#திக்ர்6
கனவில் நடப்பதைப் போலவே
எல்லோரும் நடக்கிறார்கள்...
ஒவ்வொருவர் கனவிலும் ஒவ்வொரு
பிசாசு வந்து மிரட்டுகிறது...
சாலைகளை அவசரம் அவசரமாக
ஆக்கிரமிக்கிறார்கள்
வீடுகளை அதே அவசரத்தில் பூட்டியும்
கொள்கிறார்கள்!
உறவுக்காரப் பெண்ணொருத்தி
தன் மீது பிசாசு ஏறி விட்டதாக அரற்றிக்
கொள்கிறாள்...
முஸல்லாக்களில் தொழுகையை
விரித்து வைத்தவர்கள்....
அச்சத்தை
திக்ருகளாக உருட்டிக் கொண்டிருக்க...
பள்ளிவாசல்களின் அதான்
தனித்தனியாக அழைக்கிறது...
வீடுகளில்
சுபுஹூத் தொழுகை முழுமையாக
நிறைவடைய...
அலைப்பேசியில் நுழைகிறேன்
அசரத் அவர்கள்
உகது போரைப் பற்றிப் பயான் செய்கிறார்!
- முகமது பாட்சா*
30/04/2020
#திக்ர்5
ஒரு கனவைப் போல்
கலைந்துவிடுகிறது வாழ்க்கை...
இழைகளைப் பிரித்துத்
துணிகளை நெய்வதே வேலையாகிப்
போனது....
உடுத்தும் போது அவை கந்தல்!
இஷாவிற்கும்
பஜ்ருவிற்குமிடையில் நிலவும் உறக்கம்
தொழுகையின் திக்ரில் விழித்து...
மக்ரீப் வரைக்கும்
வனாந்தங்கரங்களில் அலைகிறது...
எனது என்ற கோட்பாடு
யார் போட்ட கோடுகளாக இருக்க
முடியும்?
மண்ணறையின் கேள்வியில்
பதில் சொல்லவியலா எலும்புக் கூடுகள்
புதைந்து கிடக்கின்றன!
காதலைத் தூக்கித் திரிகிறவன் இங்கு
கம்பளியாடைக்காரன்...
கைகளை
மடித்து வைத்துக் கொள்கிறான்
கோடீஸ்வரன்!
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்கள்
பறக்கின்ற வரைதான்...
'பகட்டு' இறுதி உரையில் யாருக்கும்
இடம் பெறுவதில்லை...
தொழுகைகளைச்
சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்...
பசித்த வயிறுகள் குடலையுருட்டி
தினமும் திக்ர் ஓதிக் கொண்டிருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
29/04/2020
#திக்ர்4
இரவின் திக்ர்
மௌனம் பூசி வளர்கிறது...
தஸ்பி விரல்கள் இறைஞ்சுகின்றன
மரணத்தின் நூலிழையில்
தொங்குகின்ற சுவனத்து வாசலை!
இளம் பிறை வளர்ந்து தேய்வதில்
பௌர்ணமி மட்டும் பிரகாசம்!
அமாவாசை இருட்டல்ல...
புலன்களுக்குப் புலப்படாத மறுமையின்
இளம் புன்னகை!
தொழுகை விரிப்பில் ஒட்டிக் கொண்ட
சுஜூதுத் தழும்புகளை
சாட்சிக்காக அழைக்கும் போது
பசித்த வயிறுகளின் சாட்சிகளே முதன்மையாகும்!
விரல் ரேகைகளில் ஒட்டியிருக்கும்
கண்கள் கூட
விரிவாகப் பேசலாம்....
அழுகை சுய இரக்கத்திற்கானதல்ல...
அடுத்தவருக்கான
அய்யோ என்பதும் இங்கே அகராதியில்
சேர்க்கப்படும்...
ஜக்காத்தும்
திக்ர் என்றே உணருங்கள் தோழர்காள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
28/04/2020
#திக்ர்3
கைகளை மடக்கிப் படுத்திருக்கும் பசியை
கண்களால் முகர்ந்து
கால்களால் நக்கிப் பார்த்துவிட்டு நகர்கிறது
கொடிய மணித்துளிகள்!
யாசகனின் குரல்
இழிவென்பவனின் இதயத்தில் நிறைகிறது
நோய்களின் அதிராட்டம்!
கதவடைக்கும் அரசனுக்கு
ஏழைகளின் வயிறடைக்கத் தெரியவில்லை...
வாயடைக்கச் சொல்லி
வார்த்தைகளை ஏவுகிறான்!
உல்லாச உலகமென்று
சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும்
சுய மோகிகளின் கதவுகள் இரும்பாலானவை!
வசனத்தின் வானத்தில்
விவாதம் நெய்கின்ற நெசவாளிகளே...
உங்களாடைகள்
எப்போதும் கந்தலாகவே இருக்கின்றன!
துவாக்களின் தொழுகை விரிப்புகளில்
சுயம் பூசாதீர்கள்...
சாயம் விரைவில் போய்விடும்!
திக்ரு
பசியின் வயிற்றிலாறி தாகம் தீர்க்கும்
கண்ணீர்த் துளிகள்!
- நட்புடன்....முகமது பாட்சா*
27/04/2020
#திக்ர்2
கொதுவையும்
உதாரணம் காட்டத் தயங்காதவன்
ஒட்டகத்தைக் கட்டிப் போட்ட பின்பே
காவல் தேட அழைக்கிறான்
ஐந்தறிவுகள்
வனத்திற்காகப் போரிடும் வேளையில்
ஆறாம் அறிவிற்குள் ஆடுகின்ற ஆட்டம்
அகிலம் தனதென்று மாய்கிறது
ஓரறிவு நுண்ணியன்
பேரழிவின் பெரும் அரசனாய் உருமாற....
வறியவன்
பசிக்காக மட்டுமே சமர் செய்வது
வாழ்வியலின் கோளாறு!
ஏந்துகின்ற கைகள் எல்லாம்
இளம் பிறையின் தோற்றங்களே!
கொடும் காலமென்பது
கொடைக்காரர்களின் சோதனைக் காலமும்...
மறைவசனங்கள்
வாசிப்பிற்கு மட்டும் வடிவானதில்லை...
மறுமைக்கான எச்சரிப்பும்!
நேசிப்பை மிகுத்துங்கள் தோழர்களே....
சுவனமென்பது
ஏழைகளின் சிரிப்பிலும் அடங்கியிருக்கும்!
- நட்புடன்.... முகமது பாட்சா*
25/04/2020
#திக்ர்1
சல்லடையிட்ட வானத்தின்
இளம்பிறை
சற்றுக் கூடுதலாய் வளைந்திருக்கிறது....
அதானின் அழைப்பை
அலைப்பேசி நிறைத்தழைக்க...
ஒலுவெடுத்து உள்ளே நுழைந்ததும்
அறையே
பள்ளிவாசலாய் மாறிவிட....
இகாமத்தின் பின்னே தொடரும் தொழுகையில்
நிறைகிறது மலக்குகளின் நெருக்கம்...
