
அதிகாரத்தின்
அங்கவஸ்திரத்தை அணிந்துகொள்கிறது
முதல் தகவலறிக்கை!
இறந்தவர்கள் புரண்டழுதார்கள்
ஊமைக்காயம் உயிரை வாங்கியிருக்கும்
வாக்குமூலம்!
நாகமொன்று
தலையைத்தூக்கிப் போகிறது அதன்
வழித்தடத்தில் புத்தமுகங்கள்!
முட்டிக்காலுக்கும் லத்திக்கும்
உலகம் முழுவதும் ஒரே இசைக்குறிப்பு
சட்டம் கடமையைச் செய்கிறது!
நீதி கண்ணை மூடித் திறக்கிறது...
நம்பிக்கையிருக்கிறது
பிழைத்துக் கொள்ளலாம் நீதிதேவதை!
எங்கோ புகையும் சாம்பலில்
இன்னமும் மிச்சமிருக்கும் நெருப்பின்
பெயர் மக்களதிகாரம்!
- முகமது பாட்சா*
27/06/2020
#JusticeForJeyarajAndFenix
#jeyaraj #fenix
No comments:
Post a Comment