Thursday, 6 September 2018

சிறைச்சாலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

உவளகத்தில் 
பதுமைகள் கொட்டிக் கிடக்கிறார்கள் 
மனம் 
நகரத்தில் உலா சென்று கொண்டிருக்கிறது 
கூண்டுக்குள் வாழும் கிளிகளுக்கு 
பேசுவது மட்டுமே பொழுதுபோக்கு... 
குற்றமென்பது எப்போதுமே 
சிறைகளுக்குள் மட்டுமே இருப்பதில்லை 
ஞானம் தேடுபவனின் கால்களில் 
சுதந்திரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது 
சிறைச்சாலை 
சிந்திப்பவர்களின் கூடாரம்... 
தேசமே அரசியலின் சிறைக்கோட்டம் 
நிகழென்பது 
கம்பிகளுக்குள் வாழ்கிறது... 
வருங்காலத்தின் வாசல் 
பெரும் முழக்கங்களால் நிறைந்திருக்கிறது... 
ஆடும் வரைதான் ஆட்டம் 
ஆடியடங்கிப் போவதும் கூட ஒரு சிறைதான். 

- மு.முகமது பாட்சா* 
07 /09 /2018

No comments:

Post a Comment

Popular Posts