக் கொண்டிருக்க...
மூங்கில் புதரின்விசை
காற்றிடம் தருக்கம் செய்கின்றது...
ஆரோகணத்தின் எல்லை மீறல்
மேகங்களைக்
கிழித்துச் செய்கிறது நெருப்பு யுத்தம்...
பசி! பசி! பசி! வியாபிக்க...
காமனரங்கன்
சிருங்காரம் சொட்ட எழுதுகிற கவிதையில்
செம்போத்தின் அலகுகளையுரசி
விடிகிறது பகல்!
கலைந்து கிடக்கின்றன கூடுகள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
09/03/2020
&
ஆதியின் விலாவெலும்பிற்கு
அன்னை என்று பெயர் சூட்டுகிறோம்...
காலத்தின் வீரத்தைக்
கைப்பெட்டிக்குள் அடைத்துச் சுவைக்கிறது
ஆண்மையின் குறியீடுகள்...
நிழல் பெயர் சூட்டி
நீள்கின்றன பெண் தெய்வதங்கள்...
கர்பகிரகத்தை விட்டு அகலாதவள் அன்னை!
அலங்கார வார்த்தைகளால்
நெய் அபிஷேகம்...
தீச்சூடிய சிறை வளாகத்திற்குள்
பரந்துவரும் வானம் விரிந்திருப்பதாக
புனைச்சூடல்கள்...
பூசணிப் பூக்களுக்கு எப்போதும்
மார்கழியில் மட்டும் தான் திருவிழா நடக்கிறது...
சாணியில் சொருகிவைத்து!
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/03/2020
வைரலாகும் வைரசை
ஆளுக்கொருவராகத் தொற்றிக் கொள்கிறார்கள்
வைரசிற்கு இப்போது
நமஸ்தே என்று பெயரிடப்பட்டுள்ளது!
வைரஸ் ஊடகங்களுக்குள் ஊடுருவிச் செய்திகள்
தும்மிக் கொண்டேயிருக்கின்றன!
இப்போதெல்லாம்
கைகளை அழுந்தவே துடைத்துக் கொள்கிறார்கள்...
லஞ்சம் கொடுக்கிறவன் கேட்கிறான்
பணத்தாள்களில் வைரஸ் ஒட்டியிருக்காதா?
தூய்மைக் கரைசலைப் போட்டு
வானத்தை எப்படித் துடைப்பதென்று
ஆராய்ச்சியும் நடக்கிறது...
பொருளாதாரத்தின் மீது நோய்த் தொற்றைப்
பூசி வைத்த வைரஸ்கள்
ஆளுக்கொரு முகமூடிகளுடன்
ஆடம்பரமாகவே உலா வருகின்றன...
பொதுவில் தீங்கிழைக்கின்ற வைரஸ்களை
தீயிட்டுக் கொளுத்தி அழிப்பதுதான்
தீர்வு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!
- முகமது பாட்சா*
07/03/2020
இரவு முழுவதும்
இதயத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்
பகல் என்னை விழுங்கியிருந்தது...
படகோட்டியின் பாடல் போல்
காற்றில் மிதக்கிறேன்
கரை சேர்க்க எப்போதுதான் வருவாய்?
பிச்சைக்காரனைப் போல்
விழிகள் அங்குமிங்கும் அலைகின்றன...
யாசகன் வேறு என்னதான் செய்வான்?
பறவையின் கூட்டில்
சிறு புல்லென இருக்கிறேன்...
என்னை அடைகாப்பதும் நீயல்லவா!
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/03/2020
கனவின்
சிறுதுளியைக் கலக்கி
எல்லோரும்
அருந்திக் கொண்டிருக்கிறார்கள்...
கனவு என்பதே
வெறும் கனவுதானென்பது
கனவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...
வார்த்தைகளில் மிளிரும் கனவுகள்
வாசலில் கூட
கோலங்களாகக் காட்சியாவதில்லை!
இரவைப் பிடித்துக் கொண்டு
எழுகின்ற கனவுகள்
விடிந்ததும் முகம் கழுவிக்கொள்கின்றன!
