Tuesday, 25 September 2018

பிரளயசங்கீதம்



பெரும் பிரளயத்தின் சப்த சங்கீதம் கேட்க
காதுகளின் மடல்கள் வளர்ந்து நிற்கின்றன
இசை நரம்புகளின் இறுக்கத்தில்
மரங்களின் வேர்கள் முனங்குவது கேட்கிறதா?
தொடர் மழைகளுக்குள்
அலைகளின் ஒப்பந்தம் என்னவாகயிருக்கும்?
தவளைகளின் சப்தமென்று 
எதையும் கடந்து போக முடிவதில்லை...
பூமியின் முளைகளை பிடுங்கிய பிறகு
கூடாரங்கள் சரிவதற்கு காரணம் ஏன்?
சாலைகளில் படுத்துக் கொண்டாலும்
சப்த ஒருங்கிணைப்புகள் நாடியைப் பிடுங்கிவிடும்
வண்ணங்களும் வர்ணங்களும்
வலைப் பாதுகாப்பு கொடுக்குமென்ற உத்திரவாதமுண்டா?
பூமிக்குள் புதைந்த காரூணின் செல்வம்
இன்றுவரையும் கிடைக்கவில்லை....
பிர்அவுன் புதைந்த பிறகு கடவுள் என்னவானான்?
நோவாவின் படகினை நோக்கி ஓடும்வரை
காலின் நரம்புகள் ஒத்துழைக்குமா? 
பிரளயத்தின் மொழியே சப்தகூறுகளாகும்...
இந்தக் கவிதை மெல்ல முறியும் போது....
பெரும் அலைகளில் என் பேனா மிதந்து செல்லலாம்
அத்துடன் இந்தக்கவிதை முற்றுப்பெறும்.

- மு.முகமது பாட்சா*
26/09/2018

No comments:

Post a Comment

Popular Posts