Friday, 3 August 2018

முடிவுற்றக்கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ மற்றும் செடி

இந்தக் கவிதை இத்துடன் முடிவுற்றது 
குப்பைக்கூடையின் 
மேல் விளிம்பில் நின்று பார்த்த கவிதை 
காற்றிடம் சிறகு வாங்கிச் சன்னலைக் கடந்தது 
சுருக்கங்களை நீவிவிட்டு 
ஒருவன் 
அலைபேசியெண்ணை அதற்குள் நுழைத்தான் 
பாதித்தாளாய்ப் பறந்தது கவிதை 
சில்லறை மடித்தவன் தர்மம் செய்து 
தூக்கியெறிந்தான் முடிந்தக் கவிதையை 
முற்றுமென்று யார் சொன்னது? 
முடிந்துகொண்டாள் காதலன் குங்குமத்தை 
இப்போது அவள் வீடு நோக்கிப் போகிறது 
முடியாத அந்தக் கவிதை... 

-மு.முகமது பாட்சா* 
03 /08 /2018 

No comments:

Post a Comment

Popular Posts