Wednesday, 19 September 2018

அப்பத்தாவின் நாற்காலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அப்பத்தாவின் 
- நாற்காலி வலுவிழந்து கிடக்கிறது... 
இனியதில் 
ஆணி அடிப்பதற்கே இடமில்லையென்று 
ஆசாரி சொல்லிவிட்டான்... 
இடம் பற்றாக்குறை 
வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள் 
எரித்துவிடலாமென்றால் 
விறகடுப்பிற்கே வேலையில்லாமல் போனது 
விலைக்கும் போகாத நாற்காலி 
யாருக்கும் தெரியாமல் 
குப்பைத் தொட்டிக்கு நகர்ந்து போனது... 
ஆக்சிஜன் நுழைந்துவிட்டதாக 
அசந்துறங்கும் அவர்கள் 
படுத்துறங்கி குறட்டை விடுவது மட்டும் 
அப்பத்தாவின் பத்திரத்தின் மேல்தான். 

- மு.முகமது பாட்சா* 
20 /09 /2018 

No comments:

Post a Comment

Popular Posts