Friday, 7 September 2018

தொலைத்தது



விடைத் தெரியாத மர்மங்கள் 
என் முன்னே விரிந்து கிடக்கின்றன 
என் நரம்புகளின் சுற்றுகளில் 
நான் 
சிக்கிக் கிடப்பது யாருக்குத் தெரியும்? 
தோலைப் போர்த்திய 
உடம்பிற்குப் போர்வைக் கேட்கிறேன் 
நிஜமென்பது நிர்வாணம் 
ஒப்பனைகளுக்குள் 
நானெப்படி உண்மையானவன்? 
ஆதி குடிலுக்குள்ளிருந்தவன் 
எப்போதோ இறந்துவிட்டான் 
நாற்புரம் 
சுவரெழுப்பிக் கொண்டது என் நாகரீகம் 
இச்சைகளுக்குள் 
நான் ஒடுங்கிக் கொள்கிறேன்... 
பறவைகள் மட்டுமே நிறம் மாறாமல்... 
இது வெறும் கவிதை மட்டும்தான் 
மீட்க முடியாதது 
நான் தொலைத்த நிர்வாணம்.

- மு.முகமது பாட்சா*
07 /09 /2018 

No comments:

Post a Comment

Popular Posts