Saturday, 29 September 2018

அவன் உலகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கனவிற்குள் நுழைகிறான் 
சிறகுகள் அவனுக்கு முளைத்திருந்தன 
தொடர்பில்லா 
மொழியொன்று தொற்றிக் கொள்கிறது... 
அடிமைகளைப் பார்க்கும் போதெல்லாம் 
மன்னனென்று மாறிவிடுகிறான் 
அந்தபுரத்தின் கதவுகளை உடைத்து 
அவ்வப்போது உள் நுழைகிறான் 
மாயா அவனைப் பார்த்து சிரிக்கிறாள் 
அவனிதழை ஒத்தடம் தருகிறாள் 
பருவ மலையின் மேலேற்றி 
பாட்டுகளைச் சொல்லித் தருகிறாள் 
அணைக்கும் போது யாரோ ஒருவன் 
அவள் மடியில் துயில்கிறான் 
கரப்பான் பூச்சியாக  மாறியவுடன் 
காகமொன்று 
அவனைக் கொத்திக் கொண்டு பறக்கிறது 
காகத்தை 
கொன்றுவிட்டதாகச் சொல்லும் போது 
மாயாவின் யோனியில் 
கரப்பான் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன... 
அவன் உலகம் பெரியது... 
கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும் என்று 
சிக்மண்ட் சொல்லிவிட்டு நகர்கிறான்... 
அவன் கால்கள் கட்டபட்டிருக்கின்றன. 

மு.முகமது பாட்சா* 
29/09/2018

No comments:

Post a Comment

Popular Posts