
ஒப்பனைக்குள்
முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள்
புன்னகையை
ஒட்டிக் கொள்வது மிகவும் அவசரம்!
கைகளையாட்டி
கால்களைத் தூக்கியாடும் சைகைக் கூத்தில்
விசும்பும் கண்களை
விளக்காகவே எரிய விடுங்கள்!
நிழலில்லாத
மரத்தின் கீழ் நிம்மதியாக உறங்கட்டும்
கனவில்லாத
அர்த்த நாரீஸ்வரனின் பாடல்கள்!
- முகமது பாட்சா*
22/06/2020
No comments:
Post a Comment