Saturday, 20 June 2020

அப்பா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், குளோஸ் அப், வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

அப்பா மட்டுமே
ஆகாயத்தைக் கட்டியிழுப்பாரெனக்
கற்பனையில்
சேர்த்துக் கொள்கிறான்!

அப்பாவுடன்
நடந்து செல்லும் வீதிகளில்
அவன்
அதிகாரமிக்க அரசன்!

அப்பா
அபூர்வமாகச் சிரிக்கும் போது
ஆயிரம் அம்மாக்கள்
அவனோடு விளையாடுகிறார்கள்!

அப்பாக்களால் மட்டும்தான்
யானையாகவும்
குதிரையாகவும் மாறமுடிகிறது!

அப்பாவின் முத்தம்
ஆகாயத்தின் அழகிய ஒத்தடம்...
யாருக்கும்
அதைக் கொடுக்க முடியாது!

அப்பா
நண்பனாகவும் மாறிப் போகிறார்...
அம்மா
எப்போதுமே அம்மா மட்டும்தான்!

- முகமது பாட்சா*
20/06/2020

No comments:

Post a Comment

Popular Posts