சலாம் முடித்து
இருப்பைவிட்டு எழுந்த பிறகும்
வீடெங்கும் நிறைந்திருக்கிறது புறாக்களின்
சிறகிசைகள்....
ரமலான் அநாதியல்ல....
வீடுகளையே பள்ளிகளாக்கி நிறைகிறது...
வெளியில் வந்து பாருங்கள்
துவாக்கள் நட்சத்திரங்களாய் மிளிர்ந்து
காஃபாவை
வலமிட்டு நிறைவதைக் காணலாம்!
- நட்புடன் ..... முகமது பாட்சா*
24/04/2020
#ரமலான்_திக்ர்1
யாரை நீ துரோகி என்கிறாய்?
அவரவர் நிழலையே
அவரவர்கள் அடித்து விரட்டுகிறார்கள்!
கதவுகளைத் தாழ்ப்பாள் இட்டுப் பூட்டிக் கொண்ட
அகபிரும்மம்
மனிதம் தேடியலையும் வீதியில்
பசித்த நாய்க்கு
சோறிடுபவனைச் சிலுவையில் தேடுகிறது...
தொட்டில் மீனுக்கு உணவிடுகிறவன்
கடவுளென்பது மாய உச்சம்!
சுயன் உதிரக்கூட்டின் உழுத்தப்புழுக்கள்
கல்லறை ஞாயத்தைக் கரைக்க
பிரம்மக்கூடு தேகமென்பது பொய்யாகிறது!
- முகமது பாட்சா*
21/04/2020
சின்ன வளையத்திற்குள் குடும்பமே
நுழைந்து வர....
குட்டிக்கரணம் போட்ட மகள்
நீண்டக்கழையில் நிராதரவாய்த் தொங்குகிறாள்...
கம்பியில் ஏறிய மனைவி
கர்ணம் தப்பாமல் நடந்தாடியிறங்க...
மாங்கொட்டையை மூடி
மாஞ்செடியொன்றையும் வரவழைத்தவன்
ஏந்தி நின்ற தட்டில்
கைத்தட்டல்கள் சிதறிக் கிடக்கின்றன!
- முகமது பாட்சா*
'என் தாய் மண்' என்று நடக்கும் கம்பீரத்தை
மெய்விழியாளர்கள்
கூண்டுகளுக்குள் அமர்ந்து அதிசயிக்க,
நகரத்தைத் துடைக்கும் வெய்யில்
ஆட்களைத்தேடி அதிசயித்துப் போகிறது!
'இவன் தொற்று' 'அவன் தொற்று'
என்று தொற்றிய
வார்த்தைகளில் அதிசயித்த தொற்று
காலசக்கரத்தில் தொற்றிய அழுக்குகள்தான்
எனப்பாடும் வேதியனின் கவலைகள்
இன்னமும் புரட்டப்படாத பக்கங்களில்....
வெட்டப்படாத மரங்களின்
பட்டைகளில் தொற்றியிருக்கும் மருத்துவனின்
குறிப்புகளை வெட்டியவன்,
நிழலைத் தின்று கொண்டிருக்க முகக்கவசம்
அணிந்தவர்கள் மருந்தக வாசல்களில்
இடைவெளிவிட்டு நிற்கிறார்கள் !
கழிவறைகளைத்
துடைத்தவன் கைகளே புனிதமாகுகின்றன...
தொட்டு முத்தமிட அருகதையில்லாதவர்கள்,
ஆலயங்களில் எட்டி நின்று
இறைவனைத் தேடிக் கொண்டிருக்க....
கொரானாவொன்றும்
குணப்படுத்தவியலா தொற்றொன்றுமில்லை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
19/04/2020
சாலைகள் அடிக்கடி
தங்கள் முகத்தைத் துடைத்துக் கொள்கின்றன
பிரபஞ்ச வாய்ப்பாட்டை மறந்தவர்கள்
முட்டுக்கால் கட்டி முகத்தை மறைத்துக் கொள்ள...
கீழிருந்து நகரும் நரகம்;
சொர்கமென்று மந்திரம் ஓதுகிறவனுக்கு மூன்று கால்...
மூடி கிடக்கும் தேநீர் விடுதிக்குள்
கடைசியாய் தொட்டுப் பேசிய அந்த நிமிடம்
அங்கேயே உறைந்திருக்கிறது....
எச்சரிக்கையின் ஏதாவது ஒரு பக்கத்தில்தான்
விழிகள் சந்தித்திருக்க வேண்டும்...
சாலையெங்கும் உன் பார்வைகள் கொட்டிக் கிடக்க
அறைத் தனிமையின்
வெற்றுத்தாள்களின் படபடப்பில் நழுவுவது
உன் புன்னகை....
என் அறையை நகரமாக்கி
தேநீர் விடுதியை இழுத்து வந்திருக்கிறேன்...
முகக்கவசமில்லாமல் தொட்டுப்பேசிய
அந்த நிமிடங்களுக்காவது மறுஜென்மம் கொடுப்போம்!
- முகமது பாட்சா*
16/04/2020
நான்கு சுவர்களுக்குள் முடங்கி
கஃபனிட்டுக் கொண்டவன்
வாழ்வதற்கான
அதிகாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்
மரணத்தைப் பற்றிய கவிதையில்
அச்சம்
அகலக் கால் விரித்து அமர்ந்திருக்கிறது...
சிறகுகளில்லாமலும்
பறவைகள் பறக்கும் என்கிறவனைக் கல்லால்
அடித்தவர்கள்
உலகம் உருண்டையென்றவனையும்
உதைத்தவர்கள்...
அதிகாரன் என்பவனுக்கு
எப்போதுமே அவன் தேவைகள்தான்
முதலில் இருக்கின்றன...
இதைப் படித்ததும் உடனே கிழித்து விடுங்கள்
இது மட்டுமே
இந்தக் கவிதைக்கு நீங்கள் செய்யும்
நியாயமாக இருக்க முடியும்!
- முகமது பாட்சா*
15/04/2020
&
சிங்கத்தின் பிடரியில்
அமர்ந்து கொண்டு வருவதாக
கற்பனை செய்து கொள்ளச் சொல்லுகிறான்!
இலகுவில்லாத சக்கரத்தைச் சுழற்றி
மகிழ்விக்கிறார்கள் கோமாளிகள்...
கைதட்டி மகிழ்கிறவர்களின் இடுப்புக்
கச்சைக் கிழிசல்களை எரித்து வெளிச்சமூட்டினால்
இருள் கிழிந்துவிடும் என்பது
ஆஸ்தான சோதிடனின் ஆலோசனை...
ஒரு தேநீர் விருந்திற்குப் பின் அறிவித்த அறிவிப்பில்
நாம் யானைகளின் மேல் அமர்ந்துதான்
ஊர்வலம் செல்கிறோம்.....
வழியெங்கும்
பூனைகள் இறந்து கிடக்கின்றன!
