Wednesday, 5 September 2018

இறகு மனம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

உதிர்ந்த இறகோடு 
புத்தன் பேசிக் கொண்டிருந்தான்... 
சருகுகள் 
அவன் காலடியில் கொட்டிக்கிடந்தன 
அவனுக்குத்தெரியும் 
அமைதியென்பது நிச்சயம் 
சில சப்தங்களோடு கூடியதுதான்... 
ஆயனின் புல்லாங்குழல் இசைக்கிறது 
தனிமையை விரட்டுகிறது இசை 
சன்னலைத் திறந்து வைக்கிறேன் 
புழுக்கம் வெளியேறுகிறது... 
எழுத்துகளை முகர்ந்துவிட்டு 
தேநீர் அருந்துகிறேன்.... 
கவிதையில்லாமல் உறங்கவேண்டும் 
என் தனிமையென்பது 
நீ என்னோடு இருப்பது மட்டுமே. 

- மு.முகமது பாட்சா* 
05 /09 /2018 

No comments:

Post a Comment

Popular Posts