
'நீ தீவிரவாதியா?'
'இல்லை,
நானொரு கவிஞன்'
'அப்படியென்றால் நீ தீவிரவாதிதான்!'
***
'இது
உன் கவிதைதானே?'
'இல்லை
இதையெழுதியவன்
அன்றே இறந்துவிட்டான்'
***
'நிலவைப் பற்றி
ஒரு கவிதையை எழுது'
'நீ சொன்னதே ஒரு கவிதைதான்!'
***
'கவிதையின்
இலக்கணம் என்ன?'
'எழுத்தும் வார்த்தைகளும்!'
***
பின்குறிப்பு :
இறந்துவிட்ட கவிஞனை
கவிதைகள்தான்
அடக்கம் செய்கின்றன!
கல்லறை வாசகத்திற்கு
மட்டும் ஏன் பஞ்சம்?
- முகமது பாட்சா*
24/06/2020
No comments:
Post a Comment