
என்னெதிரில்
ஒரு கழுதை உட்கார்ந்து எப்போதும்
கத்திக் கொண்டேயிருந்தது...
பாவம் அந்தப் பூனை
தன் கண்களை உருட்டி
மிரட்சியாக என்னைப் பார்த்தது...
சற்றுத் தள்ளி
உட்கார்ந்திருந்த புறாவொன்றின் புன்னகை
மெல்லக்கீற
அருகில் வந்து உட்கார்ந்த குதிரை
ஹலோ மிஸ்டர் காகம்' என்று
என்னிடம் கைக் குலுக்கியது...
கொறித்துக் கொண்டிருந்ததை மடித்து
பையில் வைத்துவிட்டு
வார இதழ் ஒன்றைப் புரட்டுகிறேன்
அதுவும் ஒரு ஜங்கில் புக் தான்...
புறா இரவல் கேட்க
அருகில் இருந்த குதிரை
என்னிடம் கேட்டது
மிஸ்டர் எலி எங்கே போறீங்க...
இப்போதுதான் கவனித்தேன்
கழுதையின் அருகிலிருந்த பூனை
ஒரு நாகமாகவும்
குதிரை நரியாகவும் மாறுவதை....
புறா புறாவாகவே படித்துக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
28 /09 /2018
No comments:
Post a Comment