பறவைகள்
கனவுகளை நம்புவதில்லை..
வீரனின் கனவு
ஆயுதங்களில் ஒளிந்திருக்கிறது...
கோழையின் கனவு
மரணத்தைப் பிடித்துக் கொண்டே
பயத்துடன் விடிகிறது!
வதைப்பிரியர்களின் கனவில்
மிருகங்களின் நாக்குகள்
வளர்ந்து கொண்டேயிருக்கின்றன...
ஏழைகளின் கனவில்
உலைச்சட்டிகள்
காலியாகவே இருக்கின்றன!
மரணத்தின் கனவுதான்
வாழ்க்கையென்பது
இங்கு யாருக்கு எப்போது விளங்கும்?
- நட்புடன்.....முகமது பாட்சா*
05/03/2020
&
தம்புருவை இழுத்துவிட்ட
மோதிர விரலிலிருந்து பக்கயிசை
பரவலாகி இரவை உசுப்புகிறது.
ஓடையைப் புரட்டி,
பக்கவாட்டிலிழையவிட்ட பேரண்டம்
பெரும் மூச்சினை நெய்ய
வெப்பக்காற்றில் வெந்து குழைகிறது காடு!
ஆதுரம் அளவளாவி அகன்றொழுக...
அங்கணம் அனலொழுக்கி
செம்மதுர பூங்காற்றைத் தேக்கிவைக்க ...
பங்கயம் ஒற்றைக்கால் நுழைத்துக்
காத்திருக்கும் விழிக்குள்
நழுவும் நரல்கயலை நாசூக்காய் கவ்வ ...
அடங்காப்பசி
இரு மேருகளிலேறி இறங்கியேறித் தவிக்கும்
தவிப்பில் ஆழிச் சூழ் அமிழ்தம் முழுக்கி
இரவும் பகலாகும் போதில்
இணைக்குருவிகள்
அலகுகள் உரசும் பேரழகை
அய்யோ என்று வியக்கிறது தமிழ் !
- நட்புடன்.....முகமது பாட்சா*
04/03/2020
மனதை மிதித்துக் கொண்டோடும்
குளம்பொலிகளின் சப்தத்தில்
சிதைந்து கிடக்கும்
சதைத் துண்டங்களைக்
களவாடிச் செல்லும் கழுகுகளின்
நகக்கூர்மைகளில் சொட்டும்
உதிரத் துளிகளை நக்கும் நாய்களின்
நாக்குச் செவ்வரும்புகளைத்
தடவிக் கொடுக்கும் சொல்லரும்புகளை
பாரிஜாதம் என்று சூடிக்கொண்டு
கால்களை விரித்தாடும் அகோரத்திற்கு
அற்புத நடனம் என்று வியப்போரின்
இதழ்க்கடைகளிலும் வழிகிறது
அழுகியப் பிணங்களின் சீழ்வழிசல்!
- முகமது பாட்சா
01/03/2020
எறும்புகளின் வீடு....
சேமிப்பேயில்லாமல் சிந்திக்கிடக்கின்றன
சருகுகள்....
பறக்கின்ற பட்டத்தின் நூல் கண்டு
கீழேயே உருண்டு கொண்டிருக்க ; கண்கள்
உயரத்தைப் பார்த்து
வியந்து கொண்டிருக்கின்றன...
இறப்பைப் பற்றியெழுதும் கவிதைகளில்
இலக்கணப்பிழை...
உடைந்த கால்களில்
ஒட்டவைத்த சட்டகம் அதிகாரம்....
பூட்டி வைத்தாலும் மிஞ்சும் பெயர் 'பிணம்!'
ஆசையென்பது
தேவையில்லாத கொழுப்பு
ஆட்டம் முடிந்ததும்
இடம் மாறிவிடுவதுதான் கிரீடம்!
- முகமது பாட்சா*
31/03/2020
அச்சப்படு, ஆதுரம் தவிர் -என்று
புதிய பாரதி
ஆத்திச்சூடி எழுதுகிறான்...
