Monday, 15 June 2020

யாக்கையின் கணிதம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

பிரபஞ்சத்தின் வளைவு கோடுகளிருந்து
ஒரு நேர் கோடு நீள்கிறது!
அவை
சதுரங்களாய் சந்திக்கும் முனையில்
பல்வேறு முக்கோணங்கள்
கிளர்ந்தெழுகின்றன...
விடையறியாத சமன் கோடுகளின்
பக்கங்களில் நகரும் நட்சத்திரத் தெளிப்புகள்
ஆண்டுகளைப் பதிவேற்ற....
ஒளியின் வட்டம்
இருளின் பக்கங்களை அறியாததால்
கோள்களின் விசையில்
கணிதம் கட்டற்றுச் சுழல்கிறது!
பிரபஞ்சம் கருமிருட்டு!
இல்லவேயில்லை பிரபஞ்சம் பெரும் வெளிச்சம்!
கிழிந்துவிட்ட திகதிகளில்
அழிந்து போனது
எத்தனை சதுர முக்கோணங்களாக இருக்கும்?
யன்னலை வெறித்துப் பார்க்கிறேன்;
யாக்கையின் புழுக்கம்
வெளியேறும் வழியைத் தேடிக் கொண்டிருக்க...
புதிதாகச் சிரிக்கிறது ஒரு மொட்டு!

- முகமது பாட்சா*
15/06/2020

No comments:

Post a Comment

Popular Posts