Wednesday, 24 June 2020

நாளை விடியும்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

இரவியின் நிலை மீது
ஏகாந்தம் வலை விரித்து வழைகிறது
தப்படிக்கிறவன் தாளகதிகளைத்
தவறவிட்டாடுகிறான்
செப்படிக்காரன் விரல்களில் பூத்த
தந்திரங்களில் கானல் மழை!
சீக்குச் சிந்தி வழிந்தோட,
மருந்தாரெல்லாம் மயானத்தில் விடை தேட,
சில்லறையாகி வழிகிறது
இரத்தக்கறையின் பிசுப் பிசுப்பு!
பசிதம் பூத்த நெருப்பில் கழலும் பசிவிசும்பல்
மறைக்க முகக்கவசம் அவசியம்!
நாற்றம் பிரட்டுகிறது...
நான்கு சுவர் தாண்டும் ஓலங்களுக்குக்
கூரையில்லை!
நாதாங்கிப் போட்ட அறைகளில் மடியும்
விட்டில்களை வறுத்து
விடனுக்கே காணிக்கையாக்குகிறோம்.
சதியன் சாயங்காலம் மட்டுமே பேசுகிறான்
நாளை விடியுமென்று!

- முகமது பாட்சா*
25/06/2020

No comments:

Post a Comment

Popular Posts