
புள்ளிகளைப் போட்டுச் சிறை வைக்கிறாய்
அழகான கோலம் மிளிர்கிறது
உன் புன்னகையை
எத்துணை வரிகளில் எழுதுவது?
விழிகளுக்குள்
விழுந்து குளிக்க முயற்சிக்கிறேன்...
நீயோ இமைகளை மூடி வெளியேற்றுகிறாய்!
சிறகுகளைக் கட்டிக் கொண்ட எழுத்துகள்
வார்த்தைகளைத் தேடுவதற்கு
வனவாசம் போகிறது...
கோலத்தைக் கையோடு கொண்டு செல்கிறேன்
நீ கொட்டி வைத்த நாணங்கள்
அதிலல்லவா ஒட்டிக் கொண்டிருக்கிறது...
இரவுகளைப் பிடுங்கிக் கொண்ட ராட்சசியே...
என் பகலுக்கான வெளிச்சத்தை - நீ
எப்போது காட்டப் போகிறாய்?
பிழை
திருத்திக் கொண்டிருக்கின்றன எழுத்துகள்
உன் புள்ளிகளிலிருந்து வார்த்தைகளை
விடுவிப்பதற்காக!
- மு.முகமது பாட்சா*
21 / 09 /2018
painting : ELIZABET CHAPMAN
No comments:
Post a Comment