Saturday, 20 June 2020

ஞொள்ளனின் நொம்பரம்



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்உடைந்த கட்டிலுக்கு
எத்தனை தடவைதான் கட்டுகள் போடுவது?
பிரம்ம முகூர்த்தம்
தவறிக் கொண்டேயிருக்க...
ஞொள்ளனின்
நொம்பரம் அகமியத்தைப் பிசைகிறது!
ஆற்றுதல் இல்லாத தோணி
அலைகின்றதையும்
கலையினதிசயம் என்கிறான் அதிகாரன்!
குடத்திற்குள் சுருங்கிப் போன குடில்
கவிழ்ந்துகிடக்க,
வெளிப்பாதைகளின்
பூனை நடை
காகங்களின் வானத்தைக் கண்டயர்கிறது!
இறுமாப்பின் மகேசுரன்
வேர்களை வெட்டிவிட்டு மரங்களுக்கு
தண்ணீரூற்றப் பணிக்கிறான்!
மாமிசத்தை அரசியலாக்கி
சாணக்கியத்தை தெய்வதமாக்கியவன்
பதுக்கைகளைக் கடக்கும்
பட்டாம் பூச்சிகளைக் கொன்றுவிட்டு
அரணைக்கடக்கும்
ஆனைக்கொன்றானின் தலையைத்தடவி
மருள்வதும் அரசியல்!

- முகமது பாட்சா*
20/06/2020

No comments:

Post a Comment

Popular Posts