Wednesday, 26 September 2018

நுண்புனை கதைகள்

நுண்புனை கதைகள் 12

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்


நுண்புனை கதைகள்

அந்த நிழல் அவனையே பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது . சில நேரங்களில் 
அவன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கும் . உச்சி வெயில் நேரத்தில் 
அவனைத் தனியாகத் தவிக்கவிட்டு மறைந்து கொள்ளும்.

அவன் சகவாசம் சரியில்லையென்று உறவுகள் அவனை வெறுத்து ஒதுக்கின. 
சிலர் அவனை ஏளனமாகப் பார்த்து சிரித்தார்கள். நிழல் மட்டும்,
 'அவர்கள் எப்போதுமே அப்படித்தான், கவலைப்படாதே' 
என்று ஆறுதல் சொல்லும். அவனுக்கும் அதனோடு மட்டுமே 
பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தமாகவிருந்தது. 
அவன் நின்றாலும் ஓடினாலும் விளையாடினாலும் பிரிவதேயில்லை.

மருத்துவரிடம் அவன் தன் நிழலை அம்மா என்று பெயரிட்டே 
அறிமுகப்படுத்தினான். தந்தை இறந்துவிட்டதாகச் சொன்னவன் 
பெற்றவளை பற்றிக் கேட்டபோது கோபமானவன் 
அந்த நிழல் ஒரு ஓடுகாலியென்று கத்திக்கொண்டே ஓடினான்.


- முகமது பாட்சா*
26/09/2018

No comments:

Post a Comment

Popular Posts