- முகமது பாட்சா*
14/04/2020
இதுவும் கடந்து போகும் என்பது
உதவிக்கும் வராத மருந்துக் களிம்பு...
இரவை இழுத்து
பகலை மூடுகிறவர்களின் கைகளில்
பிச்சைப்பாத்திரங்கள்....
நிறமில்லாதவொன்று நிகழ்காலத்தைத்
தின்று சீரணிக்கிறது....
காலத்தை மீட்டிக் கவிதை எழுதுகிறவனின்
விரல்களில்
அட்சயனின் ஆயுள் ரேகை....
வனம் நகரத்திற்குள் நுழைந்த பிறகு
நீங்கள்
கூண்டுகளுக்குள் அடைந்துவிட்டீர்கள்
என்பதுதான் உண்மை!
- முகமது பாட்சா*
13/04/2020
நடைபாதை வாசிகளின்
நரம்புகளை மீட்டிப் பாடுகிறது
மின்கம்பியில் அமர்ந்திருக்கும் காகம்...
உதிரும் இறகுகளை
ஒட்டவைக்கத் தெரியாதவனின் சோகத்தை
வீணையின் நரம்புகள் அறியவில்லை...
கடவுளை வரையாத
வண்ணப்பொடிகளைத் தூற்றிச் சாபமிடுகிறவன்,
வயிற்றுக்குள்ளூறும்
அமிலக்கரைசல்களில் கரைகிறான்.....
தேசத்தின் கொடியைத் தோலினில்
குத்திக் கொண்டு வெளியில் வருகிறவர்கள்...
அழுகையை காலி பானைகளுக்குள் பதுக்குகிறார்கள்...
பல்லவிபாடும் வரிகளெல்லாம்
அபார்ட்மெண்ட்
அடுக்களைகளில் மட்டும் சந்தத்தைக் கூட்ட,
தொகையறாவில் தொலைந்து போகிறது
நாடோடியின் பாடல்!
- முகமது பாட்சா*
11/04/2020
கசப்பான காலமொன்று
நம் மீது வழிந்து கொண்டிருக்கிறது...
அரசப் பத்திரிக்கையின் அட்டவணைகளில்
அழுக்கான பக்கங்களை
அவசரமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள்....
பொதுமகள் ஆடைகளைக் கலைந்து
கொண்டு ஓடுகிறாள்....
பசியரித்த வார்த்தைகளைப் புடைத்துவிட்டு
எழுதிய கவிதைகளுக்குப் பெயர் நவீனம்....
மறைக்கப்பட்ட பிணங்களின் கழுத்தில்
கயிறுகளின் பதிவேடு....
அடையாளமிட்டவர்கள்
அரண்மனை பதிவேட்டில் தீவிரவாதிகள்...
புலம்பும் இடங்களையும் பூட்டி வைத்துவிட்டதால்
புகலிடமில்லாத பூனைகளை
புலிகளென்றும் ஓர் அச்சம் அரவமூர்கிறது !
- முகமது பாட்சா*
09/04/2020
சுவற்று கிறுக்கல்களின்
நரம்போட்டத்தைப் படிக்க இயலாமல் திணறுகிறீர்கள்
வெளிறிய விழிகளில்
அச்சம் பூசிய வார்த்தைகளைத் திணித்து
கதவுகளுக்கு மட்டும் வண்ணமடித்து அழகூட்டுவது
அரசியல் சூது!
சாக்கடையென்றால்
புழுக்கள் நெளியுமென்பது விதிபோலும்...
இறந்தவனெலும்பின் எழுதா வார்த்தைகளை
எப்போதுதான் படிக்கப் போகிறீர்கள்?
நீங்கள் இப்போது வாயால் நடந்து
கண்களால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்...
கைகளை வெட்டிவிட்டார்கள்!
சுவருக்குள் நுழைந்து வாருங்கள்...
உங்களுக்கான செய்திகள்
கிறுக்கல்களின் வளைவுகளுக்குள் நெளிந்து
கொண்டிருக்கும்!
- முகமது பாட்சா*
08/04/2020
&
கடலலைகளின் நுட்பசப்தக்கோட்டில்
பயணிக்கிறது
கடற்காகங்களின் வெதும்பக்கரைதல்!
அடைபட்ட அழுகைக்கரைசல்
வெறும் வயிற்று ஈரத்துணிகளில் பற்றிக்கொள்ள
உபதேசம் தீப்பரலாகி
தொலைக்காட்சிகளில் ஒளிரும் பக்திப்பரவசம் !
ஓடாத சைக்கிள் ரிக்ஷாவின் தாங்குருளைகள்
உதிர்க்கும் முத்துக்களில்
கண்ணடைந்து கிடக்கும் வறுமையை
ஆடிமாளிகைகளின் வாசல்கள் அறிவதில்லை!
எரித்துக் கூட்டியத்தழலில் பஞ்சடைந்த
அடியவளின் வயிற்றுப்பசி
கையேந்தி அலைவதின் காரணம் இழுக்கென்றால்
அவளே தேசத்தின் குறியீடு!
- முகமது பாட்சா*
07/04/2020
இலையுதிர் காலம் இல்லையென்றால்,
வசந்தகாலத்தில் எப்படி நுழைவீர்கள்?
அழகான மணித்திவலைகள் எப்போதும் இருந்தால்,
பிரிவினையின் சோகமும்,
சங்கத்தின் சந்தோஷமும் எங்கே இருக்கும்?
- மிர்ஸா காலிப்
&
எங்களை நீங்கள் கொண்டாடும் போதுதான்
அச்சப்படுகிறோம்....
ஆதுலன் திருவோட்டில் விழுந்திருப்பது
அத்தனையும் செல்லாக்காசுகள்
நகர மறுக்கும் வலிகளுக்குள் ஆதுரங்களை
வீசிவிட்டு
உணவளித்தாக நடித்துக் காட்டுகிறீர்கள்
உணர்வுகள் நகரும்போது பரிமாணங்கள்
அசையாமல் இருக்கமுடியாது!
பருத்திருந்த நாட்காட்டியில் தினமும்
திகதிகள் கிழிகின்றன
என் என்பது எப்போதும் என் வாழ்க்கையல்ல
சமூகத்தின் சங்கிலிப்பிணைப்பில்
இறுகிக்கிடக்கின்றது வளையம்
மண்ணறையின் வாசனை மகத்துவமானது
உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பவர்கள்
எலிகளாக இருந்தாலும்
பூனையின் நகங்கள்
அவற்றைத் தேடிக்கொண்டேதான் இருக்கும்...
அச்சம் என்பதுதான் பிணி
அடித்து நொறுக்கக் கோடாலியொன்று
கைகளில் எப்போதும் இருக்கட்டும்
சாவு என்பது ஒருமுறைதான் வரும்!
- முகமது பாட்சா*
06/04/2020
உலகப் பொருளாதாரம்
வூகான் சந்தையில் விற்கபட்டுவிட்டது...
உலகச் சுவாசம் புலம்புகிறது,'கொரானா! கொரானா!'
