Sunday, 16 September 2018

கேள்விகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.
சூழ்பெருவெளி நிசப்தம் 
காற்றின் வண்ணம்கூடி தழைக்கும் மழை 
ஒற்றைச் சருகாய் பறக்கும் மனம் 
யாருக்கலையும் இந்தப் பறவை? 

பேய் நிகர்த்தொரு பெருமாசை 
நித்திலச் சுகம் உழலும் நீள்பாதை 
சத்திரம் தங்க வந்தவனுக்கா 
தங்கத்தினால் மோதிரம்? 

கட்டறுத்துப் போகும் கடைமடையாறு 
நதியே தானென்ற பேராசை 
கடல் கொள்ளும் அத்துணை நீரும் 
வாய்க்கால் தூர்ந்து வரப்பாகுமா? 

கொட்டிவிட்ட வார்த்தைகள் 
குவியலாய் காலின் கீழ் 
குனிந்துதான் பார்க்கிறேன் குற்றமாய் 
நானெங்கே போனேன்?

- மு.முகமது பாட்சா*
16 /09 /2018

No comments:

Post a Comment

Popular Posts