Monday, 29 June 2020

முட்டாளழகு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

காற்றை விட மென்மையானதொன்றைப்
பரிசளிக்க விரும்புகிறேன்
பறவையின் இறகொன்றை ரசித்துவிட்டு
அதன் கவிதையை யாசிக்கிறாய்!
இருளில் இடறிவிழும் சொற்களிடம்
காதலைப் பூசி வைக்கிறேன்...
வானம் அடையாளத்தைத் தேடுகிறது!
மலரைப் புணரும் வண்டு அழகென்கிறாய்!
அவை காட்சியூடகத்தின் கவிதை மட்டுமே சகி...
உணர்வாயா!
முரணை நம்புவதும்
காதலின் முட்டாளழகென்று நகைக்கிறாய்!
நிஜம் உன் சிரிப்பு
என்று நம்பும் என் கவிதைகள்; இனி
வானை நிலவுப் புணர்வதாகவும், நிழலை
நீர் புணர்வதாகவும் பொழிப்பை வரையலாம்...
தப்பில்லை
காதலைச் சூடும் கவிதையின் பொய்யழகு!

- முகமது பாட்சா*
29/06/2020

No comments:

Post a Comment

Popular Posts