கொரானாதான்
இன்று சாத்தானிய மன்னன்...
அவனது வாள் சுழல்கின்றன மனிதத்தின் மீது..
மக்கள் அச்சத்துடன்
வீடுகளுக்குள் பூட்டிக் கொள்கிறார்கள்...
சாலைகள் அடைக்கப்பட்டு முகமூடிகளை
அணிந்து கொள்கின்றன...
மருத்துவர்கள்
சோதனைக்குழாய்களில் தங்களை ஊற்றுகிறார்கள்
ஆனால் சுகமாக்கும்
வேக்சின் மட்டும் வெளிவரவில்லை
பிரார்த்தனைகள்
வெளி நடப்புச் செய்து விட்டதால்
கடவுளின் வீடுகள் தனிமைப் படுத்தப் படுகிறது...
என்னதான் செய்கிறீர்கள்? என்பது
இயற்கையின் கேள்வி...
பணத்திற்கு மதிப்பில்லை கிருமிகளின் வீட்டிற்குள்
காதல் தனிமையில் தொங்குகிறது
இப்போது எதற்காக யாரிடம் சண்டையிடுகிறீர்கள்?
எல்லைகள்
இயற்கையின் வரம்பில் இல்லவேயில்லை
வேர்கள் மட்டும்தான் நேசத்தின் குறியீடு!
- முகமது பாட்சா*
05/04/2020
&
கண்ணிற்குத் தெரியாதவொன்று
காதகப்பித்தத்துடன்
காய்களை நகர்த்தி விளையாடுகிறது
பரமபதம் விளையாடுகிறவன்
ஏணிகளை எரித்துவிட்டு அசந்து உறங்குகிறான்...
சுவர்களை உயர எழுப்பி
ஒளிந்து கொள்பவர்களின் விரல்களில்
நகங்கள் விரிசல் விட்டிருக்க....
திடீர் பதாகன்
வெளிச்சமணைத்து
அகல் விளக்கேற்றிட உத்திரவிடுகிறான்
மூச்சுத்திணறலில்
முகமிழந்து கிடப்பவனின் பெயர் தேசம்
தெளிவற்றவனெல்லாம்
தேசகனாய் இருந்துவிட்டால் பாதைகளில்
கள்ளிச்செடிகள்தான் காவல் காக்கும்!
நாடோடிப் பாட்டில் நாலு பிழைப் பார்ப்பவன்
நாடாள்பவன் பிழைகளில்
நியாயங்கள் தேடிக் கொண்டேயிருக்கிறான்...
இருமுவதை அடக்கிக் கொள்ளுங்கள்
அதற்கும் இப்போதுதான்
தாடி வரைய ஆரம்பித்திருக்கிறார்கள்!
நட்புடன்.....முகமது பாட்சா*
04/04/2020
9.00 மணி 9.00 நிமிடங்களைப் பற்றி
9 பேர் பேசிக்கொண்டே செல்கிறார்கள்...
அகல் விளக்கு மட்டும்தானா!
பட்டாசும் வெடிக்கலாமா? என்று
ஒருவன் கேட்கிறான்...
9 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருகிறதா?
என்றவன்
வானத்தை அண்ணாந்து பார்க்கிறான்
சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது....
சும்மாத்தானே இருக்கிறீர்கள்
அதனால்தான்
கேள்விகளாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்
இப்போதாவது
9 .௦௦ ஐ வைத்து விளையாடுங்கள்
அதற்குள்
புலம் பெயரும் சாவுகளைப்
புதை குழியில் சாய்த்துவிட்டு வருகிறோம்!
- முகமது பாட்சா
03/04/2020
&
சன்னல் கதவுகளை அடைத்துவைத்த நகரியம்
மரணத்தின் வாசத்தைச் சுவாசமாக்கி அலையவிடுகிறது
பீதியின் தலையில் கிரீடம்
கழுவிக்கழுவியும் பாவங்கள் தீரவில்லையென்று பேதுருவின் பிரதிமைகள் மொழிகின்றன...
ஆலைச்சங்குகள் ஓய்வெடுக்க
ஆலாபனையில் ஒப்பாரிக்கு ஒத்திகை நடக்கிறது..
சாக்கைப் போர்த்திச் செல்லும் ஞானக்கிறுக்கன்
சங்கடத்துடன் சண்டையிடப் போவதாகச் சூளுரைக்கிறான்...
பிலால் சொல்லும் பாங்கோசை
ஆசைதாரிகளின் காதில் அச்சமாய்ப் பாய்கிறது...
புறாக்கள் ஒலுவெடுத்துக்கொள்ள
பள்ளிவாசல்களில் தூய்மையான இகாமத்!
வீட்டில் தொழுபவர்கள்
இப்போதுதான் துஆ கேட்கிறார்கள் உலக நன்மைக்காக!
இடைவெளியில்
தஜ்ஜால் வந்துவிட்டானென்று தஜ்ஜால்களே சொல்வது வேடிக்கை...
கவனித்தீர்களா?
எதையும் யாரும் தடை செய்துவிட முடியாது
எல்லோரும் ஹிஜ்ஜாப்புடன்தான்
ஒலுவெடுத்துக் கொண்டு வெளியில் வருகிறார்கள்!
தழுவிக்கொள்ளல் தடை செய்யப்பட்டிருக்கிறது...
ஈமானை இரும்பு பீரோவில் வைத்துவிட்டவர்களுக்கு அது தேவையில்லை...
- நட்புடன்.....முகமது பாட்சா*
03/04/2020
(பிலால் - தொழுகைக்கான அழைப்பை அளிப்பவர்
இகாமத் - தொழுகைக்கான முன்னறிவிப்பு
தஜ்ஜால் - உலக இறுதி நாளில் வருபவனாக நம்பப்படுபவன்
ஹிஜ்ஜாப் - முகம் மறைக்கும் துணி
ஈமான் - நல்லெண்ணம்)
----
&
தனிமையுடன்
நான்கைந்து பேர் அமர்ந்திருக்கிறோம்
மூளையில்
நரம்பொன்று நெளிந்து கொண்டேயிருக்கிறது
சூடான தேநீரை அருந்துகிறோம்
விவாதங்கள் சூடு பிடிக்க
ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறோம்...
மிருகத்தின் நாவுகள் நீண்டெழ
கோரைப் பற்களுக்கு வண்ணங்கள்
பூசிக்கொள்கிறவர்கள்....
போன்ஸாய் மரக்கிளைகளில்
கூடு கட்டாத பறவைகளுக்காக அழுது
கொண்டிருக்கிறார்கள்...
காணாமல் போன புத்தர் காய்ச்சலில் இருப்பதாகச்
சொல்வதும்கூட
வதந்தியாக இருக்கக்கூடும்!
வளைந்து நெளியும் நரம்புகள் கூடுகட்டத்
தொடங்குகின்றன...
தடைக்காலம் முடிந்ததும் வெளியில் திரிபவர்களை
தயவுசெய்து
பைத்தியமென்று வாசிக்காதீர்கள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/04/2020
கனவில் நடப்பதைப் போலவே
எல்லோரும் நடக்கிறார்கள்...