உசிரைப் பற்றிச் சிலரும்
பசியைப் பற்றிப் பலருமாகப்
பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்!
வானம் தன் முகத்தைச்
சுத்தமாகத் துடைத்து வைக்கிறது!
வார்த்தையில்லாதவன்
மூளையை
அடிக்கடிக் கழுவிக் கொள்கிறான்!
கழுவிக்கழுவி ஊற்றிய நீரையும்
அழுக்கைத் துடைத்து
அமுதமாய் அருந்துகிறது பூமி!
நான் என்பதின் மீது
ஏறி மிதித்துக் கொண்டு நிற்கிறது
கொரானா என்கிற அற்புதம்!
சமத்துவம் பேசுவதற்கு
எவனும் முன்வரவில்லை....
காத்திருக்கிறான் நுண்ணுயிர் கிரிடன்!
- முகமது பாட்சா*
29/03/2020
வெளிச்சமில்லாத அறைக்கு
உலகம் என்று பெயர் சூட்டுகிறார்கள்....
காற்றைத் துவைத்தும் வெளுக்கவில்லை!
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீரை நிரப்பிக்
கடலென்று நீந்துகின்ற மீன்கள்
இரைக்காகப் பிரார்த்தித்து அலைகின்றன....
தேவ வசனங்களில்
காரணம் தேடும் நாடோடிப்பாடகன்
இரவை வெளிச்சமென்று
இசைக் குறிப்பில் எழுதுகிறான்....
இல்லாத கண்களில் வெளிச்சமிருப்பதாக
வாசிக்கும் சூஃபி
கருவறைக்குத் திரும்ப அச்சப்படுகிறவன்
கஃபன் துணியோடு அலைவதாகச் சொல்கிறார்...
உடலைப் பூட்டி பதுக்குகிறார்கள்
சாவி கிருமிகளின்
கையில் பத்திரமாகவே இருக்கிறது....
பூத்து உதிரும் மலர்களில் சந்தூக்கின் வாசனை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
26/03/2020
(கஃபன் துணி - சவத்துணி
சந்தூக் - சவப்பெட்டி)
அச்சம் அகல கைகளை விரித்து
அணைத்துக் கொள்கிறது...
ஆறாமறிவுக்குள்
நுழைந்துவிட்ட அகன்ற கிருமிகள்
தனிமையைப் பற்றிய பாடம் எடுக்கின்றன...
ஓடியொளியும் விஞ்ஞானத்தால்
மரணத்தை வெல்ல முடியவில்லை....
அஞ்சானம்
ஆலய வாசல்களை மூடிவிட்டு
கர்பகிரகத்தை
வீட்டு மாடங்களில் இழுத்து வைத்து
வேண்டிக்கொள்கிறது...
தனிமையென்பது
அமைதிக்கான கருவி மட்டுமல்ல...
அச்சத்தின் ஒப்பனையும்தான் என்று பாடுகிறது
ஞாலமெங்கும் சுற்றி வரும் காற்று!
- முகமது பாட்சா*
22/03/2020
அசாதாரணக் கொண்டையிலும்
புன்னகையிலும்
புத்தனைத் தேடிக் களைத்துப் போகிறார்கள்...
போதி மரமென்பது
கள்ளிகள் சூழ்ந்த கருவேலமரத்தின்
அடி நிழலாகவும் இருக்கலாம்...
போதிகனின் வெள்ளுரு, காயங்களை விடுத்துத்
தப்பியோடிக் கொண்டேயிருக்க...
சிறகுகளை வெட்டிவிட்டு
பறவைகளைக்
கூண்டிலடைப்பவன் பைத்தியக்காரன்...
ஞானமென்பது
மூளைக்குள் உட்கார்ந்திருக்கும் முசுடு...
வெளியில் வா!
கொண்டையில்லாமல்
தோளில் அமர்ந்திருப்பவன் பெயரும் புத்தன்தான்!
- முகமது பாட்சா*
21/03/2020
வழிந்தோடும் வார்த்தைகளை
பெட்டிகளில் வைத்துப் பூட்டுகிறார்கள்...
