
எக்ஸ்'தான்
அந்தக் கொலையைச் செய்கிறான்
பழி ஒய்' மீது விழுகிறது...
அப்படியென்றால் ஒய்'தான் ஏ'வின் காதலனா?
நிச்சயமாகயில்லை
வழக்கமாக அப்படிதான் சிந்திப்பார்கள்
ஏ'வைக் காதலித்தவன்
இஸட்' என்ற குருட்டுப் பாடகன்!
அவனை ஏ' அடிக்கடி கடந்து போகிறாள்
அடையாளம் தெரியவில்லை என்பது ஆச்சரியமில்லை
அவன் முகம் சிதைந்திருக்கிறது!
யார் சிதைத்தது? எக்ஸா?
ஏன் ஒய்'யாகக் கூட இருக்கலாம்....
அப்படியென்றால் ஒய்'தான்
ஏ'வை ஒருதலையாகக் காதலித்தவன்...சரிதானே
ஒய்;க்கு ஏ'வையே தெரியாது....
ஆமாம் இறந்து போனவன் யார்?
அவன்தான் ஏ'வின் உண்மையான கணவன்!
சூப்பர் மச்சான்
ஸ்கிரின் பிளே அட்டகாசம்...
மிச்சகதையை நாளை யோசிப்போம் என்ற ஹரி
பிரிட்ஜை திறந்த போது
அதில் ஒருவன் அடக்கமாக இறந்து கிடந்தான்...
ஹரிக்கு அப்போது தெரியாது
அவன்தான் அந்த ஒய்'யென்று!
- மு.முகமது பாட்சா*
03 /09 /2018
No comments:
Post a Comment