ஒவ்வொருவர் கனவிலும் ஒவ்வொரு
பிசாசு வந்து மிரட்டுகிறது...
சாலைகளை அவசரம் அவசரமாக
ஆக்கிரமிக்கிறார்கள்
வீடுகளை அதே அவசரத்தில் பூட்டியும்
கொள்கிறார்கள்!
உறவுக்காரப் பெண்ணொருத்தி
தன் மீது பிசாசு ஏறி விட்டதாக அரற்றிக்
கொள்கிறாள்...
முஸல்லாக்களில் தொழுகையை
விரித்து வைத்தவர்கள்....
அச்சத்தை
திக்ருகளாக உருட்டிக் கொண்டிருக்க...
பள்ளிவாசல்களின் அதான்
தனித்தனியாக அழைக்கிறது...
வீடுகளில்
சுபுஹூத் தொழுகை முழுமையாக
நிறைவடைய...
அலைப்பேசியில் நுழைகிறேன்
அசரத் அவர்கள்
உகது போரைப் பற்றிப் பயான் செய்கிறார்!
- முகமது பாட்சா*
30/04/2020
#திக்ர்5
ஒரு கனவைப் போல்
கலைந்துவிடுகிறது வாழ்க்கை...
இழைகளைப் பிரித்துத்
துணிகளை நெய்வதே வேலையாகிப்
போனது....
உடுத்தும் போது அவை கந்தல்!
இஷாவிற்கும்
பஜ்ருவிற்குமிடையில் நிலவும் உறக்கம்
தொழுகையின் திக்ரில் விழித்து...
மக்ரீப் வரைக்கும்
வனாந்தங்கரங்களில் அலைகிறது...
எனது என்ற கோட்பாடு
யார் போட்ட கோடுகளாக இருக்க
முடியும்?
மண்ணறையின் கேள்வியில்
பதில் சொல்லவியலா எலும்புக் கூடுகள்
புதைந்து கிடக்கின்றன!
காதலைத் தூக்கித் திரிகிறவன் இங்கு
கம்பளியாடைக்காரன்...
கைகளை
மடித்து வைத்துக் கொள்கிறான்
கோடீஸ்வரன்!
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்கள்
பறக்கின்ற வரைதான்...
'பகட்டு' இறுதி உரையில் யாருக்கும்
இடம் பெறுவதில்லை...
தொழுகைகளைச்
சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்...
பசித்த வயிறுகள் குடலையுருட்டி
தினமும் திக்ர் ஓதிக் கொண்டிருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
29/04/2020
#திக்ர்4
இரவின் திக்ர்
மௌனம் பூசி வளர்கிறது...
தஸ்பி விரல்கள் இறைஞ்சுகின்றன
மரணத்தின் நூலிழையில்
தொங்குகின்ற சுவனத்து வாசலை!
இளம் பிறை வளர்ந்து தேய்வதில்
பௌர்ணமி மட்டும் பிரகாசம்!
அமாவாசை இருட்டல்ல...
புலன்களுக்குப் புலப்படாத மறுமையின்
இளம் புன்னகை!
தொழுகை விரிப்பில் ஒட்டிக் கொண்ட
சுஜூதுத் தழும்புகளை
சாட்சிக்காக அழைக்கும் போது
பசித்த வயிறுகளின் சாட்சிகளே முதன்மையாகும்!
விரல் ரேகைகளில் ஒட்டியிருக்கும்
கண்கள் கூட
விரிவாகப் பேசலாம்....
அழுகை சுய இரக்கத்திற்கானதல்ல...
அடுத்தவருக்கான
அய்யோ என்பதும் இங்கே அகராதியில்
சேர்க்கப்படும்...
ஜக்காத்தும்
திக்ர் என்றே உணருங்கள் தோழர்காள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
28/04/2020
#திக்ர்3
கைகளை மடக்கிப் படுத்திருக்கும் பசியை
கண்களால் முகர்ந்து
கால்களால் நக்கிப் பார்த்துவிட்டு நகர்கிறது
கொடிய மணித்துளிகள்!
யாசகனின் குரல்
இழிவென்பவனின் இதயத்தில் நிறைகிறது
நோய்களின் அதிராட்டம்!
கதவடைக்கும் அரசனுக்கு
ஏழைகளின் வயிறடைக்கத் தெரியவில்லை...
வாயடைக்கச் சொல்லி
வார்த்தைகளை ஏவுகிறான்!
உல்லாச உலகமென்று
சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும்
சுய மோகிகளின் கதவுகள் இரும்பாலானவை!
வசனத்தின் வானத்தில்
விவாதம் நெய்கின்ற நெசவாளிகளே...
உங்களாடைகள்
எப்போதும் கந்தலாகவே இருக்கின்றன!
துவாக்களின் தொழுகை விரிப்புகளில்
சுயம் பூசாதீர்கள்...
சாயம் விரைவில் போய்விடும்!
திக்ரு
பசியின் வயிற்றிலாறி தாகம் தீர்க்கும்
கண்ணீர்த் துளிகள்!
- நட்புடன்....முகமது பாட்சா*
27/04/2020
#திக்ர்2
கொதுவையும்
உதாரணம் காட்டத் தயங்காதவன்
ஒட்டகத்தைக் கட்டிப் போட்ட பின்பே
காவல் தேட அழைக்கிறான்
ஐந்தறிவுகள்
வனத்திற்காகப் போரிடும் வேளையில்
ஆறாம் அறிவிற்குள் ஆடுகின்ற ஆட்டம்
அகிலம் தனதென்று மாய்கிறது
ஓரறிவு நுண்ணியன்
பேரழிவின் பெரும் அரசனாய் உருமாற....
வறியவன்
பசிக்காக மட்டுமே சமர் செய்வது
வாழ்வியலின் கோளாறு!
ஏந்துகின்ற கைகள் எல்லாம்
இளம் பிறையின் தோற்றங்களே!
கொடும் காலமென்பது
கொடைக்காரர்களின் சோதனைக் காலமும்...
மறைவசனங்கள்
வாசிப்பிற்கு மட்டும் வடிவானதில்லை...
மறுமைக்கான எச்சரிப்பும்!
நேசிப்பை மிகுத்துங்கள் தோழர்களே....
சுவனமென்பது
ஏழைகளின் சிரிப்பிலும் அடங்கியிருக்கும்!
- நட்புடன்.... முகமது பாட்சா*
25/04/2020
#திக்ர்1
சல்லடையிட்ட வானத்தின்
இளம்பிறை
சற்றுக் கூடுதலாய் வளைந்திருக்கிறது....
அதானின் அழைப்பை
அலைப்பேசி நிறைத்தழைக்க...
ஒலுவெடுத்து உள்ளே நுழைந்ததும்
அறையே
பள்ளிவாசலாய் மாறிவிட....
இகாமத்தின் பின்னே தொடரும் தொழுகையில்
நிறைகிறது மலக்குகளின் நெருக்கம்...