போதிமரம்
அசைவதை நிறுத்திக் கொள்கிறது!
வாசற்கதவைத் தட்டும்
தேவதூதன்
பிரார்த்தனைகளைச் சேகரிக்க...
கடவுளுக்கும் காய்ச்சலென்று வதந்தி!
காற்று எப்போதும்
இருமிக் கொண்டேயிருக்கிறது...
சிறகுகளை
மடித்துவைத்துவிட்டு
கைகளைப் பலமாகத் தட்டுகிறார்கள்...
கதவுகள் தம்மை
தாழ்ப்பாள் இட்டுக் கொள்கின்றன...
இடுகாட்டான்
ஒப்பாரிப் பாட்டிற்கு மெட்டமைக்கிறான்
நான்கு கால் குதிரை
வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
20/03/2020
நீளம் அகலம் பார்த்து
வெட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்...
தேசம் என்பது
சுருங்கிக் கொண்டே போகிறது...
கடவுள்களின்
ஆலயங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன...
மனிதர்கள்
கைகளைப் பதுக்கிக் கொள்கிறார்கள்...
மூச்சுக் காற்றிற்கு
முகத்திரைகள் போட்டுத் திரிவதால்
முத்தங்கள்
அநாதைகளாகக் கிடக்கின்றன..
விபச்சாரிகளின்
கல்லறைகளில் ஒட்டிவைக்க வாசகமொன்று
தயாராகிறது...
'இவள் கரோனாவால் இறந்தவள்!'
- முகமது பாட்சா*
19/03/2020
துக்கங்களின் கரைசல்
நச்சுப்புகையென விரவிப் பரவ ...
கோமாளியின் முகம் தூக்கி நாடற்றவன்
பாடிக் கொண்டே திரிகிறான்!
தந்திர விரல்களின்
இழுப்பில் மின்னல் கீற்று ...
அரிதாரம் பூசி அலைகிறது தேசத்தின் துயரம்...
அரியணையில் ராஜபோகி அமர்ந்திருக்கக்
கட்டியச்சங்கீதம் பாடாதவன்
சாத்தானென்று
அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்றன...
உதிரப்பூக்களில் நடந்து போகும்
அதிகாரத்தின் போதைக்குத் தெரியவில்லை
அன்னையின்
சூதகப்பித்தமும் கலங்கிக் கலந்திருப்பது...
அட்சய ரேகையின் கோட்டில்
ஆழப்பிளந்து செல்லும்
வேர்களின் துயரக் கதையை எழுதுகிறவன்
நாடற்றவனின் நாலாம் தம்பி...
இறுகிக்கிடக்கிறது இவர்களின் வானம்...
பிரளயத்தின் பெருமூச்சோடு!
- முகமது பாட்சா*
13/03/2020
ஒரு கதைக்குள்
முடிவைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறேன்...
பாதைகள் குறுகலாக இருக்கின்றன!
வார்த்தைகள் வம்பிழுத்து நிலைகுலையச் செய்கிறது...
குறியீடுகள்
டேக் டைவர்சனில்
வாசித்தவிடத்தில் கொண்டு வந்து நிறுத்த...
முடியாத அந்தக் கதையை
மூடிவிட்டுப் படுக்கிறேன்....
என்னருகிலிருந்த அந்தப் புத்தகம்
மெதுவாக என்னை வாசிக்கத் தொடங்க...
நான் புரண்டு கொண்டிருக்கிறேன்!
- முகமது பாட்சா*
12/03/2020
வார்த்தைகளை வசதிக்கிழுத்த போது
சுலபமாக வருகிறது!
நாணில் வைத்து இழுத்து விடுகிறான்...
இடறல்களில்
அடிக்கடித் தப்பித்துக் கொள்கிறாள்....
உணவு மேசையை
முகர்ந்து கொண்டிருக்கும் பூனை
தூங்குவதாகப் பாவனையைச் செய்ய...
எலியாக மாறுகிறவள்
தந்திரங்களுக்குள் தப்புகிறாள்!
உருட்டப்பட்ட தாயத்தில்
உருவிவிட்ட சேலையின் நுனியில்....
