Saturday, 11 August 2018

அப்பாவின் மகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், குழந்தை மற்றும் வெளிப்புறம்

இந்தக் கவிதை தானெழுதியது என்றாள் 
வியந்து படிக்கிறேன்... 
எவ்வளவு வளர்ந்துவிட்டாள்! 
அப்பாவை ஆராதிக்கும் கவிதையில் 
அம்மாவின் முத்தங்களைச் சேர்த்திருக்கிறாள் 
சன்னல்வழி வெளிச்சம் பாய்கிறது 
ஒற்றை முத்தத்தில் 
ஒரு யுகம் பிரசவித்தளின் 
காகிதக் கப்பல் விட்ட ஈரம் கசிகிறது... 
விளையாட்டுப் பொம்மைகளில் நானும் இருக்கிறேன் 
என் கையில் அவளின் கவிதை 
என்னப்பா எப்படியிருக்கிறது? எதிரொலிக்க... 
அவள் புகுந்தவீட்டில் 
நானென்ன அடையாளமாகவிருப்பேன்? 
அவளும் அழுது கொண்டிதானிருப்பாள் 
கணவனுக்கு எந்தக் காரணமும் சொல்லாமல். 

- மு.முகமது பாட்சா* 
11 /08 /2018 

No comments:

Post a Comment

Popular Posts