சலாம் முடித்து
இருப்பைவிட்டு எழுந்த பிறகும்
வீடெங்கும் நிறைந்திருக்கிறது புறாக்களின்
சிறகிசைகள்....
ரமலான் அநாதியல்ல....
வீடுகளையே பள்ளிகளாக்கி நிறைகிறது...
வெளியில் வந்து பாருங்கள்
துவாக்கள் நட்சத்திரங்களாய் மிளிர்ந்து
காஃபாவை
வலமிட்டு நிறைவதைக் காணலாம்!
- நட்புடன் ..... முகமது பாட்சா*
24/04/2020
#ரமலான்_திக்ர்1
யாரை நீ துரோகி என்கிறாய்?
அவரவர் நிழலையே
அவரவர்கள் அடித்து விரட்டுகிறார்கள்!
கதவுகளைத் தாழ்ப்பாள் இட்டுப் பூட்டிக் கொண்ட
அகபிரும்மம்
மனிதம் தேடியலையும் வீதியில்
பசித்த நாய்க்கு
சோறிடுபவனைச் சிலுவையில் தேடுகிறது...
தொட்டில் மீனுக்கு உணவிடுகிறவன்
கடவுளென்பது மாய உச்சம்!
சுயன் உதிரக்கூட்டின் உழுத்தப்புழுக்கள்
கல்லறை ஞாயத்தைக் கரைக்க
பிரம்மக்கூடு தேகமென்பது பொய்யாகிறது!
- முகமது பாட்சா*
21/04/2020
சின்ன வளையத்திற்குள் குடும்பமே
நுழைந்து வர....
குட்டிக்கரணம் போட்ட மகள்
நீண்டக்கழையில் நிராதரவாய்த் தொங்குகிறாள்...
கம்பியில் ஏறிய மனைவி
கர்ணம் தப்பாமல் நடந்தாடியிறங்க...
மாங்கொட்டையை மூடி
மாஞ்செடியொன்றையும் வரவழைத்தவன்
ஏந்தி நின்ற தட்டில்
கைத்தட்டல்கள் சிதறிக் கிடக்கின்றன!
- முகமது பாட்சா*
'என் தாய் மண்' என்று நடக்கும் கம்பீரத்தை
மெய்விழியாளர்கள்
கூண்டுகளுக்குள் அமர்ந்து அதிசயிக்க,
நகரத்தைத் துடைக்கும் வெய்யில்
ஆட்களைத்தேடி அதிசயித்துப் போகிறது!
'இவன் தொற்று' 'அவன் தொற்று'
என்று தொற்றிய
வார்த்தைகளில் அதிசயித்த தொற்று
காலசக்கரத்தில் தொற்றிய அழுக்குகள்தான்
எனப்பாடும் வேதியனின் கவலைகள்
இன்னமும் புரட்டப்படாத பக்கங்களில்....
வெட்டப்படாத மரங்களின்
பட்டைகளில் தொற்றியிருக்கும் மருத்துவனின்
குறிப்புகளை வெட்டியவன்,
நிழலைத் தின்று கொண்டிருக்க முகக்கவசம்
அணிந்தவர்கள் மருந்தக வாசல்களில்
இடைவெளிவிட்டு நிற்கிறார்கள் !
கழிவறைகளைத்
துடைத்தவன் கைகளே புனிதமாகுகின்றன...
தொட்டு முத்தமிட அருகதையில்லாதவர்கள்,
ஆலயங்களில் எட்டி நின்று
இறைவனைத் தேடிக் கொண்டிருக்க....
கொரானாவொன்றும்
குணப்படுத்தவியலா தொற்றொன்றுமில்லை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
19/04/2020
சாலைகள் அடிக்கடி
தங்கள் முகத்தைத் துடைத்துக் கொள்கின்றன
பிரபஞ்ச வாய்ப்பாட்டை மறந்தவர்கள்
முட்டுக்கால் கட்டி முகத்தை மறைத்துக் கொள்ள...
கீழிருந்து நகரும் நரகம்;
சொர்கமென்று மந்திரம் ஓதுகிறவனுக்கு மூன்று கால்...
மூடி கிடக்கும் தேநீர் விடுதிக்குள்
கடைசியாய் தொட்டுப் பேசிய அந்த நிமிடம்
அங்கேயே உறைந்திருக்கிறது....
எச்சரிக்கையின் ஏதாவது ஒரு பக்கத்தில்தான்
விழிகள் சந்தித்திருக்க வேண்டும்...
சாலையெங்கும் உன் பார்வைகள் கொட்டிக் கிடக்க
அறைத் தனிமையின்
வெற்றுத்தாள்களின் படபடப்பில் நழுவுவது
உன் புன்னகை....
என் அறையை நகரமாக்கி
தேநீர் விடுதியை இழுத்து வந்திருக்கிறேன்...
முகக்கவசமில்லாமல் தொட்டுப்பேசிய
அந்த நிமிடங்களுக்காவது மறுஜென்மம் கொடுப்போம்!
- முகமது பாட்சா*
16/04/2020
நான்கு சுவர்களுக்குள் முடங்கி
கஃபனிட்டுக் கொண்டவன்
வாழ்வதற்கான
அதிகாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்
மரணத்தைப் பற்றிய கவிதையில்
அச்சம்
அகலக் கால் விரித்து அமர்ந்திருக்கிறது...
சிறகுகளில்லாமலும்
பறவைகள் பறக்கும் என்கிறவனைக் கல்லால்
அடித்தவர்கள்
உலகம் உருண்டையென்றவனையும்
உதைத்தவர்கள்...
அதிகாரன் என்பவனுக்கு
எப்போதுமே அவன் தேவைகள்தான்
முதலில் இருக்கின்றன...
இதைப் படித்ததும் உடனே கிழித்து விடுங்கள்
இது மட்டுமே
இந்தக் கவிதைக்கு நீங்கள் செய்யும்
நியாயமாக இருக்க முடியும்!
- முகமது பாட்சா*
15/04/2020
&
சிங்கத்தின் பிடரியில்
அமர்ந்து கொண்டு வருவதாக
கற்பனை செய்து கொள்ளச் சொல்லுகிறான்!
இலகுவில்லாத சக்கரத்தைச் சுழற்றி
மகிழ்விக்கிறார்கள் கோமாளிகள்...
கைதட்டி மகிழ்கிறவர்களின் இடுப்புக்
கச்சைக் கிழிசல்களை எரித்து வெளிச்சமூட்டினால்
இருள் கிழிந்துவிடும் என்பது
ஆஸ்தான சோதிடனின் ஆலோசனை...
ஒரு தேநீர் விருந்திற்குப் பின் அறிவித்த அறிவிப்பில்
நாம் யானைகளின் மேல் அமர்ந்துதான்
ஊர்வலம் செல்கிறோம்.....
வழியெங்கும்
பூனைகள் இறந்து கிடக்கின்றன!
