Sunday, 6 January 2019

நீந்துபவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், வானம், மேகம், வெளிப்புறம், தண்ணீர் மற்றும் இயற்கை

விழப்போகும் விமானத்திலிருந்து 
ஒன்றாகத்தான் குதித்தோம்... 
எங்களுக்கு முன்பாகவே பயம் குதித்திருந்தது 
சிலர் நீந்திக் கொண்டிருந்தார்கள்... 
சிலர் 
பிணமாக மிதந்து கொண்டிருந்தார்கள் 
இப்போது எந்தக் கதையும் பேசமுடியாது... 
கைகளும் கால்களும் இலாவகமாகச் சுழல்கின்றன 
ஜாக்கெட்டை கழற்றி வீசுகிறேன் 
உயிரில்லாதவொன்று உயிரைக் காப்பாற்றுவது வேடிக்கை 
கரைத் தெரியவில்லை 
கட்டுமரம் கடந்துபோனால் மகிழ்வேன்... 
பறவைகளின் கூட்டம் வேகத்தைக் கூட்டுகிறது 
நிச்சயம் கரை இங்கு இருக்கும்... 
கால்களுக்குள் நழுவிய கடலில் மூர்ச்சையாகி 
தெளிந்தெழும் போது தேடுகிறேன் 
தொலைந்து போனவர்களை... 
விமானமொன்று சப்தமிட்டு கடந்து போகிறது. 

- மு.முகமது பாட்சா*
06 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts