முரண்பாட்டு சமன்பாடுகள் - பரீட்சன்
வெளியீடு : அசூர ஆயுதம் பதிப்பகம் - இலங்கை

சொற்கள் மலைபோல் குவிந்துகிடக்க, வார்த்தைகளை
தேர்ந்தெடுப்பது கவிஞனின் பிரயத்தனம்.
மெனக்கெடல் தேவைதானா?
போகிறபோக்கில் சேருகிறவார்த்தைகளை சேமித்துக் கொண்டால்
நெஞ்சம் குப்பைக்கூடையாக மாறிவிடும். ஞானம் என்பது
தேடலின் ஆணிவேர். ஆனால், மரம் நிற்பதாக நாம் கருதுக்கோல்
வைக்கிறோம் ... உண்மையில் வேர்கள் பயணப்பட்டுக்
கொண்டேயிருக்கின்றன. சூஃபிகளின் பார்வைகளில் மரணம் கூட
மலர்களின் வாசமாகிப் போகிறது.
தேடல்கள் நிறைந்த இந்தத் தொகுப்பை போதியின் நிழலென்றும்
சொல்லலாம்.
இறைக்காதலுக்கு, தூய்மை வேண்டும் நான் அதற்கும்
அருகதையற்றவன் என்று சொல்லும் கவிஞரின் இந்தக் கவிதையை எப்படி
வியக்காமல் இருக்கமுடியும்?
'உன்னில் காதல் கொள்ள ஆசைதான்
ஆனால் காமத்தை கலந்து நஞ்சாக்கிவிட்டதனால்
வெறுப்புறுகிறேன்
கனன்று கொண்டிருக்கும்
வெறுப்புத்தனலில்
எங்கோ ஒரு மூலையில்
உண்மைக்காதலின்
சூத்திரமே வேறு அன்பே!'
திடமப் பொருளாக இருப்பதைவிட மல்லாந்த ஆமையாய் இருப்பதே
மேலென நினைக்கும் ஞானம் புதிது...
'புகழ்பெற்ற சிலையைவிட
மல்லாக்க நகரும் ஆமைக்கு
உயிராயினும் உண்டென்று
ஆறுதல் அடைய விரும்பும்
ஆத்மாக்களை குறைகாணத் துணிந்திடல்
அநியாயத்தின் உச்சமல்லவா?'
கவிஞரின் பெரும் பாலான வரிகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.
'உச்ச நவீனத்தின் பிந்திய காலத்தில்
ஒரு பாம்பு நூற்றாண்டுகளுக்கு
முந்திய வரலாற்றுப் பதிவுகளை
தன் இறக்கையில் சுமந்து பறக்கும்..' - (உயில்)
**
'எதையும் தர்க்கக் கணக்கில்
பெருக்கி கூட்டிக் கழித்து
மறுதலித்து
முடியாத வாதங்களால்
சிறை பிடித்த வித்தைகள்
உனக்கான வரப்பிரசாதங்கள்...' - (வேகம் மறைந்த தூரம்)
***
'அவள் யாராய்?
நான் யாராய்?
ஆயினும்
உயிரின் வாசங்கள்
காலத்தில் கரைவதில்லை! ... '- (அழிய மறுக்கும் புராணம்)
**
கவிதைகள் எழுதுவது எத்துணை கடினம்?
நான் தான் ஞான பிரஸ்தன் என்று பீற்றிக் கொள்ளும் எழுத்தின்
ஞாம்பவான்களை கண்டு வியக்கிறோம். ஆனால் பரீட்சன் கண்டு வியப்பதை
படியுங்கள்... கர்வம் தானாகக் கழலும்...
'கடலை ஒரு விரல் நுனியால்
கட்டி இழுத்து
காலடியில் புதைத்தாலும்
பூமிக்குக்கீழ் புது வானமொன்றை
கசங்கிடாமல் நுழைத்தாலும்
எச்சிலால் பல் சதுர வலை பின்னி
நூல் வீட்டை நூதனமாய் கட்டும்
சின்ன சிலந்தியின் சாமர்த்தியத்தின்
ஒரு சிறு துரும்புக்குச் சமனாகுமா
உனது கவிதைகளின்
வரிப் பின்னல்கள் எல்லாம்
சொல்லடா?'
