Tuesday, 23 June 2020

விசாரணை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சிதைந்தவுடலை
குப்பைக்கூடையில் கட்டிய பிறகு
ஷாம்பூ போட்டுக் குளித்த
வெட்டரிவாளிடம் விசாரணை நடக்கிறது!
விரட்டிவெட்டியப்
பதிவுகள் திரைக்காட்சியின் பிழை!
செத்துப்போனவன்
விசாரணைக்கு வந்தானா?
'இல்லைங்க மை லார்ட்!'
'சாட்சிகள் யாருப்பா?'
'அவர்கள்,
அவர்கள் தலையை எடுத்துக் கொண்டு
போய்விட்டார்கள் எஜமான்!'
'வெட்டரிவா! நீதான் செஞ்சியா?'
'நான் அப்பாவி எஜமான்!'
'சரி சரி அழுவாத!
செத்துப்போனவன் என்ன ஜாதி?'

- முகமது பாட்சா*
23/06/2020

No comments:

Post a Comment

Popular Posts