- முகமது பாட்சா*
14/04/2020
இதுவும் கடந்து போகும் என்பது
உதவிக்கும் வராத மருந்துக் களிம்பு...
இரவை இழுத்து
பகலை மூடுகிறவர்களின் கைகளில்
பிச்சைப்பாத்திரங்கள்....
நிறமில்லாதவொன்று நிகழ்காலத்தைத்
தின்று சீரணிக்கிறது....
காலத்தை மீட்டிக் கவிதை எழுதுகிறவனின்
விரல்களில்
அட்சயனின் ஆயுள் ரேகை....
வனம் நகரத்திற்குள் நுழைந்த பிறகு
நீங்கள்
கூண்டுகளுக்குள் அடைந்துவிட்டீர்கள்
என்பதுதான் உண்மை!
- முகமது பாட்சா*
13/04/2020
நடைபாதை வாசிகளின்
நரம்புகளை மீட்டிப் பாடுகிறது
மின்கம்பியில் அமர்ந்திருக்கும் காகம்...
உதிரும் இறகுகளை
ஒட்டவைக்கத் தெரியாதவனின் சோகத்தை
வீணையின் நரம்புகள் அறியவில்லை...
கடவுளை வரையாத
வண்ணப்பொடிகளைத் தூற்றிச் சாபமிடுகிறவன்,
வயிற்றுக்குள்ளூறும்
அமிலக்கரைசல்களில் கரைகிறான்.....
தேசத்தின் கொடியைத் தோலினில்
குத்திக் கொண்டு வெளியில் வருகிறவர்கள்...
அழுகையை காலி பானைகளுக்குள் பதுக்குகிறார்கள்...
பல்லவிபாடும் வரிகளெல்லாம்
அபார்ட்மெண்ட்
அடுக்களைகளில் மட்டும் சந்தத்தைக் கூட்ட,
தொகையறாவில் தொலைந்து போகிறது
நாடோடியின் பாடல்!
- முகமது பாட்சா*
11/04/2020
கசப்பான காலமொன்று
நம் மீது வழிந்து கொண்டிருக்கிறது...
அரசப் பத்திரிக்கையின் அட்டவணைகளில்
அழுக்கான பக்கங்களை
அவசரமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள்....
பொதுமகள் ஆடைகளைக் கலைந்து
கொண்டு ஓடுகிறாள்....
பசியரித்த வார்த்தைகளைப் புடைத்துவிட்டு
எழுதிய கவிதைகளுக்குப் பெயர் நவீனம்....
மறைக்கப்பட்ட பிணங்களின் கழுத்தில்
கயிறுகளின் பதிவேடு....
அடையாளமிட்டவர்கள்
அரண்மனை பதிவேட்டில் தீவிரவாதிகள்...
புலம்பும் இடங்களையும் பூட்டி வைத்துவிட்டதால்
புகலிடமில்லாத பூனைகளை
புலிகளென்றும் ஓர் அச்சம் அரவமூர்கிறது !
- முகமது பாட்சா*
09/04/2020
சுவற்று கிறுக்கல்களின்
நரம்போட்டத்தைப் படிக்க இயலாமல் திணறுகிறீர்கள்
வெளிறிய விழிகளில்
அச்சம் பூசிய வார்த்தைகளைத் திணித்து
கதவுகளுக்கு மட்டும் வண்ணமடித்து அழகூட்டுவது
அரசியல் சூது!
சாக்கடையென்றால்
புழுக்கள் நெளியுமென்பது விதிபோலும்...
இறந்தவனெலும்பின் எழுதா வார்த்தைகளை
எப்போதுதான் படிக்கப் போகிறீர்கள்?
நீங்கள் இப்போது வாயால் நடந்து
கண்களால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்...
கைகளை வெட்டிவிட்டார்கள்!
சுவருக்குள் நுழைந்து வாருங்கள்...
உங்களுக்கான செய்திகள்
கிறுக்கல்களின் வளைவுகளுக்குள் நெளிந்து
கொண்டிருக்கும்!
- முகமது பாட்சா*
08/04/2020
&
கடலலைகளின் நுட்பசப்தக்கோட்டில்
பயணிக்கிறது
கடற்காகங்களின் வெதும்பக்கரைதல்!
அடைபட்ட அழுகைக்கரைசல்
வெறும் வயிற்று ஈரத்துணிகளில் பற்றிக்கொள்ள
உபதேசம் தீப்பரலாகி
தொலைக்காட்சிகளில் ஒளிரும் பக்திப்பரவசம் !
ஓடாத சைக்கிள் ரிக்ஷாவின் தாங்குருளைகள்
உதிர்க்கும் முத்துக்களில்
கண்ணடைந்து கிடக்கும் வறுமையை
ஆடிமாளிகைகளின் வாசல்கள் அறிவதில்லை!
எரித்துக் கூட்டியத்தழலில் பஞ்சடைந்த
அடியவளின் வயிற்றுப்பசி
கையேந்தி அலைவதின் காரணம் இழுக்கென்றால்
அவளே தேசத்தின் குறியீடு!
- முகமது பாட்சா*
07/04/2020
இலையுதிர் காலம் இல்லையென்றால்,
வசந்தகாலத்தில் எப்படி நுழைவீர்கள்?
அழகான மணித்திவலைகள் எப்போதும் இருந்தால்,
பிரிவினையின் சோகமும்,
சங்கத்தின் சந்தோஷமும் எங்கே இருக்கும்?
- மிர்ஸா காலிப்
&
எங்களை நீங்கள் கொண்டாடும் போதுதான்
அச்சப்படுகிறோம்....
ஆதுலன் திருவோட்டில் விழுந்திருப்பது
அத்தனையும் செல்லாக்காசுகள்
நகர மறுக்கும் வலிகளுக்குள் ஆதுரங்களை
வீசிவிட்டு
உணவளித்தாக நடித்துக் காட்டுகிறீர்கள்
உணர்வுகள் நகரும்போது பரிமாணங்கள்
அசையாமல் இருக்கமுடியாது!
பருத்திருந்த நாட்காட்டியில் தினமும்
திகதிகள் கிழிகின்றன
என் என்பது எப்போதும் என் வாழ்க்கையல்ல
சமூகத்தின் சங்கிலிப்பிணைப்பில்
இறுகிக்கிடக்கின்றது வளையம்
மண்ணறையின் வாசனை மகத்துவமானது
உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பவர்கள்
எலிகளாக இருந்தாலும்
பூனையின் நகங்கள்
அவற்றைத் தேடிக்கொண்டேதான் இருக்கும்...
அச்சம் என்பதுதான் பிணி
அடித்து நொறுக்கக் கோடாலியொன்று
கைகளில் எப்போதும் இருக்கட்டும்
சாவு என்பது ஒருமுறைதான் வரும்!
- முகமது பாட்சா*
06/04/2020
உலகப் பொருளாதாரம்
வூகான் சந்தையில் விற்கபட்டுவிட்டது...
உலகச் சுவாசம் புலம்புகிறது,'கொரானா! கொரானா!'
கொரானாதான்
இன்று சாத்தானிய மன்னன்...