மரணத்தைப் பற்றி சொல்லும் போது கவிஞர் கையாளும் வார்த்தைகள்
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன...
'.... சாத்தானின் சாபத்திலிருந்து
தப்பிக்கவே சாவு....'
.....
'சாவென்றால் மரணமல்ல
அது ஒரு தப்பித்தல்....' ( உயிர் பிரியா மரணம்)
....
'நான் தப்பித் தவறி
பிழைத்திட பயமுறுகிறேன்
நீங்கள் தவறியேனும்
செத்திட அஞ்சுவது போல்!' (கலப்படம்)
......
'விளக்குகளை அணைத்துவிடு
பேரொளியை அணைத்துக் கொள்வேன்!' ( குயில் கூவுவதில்லை)
நான் வியந்து பார்த்த கவிதைகளில் ஒன்று 'ஒற்றை வரியில் ஒரு வரலாறு'
- அஃதெப்படி ஒற்றை வரியில் சொல்லமுடியும்?
குழந்தை பருவம் பிந்திய நாட்குறிப்பில் மங்கிப்போனதாம். காதல் பருவம்
கரையான் குடல்களுக்குள் செமித்தும்விட்டதாம்... சரி, அந்த ஒற்றை
வரியின் வரலாறுதான் என்ன?
'குருதி இரத்தமாகிய காலமது' - இவ்வளவுதாங்க...
இனப்படுகொலையின் கோர முகத்தை ஒரு வரலாற்றை இப்படியும்
சொல்லமுடியும் என்பது மிகுந்த ஆச்சரியம்.
'ஏன் என்ற ஒரு கேள்வி
எதற்கென்ற ஒரு தேடல்
அடுப்பிலிருந்து தப்பித்த
ஒரு புல்லாங்குழலின் ஊதல்
ஜீவிக்கும் வரை...
இந்தப் பிரபஞ்சம்
விரிந்து கொண்டேயிருக்கும் '- என்பது யோசனை தூரங்களையும்
கடந்த பிரமிப்பு!
சூஃபீயின் ஞான வரிகளாக வியக்க வைக்கும் சாதாரண வரிகளில்
அமைந்த கவிஞரின் கவிதையொன்று...
'உதிர்ந்த இறகொன்று
இறக்கவில்லை நானென்று
எவ்வளவுதான் வாதிட்டாலும்
அனுதாபப் படலாமேயன்றி
வேறொன்றும் செய்திடல் இயலாதே!
என் செய்வேன்?' ( உயிர்ப்பு )
வித்தைச் செருக்கு கொண்ட ஒருவன் ( அறிவுஜீவி ) கவிஞருடைய
ஒவ்வொரு கவிதையாக கிழிக்கிறான் 'எதுவும் சரியில்லை'யென்று
ஆனாலும் கவிஞர் , நான் தோற்றுவிடுவேன் என்றா நினைக்கிறாய்?
என்று சவால் விட்டுவிட்டு
'அண்டச் சராசரங்கள் அனைத்தையும்
அதற்கப்பாலுள்ள சுவனத்தையும்
பாதத்தின் அடியில் புதைத்துக் கொண்டிருக்கும்
என் தாயை எழுதிடுவேன்
நீ தோற்றுப் போவாய்
தோற்றே போனாய்! ' - என்று தனது தாயின் கவிதையில்
மொழிகின்றவிதம் பூரிப்பு!
வாழ்வைப் பற்றி சொல்லும் போது...
'ஒரு ஒற்றைக்குமிழியின்
நம்பிக்கையில் தங்கிவிடுகிறது
வாழ்வு!' - என்பது கவிஞரின் ஞான வெளிப்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.
இலங்கையின் அரசியலுக்குள் முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட
வாஃபா. ஃபாரூக் என்கின்ற கவிஞர் பரீட்சன். தன் கவிதை பயணத்தையும்
தொடர்ந்து நகர்த்த வேண்டும் என்பதே இலக்கிய செழுமைகளின்
ஆவலாய் தேங்கி நிற்கும்.
நட்புடன்.....முகமது பாட்சா*
29 /09 /2018

No comments:
Post a Comment