வேடிக்கைக் கிழிசல்!
இரவைப் படுக்கையில் வைத்து நுகரும்
அவனிடம் மிருகத்தின் வாசனை....
- முகமது பாட்சா*
11/03/2020
பிரபஞ்சத்தின் கடைசி உதிர்தலாய்
ப்ரியத்தின் சொட்டு விழுந்து மறையலாம்...
மனிதனின் கடைசி மூச்சு
நேசத்தின் காற்றாக இருக்கலாம்...
அழுகையின் கரைசலில்
அன்பின் உப்பு மிகுத்து வழிகிறது...
கருணையை
இதயத்திற்குக் கடத்துகின்றன கண்கள்!
நிழல் இருட்டல்ல வெளிச்சம்...
- முகமது பாட்சா*
11/03/2020
&
தொடர்த் தூறலில் நனையும்
செம்போத்துகள்
கூடுகள் கரையாமலிருக்க வேண்டுகின்றன...
அசைக்கும் காற்று
சூறாவளியாகும் சூட்சமத்தை
இலைகள் மரித்து எழுதிக் கொண்டிருக்க...
மூங்கில் புதரின்விசை
காற்றிடம் தருக்கம் செய்கின்றது...
ஆரோகணத்தின் எல்லை மீறல்
மேகங்களைக்
கிழித்துச் செய்கிறது நெருப்பு யுத்தம்...
பசி! பசி! பசி! வியாபிக்க...
காமனரங்கன்
சிருங்காரம் சொட்ட எழுதுகிற கவிதையில்
செம்போத்தின் அலகுகளையுரசி
விடிகிறது பகல்!
கலைந்து கிடக்கின்றன கூடுகள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
09/03/2020
&
ஆதியின் விலாவெலும்பிற்கு
அன்னை என்று பெயர் சூட்டுகிறோம்...
காலத்தின் வீரத்தைக்
கைப்பெட்டிக்குள் அடைத்துச் சுவைக்கிறது
ஆண்மையின் குறியீடுகள்...
நிழல் பெயர் சூட்டி
நீள்கின்றன பெண் தெய்வதங்கள்...
கர்பகிரகத்தை விட்டு அகலாதவள் அன்னை!
அலங்கார வார்த்தைகளால்
நெய் அபிஷேகம்...
தீச்சூடிய சிறை வளாகத்திற்குள்
பரந்துவரும் வானம் விரிந்திருப்பதாக
புனைச்சூடல்கள்...
பூசணிப் பூக்களுக்கு எப்போதும்
மார்கழியில் மட்டும் தான் திருவிழா நடக்கிறது...
சாணியில் சொருகிவைத்து!
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/03/2020
வைரலாகும் வைரசை
ஆளுக்கொருவராகத் தொற்றிக் கொள்கிறார்கள்
வைரசிற்கு இப்போது
நமஸ்தே என்று பெயரிடப்பட்டுள்ளது!
வைரஸ் ஊடகங்களுக்குள் ஊடுருவிச் செய்திகள்
தும்மிக் கொண்டேயிருக்கின்றன!
இப்போதெல்லாம்
கைகளை அழுந்தவே துடைத்துக் கொள்கிறார்கள்...
லஞ்சம் கொடுக்கிறவன் கேட்கிறான்
பணத்தாள்களில் வைரஸ் ஒட்டியிருக்காதா?
தூய்மைக் கரைசலைப் போட்டு
வானத்தை எப்படித் துடைப்பதென்று
ஆராய்ச்சியும் நடக்கிறது...
பொருளாதாரத்தின் மீது நோய்த் தொற்றைப்
பூசி வைத்த வைரஸ்கள்
ஆளுக்கொரு முகமூடிகளுடன்
ஆடம்பரமாகவே உலா வருகின்றன...
பொதுவில் தீங்கிழைக்கின்ற வைரஸ்களை
தீயிட்டுக் கொளுத்தி அழிப்பதுதான்
தீர்வு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!
- முகமது பாட்சா*
07/03/2020
இரவு முழுவதும்
இதயத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்
பகல் என்னை விழுங்கியிருந்தது...
