Wednesday, 12 September 2018

ஸ்மைலி பந்துகள்


ஏதாவதோர் இடத்தில் 
எதற்காகவோ எல்லோரும் கூடுகிறோம். 
ஸ்மைலி பந்துகளால் மெல்ல அடித்து 
விளையாடி மகிழ்கிறோம். 
அங்கும் சில பன்றிகள் இருக்கலாம் 
ஆங்கிரி பேர்டுகளும் இருக்கலாம்... 
கை குலுக்கும் போது 
சில கைகள் உஷ்ணமாகி எரிகிறது 
சில கைகள் பன்னீர் மழைத் தூவுகிறது... 
எனக்குப் பிடித்த நாடோடிப் பாடகன் பாடுகிறான் 
உலகம் சுருங்கிவிட்டதென்று... 
நாங்களும் காகமாகத்தான் இரையெடுக்கிறோம் 
பசியென்பது பொதுதானே? 
விடை பெறும் போது 
விழா முடிவடைந்து விடுகிறது... 
வீட்டிற்குச் சென்றவன் ஸ்மைலி பந்துகளை 
அடுக்கிக் கொண்டிருக்கிறேன் 
எங்கிருந்தோ வரும் அந்த நறுமணம் 
நிச்சயம் 
நான் விலை கொடுத்து வாங்கியதில்லை. 

- மு.முகமது பாட்சா* 
13 /09 /2018

No comments:

Post a Comment

Popular Posts