Wednesday, 5 September 2018

குளிக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நான் 
நீதானா என்பது தெரியாது 
உன்னை நானாகத்தான் பார்க்கிறேன். 

என் நிழல் 
உன் பின்னால்தான் வருகிறது... 
உன் நிழல் 
உனக்கு முன்னால் அல்லவா செல்கிறது. 

நான் 
உன்னையே சுற்றி வருகிறேன் 
உன் வாசம் 
என்னையல்லவா சுற்றி வருகிறது 

இங்கு மட்டும் 
ஏன் இத்துணைக் குளிர் மழை? 
உன் பெயரை 
உச்சரித்துக் கொண்டேயிருக்கிறேன் 

என் உச்சரிப்பின் பிழைகளை 
உதாசினப் படுத்திவிடு 
காதலில் பூத்த கள்ளிப்பால் அது 

பிழைகளை 
நான் அருந்திக் கொள்கிறேன் 
உன் கடைக்கண் பார்வை
கட்டறுந்துக் கிடைக்குமென்றால் 

கட்டறுந்துதான் திரிகிறது மனசு 
கட்டிப்போட யார் வருவார்? 

கண்ணி வைத்து 
பேசுகிறேன் என நினைக்காதே... 
உன் கசலுக்குள் 
நான் குளித்துக் கொண்டிருக்கிறேன்

- மு.முகமது பாட்சா*
06 /09 /2018

No comments:

Post a Comment

Popular Posts