அவனது வாள் சுழல்கின்றன மனிதத்தின் மீது..
மக்கள் அச்சத்துடன்
வீடுகளுக்குள் பூட்டிக் கொள்கிறார்கள்...
சாலைகள் அடைக்கப்பட்டு முகமூடிகளை
அணிந்து கொள்கின்றன...
மருத்துவர்கள்
சோதனைக்குழாய்களில் தங்களை ஊற்றுகிறார்கள்
ஆனால் சுகமாக்கும்
வேக்சின் மட்டும் வெளிவரவில்லை
பிரார்த்தனைகள்
வெளி நடப்புச் செய்து விட்டதால்
கடவுளின் வீடுகள் தனிமைப் படுத்தப் படுகிறது...
என்னதான் செய்கிறீர்கள்? என்பது
இயற்கையின் கேள்வி...
பணத்திற்கு மதிப்பில்லை கிருமிகளின் வீட்டிற்குள்
காதல் தனிமையில் தொங்குகிறது
இப்போது எதற்காக யாரிடம் சண்டையிடுகிறீர்கள்?
எல்லைகள்
இயற்கையின் வரம்பில் இல்லவேயில்லை
வேர்கள் மட்டும்தான் நேசத்தின் குறியீடு!
- முகமது பாட்சா*
05/04/2020
&
கண்ணிற்குத் தெரியாதவொன்று
காதகப்பித்தத்துடன்
காய்களை நகர்த்தி விளையாடுகிறது
பரமபதம் விளையாடுகிறவன்
ஏணிகளை எரித்துவிட்டு அசந்து உறங்குகிறான்...
சுவர்களை உயர எழுப்பி
ஒளிந்து கொள்பவர்களின் விரல்களில்
நகங்கள் விரிசல் விட்டிருக்க....
திடீர் பதாகன்
வெளிச்சமணைத்து
அகல் விளக்கேற்றிட உத்திரவிடுகிறான்
மூச்சுத்திணறலில்
முகமிழந்து கிடப்பவனின் பெயர் தேசம்
தெளிவற்றவனெல்லாம்
தேசகனாய் இருந்துவிட்டால் பாதைகளில்
கள்ளிச்செடிகள்தான் காவல் காக்கும்!
நாடோடிப் பாட்டில் நாலு பிழைப் பார்ப்பவன்
நாடாள்பவன் பிழைகளில்
நியாயங்கள் தேடிக் கொண்டேயிருக்கிறான்...
இருமுவதை அடக்கிக் கொள்ளுங்கள்
அதற்கும் இப்போதுதான்
தாடி வரைய ஆரம்பித்திருக்கிறார்கள்!
நட்புடன்.....முகமது பாட்சா*
04/04/2020
9.00 மணி 9.00 நிமிடங்களைப் பற்றி
9 பேர் பேசிக்கொண்டே செல்கிறார்கள்...
அகல் விளக்கு மட்டும்தானா!
பட்டாசும் வெடிக்கலாமா? என்று
ஒருவன் கேட்கிறான்...
9 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருகிறதா?
என்றவன்
வானத்தை அண்ணாந்து பார்க்கிறான்
சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது....
சும்மாத்தானே இருக்கிறீர்கள்
அதனால்தான்
கேள்விகளாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்
இப்போதாவது
9 .௦௦ ஐ வைத்து விளையாடுங்கள்
அதற்குள்
புலம் பெயரும் சாவுகளைப்
புதை குழியில் சாய்த்துவிட்டு வருகிறோம்!
- முகமது பாட்சா
03/04/2020
&
சன்னல் கதவுகளை அடைத்துவைத்த நகரியம்
மரணத்தின் வாசத்தைச் சுவாசமாக்கி அலையவிடுகிறது
பீதியின் தலையில் கிரீடம்
கழுவிக்கழுவியும் பாவங்கள் தீரவில்லையென்று பேதுருவின் பிரதிமைகள் மொழிகின்றன...
ஆலைச்சங்குகள் ஓய்வெடுக்க
ஆலாபனையில் ஒப்பாரிக்கு ஒத்திகை நடக்கிறது..
சாக்கைப் போர்த்திச் செல்லும் ஞானக்கிறுக்கன்
சங்கடத்துடன் சண்டையிடப் போவதாகச் சூளுரைக்கிறான்...
பிலால் சொல்லும் பாங்கோசை
ஆசைதாரிகளின் காதில் அச்சமாய்ப் பாய்கிறது...
புறாக்கள் ஒலுவெடுத்துக்கொள்ள
பள்ளிவாசல்களில் தூய்மையான இகாமத்!
வீட்டில் தொழுபவர்கள்
இப்போதுதான் துஆ கேட்கிறார்கள் உலக நன்மைக்காக!
இடைவெளியில்
தஜ்ஜால் வந்துவிட்டானென்று தஜ்ஜால்களே சொல்வது வேடிக்கை...
கவனித்தீர்களா?
எதையும் யாரும் தடை செய்துவிட முடியாது
எல்லோரும் ஹிஜ்ஜாப்புடன்தான்
ஒலுவெடுத்துக் கொண்டு வெளியில் வருகிறார்கள்!
தழுவிக்கொள்ளல் தடை செய்யப்பட்டிருக்கிறது...
ஈமானை இரும்பு பீரோவில் வைத்துவிட்டவர்களுக்கு அது தேவையில்லை...
- நட்புடன்.....முகமது பாட்சா*
03/04/2020
(பிலால் - தொழுகைக்கான அழைப்பை அளிப்பவர்
இகாமத் - தொழுகைக்கான முன்னறிவிப்பு
தஜ்ஜால் - உலக இறுதி நாளில் வருபவனாக நம்பப்படுபவன்
ஹிஜ்ஜாப் - முகம் மறைக்கும் துணி
ஈமான் - நல்லெண்ணம்)
----
&
தனிமையுடன்
நான்கைந்து பேர் அமர்ந்திருக்கிறோம்
மூளையில்
நரம்பொன்று நெளிந்து கொண்டேயிருக்கிறது
சூடான தேநீரை அருந்துகிறோம்
விவாதங்கள் சூடு பிடிக்க
ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறோம்...
மிருகத்தின் நாவுகள் நீண்டெழ
கோரைப் பற்களுக்கு வண்ணங்கள்
பூசிக்கொள்கிறவர்கள்....
போன்ஸாய் மரக்கிளைகளில்
கூடு கட்டாத பறவைகளுக்காக அழுது
கொண்டிருக்கிறார்கள்...
காணாமல் போன புத்தர் காய்ச்சலில் இருப்பதாகச்
சொல்வதும்கூட
வதந்தியாக இருக்கக்கூடும்!
வளைந்து நெளியும் நரம்புகள் கூடுகட்டத்
தொடங்குகின்றன...
தடைக்காலம் முடிந்ததும் வெளியில் திரிபவர்களை
தயவுசெய்து
பைத்தியமென்று வாசிக்காதீர்கள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/04/2020
No comments:
Post a Comment