படகோட்டியின் பாடல் போல்
காற்றில் மிதக்கிறேன்
கரை சேர்க்க எப்போதுதான் வருவாய்?
பிச்சைக்காரனைப் போல்
விழிகள் அங்குமிங்கும் அலைகின்றன...
யாசகன் வேறு என்னதான் செய்வான்?
பறவையின் கூட்டில்
சிறு புல்லென இருக்கிறேன்...
என்னை அடைகாப்பதும் நீயல்லவா!
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/03/2020
கனவின்
சிறுதுளியைக் கலக்கி
எல்லோரும்
அருந்திக் கொண்டிருக்கிறார்கள்...
கனவு என்பதே
வெறும் கனவுதானென்பது
கனவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...
வார்த்தைகளில் மிளிரும் கனவுகள்
வாசலில் கூட
கோலங்களாகக் காட்சியாவதில்லை!
இரவைப் பிடித்துக் கொண்டு
எழுகின்ற கனவுகள்
விடிந்ததும் முகம் கழுவிக்கொள்கின்றன!
பறவைகள்
கனவுகளை நம்புவதில்லை..
வீரனின் கனவு
ஆயுதங்களில் ஒளிந்திருக்கிறது...
கோழையின் கனவு
மரணத்தைப் பிடித்துக் கொண்டே
பயத்துடன் விடிகிறது!
வதைப்பிரியர்களின் கனவில்
மிருகங்களின் நாக்குகள்
வளர்ந்து கொண்டேயிருக்கின்றன...
ஏழைகளின் கனவில்
உலைச்சட்டிகள்
காலியாகவே இருக்கின்றன!
மரணத்தின் கனவுதான்
வாழ்க்கையென்பது
இங்கு யாருக்கு எப்போது விளங்கும்?
- நட்புடன்.....முகமது பாட்சா*
05/03/2020
&
தம்புருவை இழுத்துவிட்ட
மோதிர விரலிலிருந்து பக்கயிசை
பரவலாகி இரவை உசுப்புகிறது.
ஓடையைப் புரட்டி,
பக்கவாட்டிலிழையவிட்ட பேரண்டம்
பெரும் மூச்சினை நெய்ய
வெப்பக்காற்றில் வெந்து குழைகிறது காடு!
ஆதுரம் அளவளாவி அகன்றொழுக...
அங்கணம் அனலொழுக்கி
செம்மதுர பூங்காற்றைத் தேக்கிவைக்க ...
பங்கயம் ஒற்றைக்கால் நுழைத்துக்
காத்திருக்கும் விழிக்குள்
நழுவும் நரல்கயலை நாசூக்காய் கவ்வ ...
அடங்காப்பசி
இரு மேருகளிலேறி இறங்கியேறித் தவிக்கும்
தவிப்பில் ஆழிச் சூழ் அமிழ்தம் முழுக்கி
இரவும் பகலாகும் போதில்
இணைக்குருவிகள்
அலகுகள் உரசும் பேரழகை
அய்யோ என்று வியக்கிறது தமிழ் !
- நட்புடன்.....முகமது பாட்சா*
04/03/2020
மனதை மிதித்துக் கொண்டோடும்
குளம்பொலிகளின் சப்தத்தில்
சிதைந்து கிடக்கும்
சதைத் துண்டங்களைக்
களவாடிச் செல்லும் கழுகுகளின்
நகக்கூர்மைகளில் சொட்டும்
உதிரத் துளிகளை நக்கும் நாய்களின்
நாக்குச் செவ்வரும்புகளைத்
தடவிக் கொடுக்கும் சொல்லரும்புகளை
பாரிஜாதம் என்று சூடிக்கொண்டு
கால்களை விரித்தாடும் அகோரத்திற்கு
அற்புத நடனம் என்று வியப்போரின்
இதழ்க்கடைகளிலும் வழிகிறது
அழுகியப் பிணங்களின் சீழ்வழிசல்!
- முகமது பாட்சா
01/03/2020
No comments:
Post a Comment