Saturday, 1 September 2018

அந்தக் கேள்வி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

என்னிடம்
அவர்கள் அந்தக் கேள்வியை 
கேட்டிருக்கவேண்டாமென்றே நினைக்கிறேன்... 
அது தன் பரப்பை விரிவாக்கி 
ஒரு முற்றுப் புள்ளிக்குள் நிறுத்திவைத்து 
பல கேள்விகளை என் முன் இறைக்கிறது... 
என்னாடைகள் தளர்ந்து போகின்றன... 
என் வியர்வையில் 
நானே நீந்திக் கொண்டிருக்கிறேன் 
கரையேற ஒரு கட்டையாவது கிடைக்காதா 
என்பதும் கேள்வி குறிதான். 
என்னைச் சுற்றிலும் 
அது சுவரெழுப்பிச் சிறை வைக்கிறது ... 
அந்தக் கேள்வியே எனக்கானதுதானா என்பதும் 
இன்னமும் சந்தேகம்தான்.... 
அந்த வளைந்த கொக்கி 
எங்கும் நகரவிடாமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது 
நான் அடிக்கடி 
தடுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறேன்... 

- மு.முகமது பாட்சா* 
02 /09 /2018 

No comments:

Post a Comment

Popular Posts