
1
குடுவைக்குள்ளிருக்கும் பூதம்
எப்போது வெளிவருமென்று தெரியவில்லை
இரண்டு யெவனியர்கள் காவல் காக்கிறார்கள்...
சித்திரம் தீட்டியவன்
சிலுவையில் அறையப்பட்டிருந்தான்....
குயவனின் தலை
ஜாடியின் மூடியாக அழுத்தப்பட்டிருந்தது...
பார்வையாளர்கள்
தொலைந்து கொண்டேயிருந்தார்கள்...
புகை வரும்போதெல்லாம்
பூதம் ஏமாற்றிக் கொண்டேயிருந்தது...
2
அலாவூதீனின் விளக்கில்
பூதம் வெளிவந்து ஆச்சரியம் கூட்டியது
ஆலம்பனாவாக மாறிப்போனவன்
அழகிகளை மட்டுமே தேடிக் கொண்டிருந்தான்
லைலா மட்டும்
சிந்துபாத்திடம் பதுங்கிக் கொண்டாள்...
3
அலிபாபா தேடிவந்த குகை
காலியாகவே இருந்தது
காசீம்கானை மட்டும் காணவில்லை
40 திருடர்களும்
கழுதைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்
5
ஷஹரஜாத் கதை சொல்லி முடிக்கும் போது
சுல்தான்
ஷாகிரயரின் தலை கீழே உருண்டு கிடந்தது
6
மக்களுக்கான திட்டங்களை
மேடையில் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தபோது
சிறையின் கதவுடைத்த செவ்வெரும்புகள்
ஊர்வலம் வந்து கொண்டிருந்தன.
- மு.முகமது பாட்சா*
17/09/2018
No comments:
Post a Comment