
வாயை மூடிக் கொண்டு
கோஷமிட முயற்சிக்கிறேன்...
என் முன்
சில்லறைக் காசுகளை வீசிவிட்டுப் போகிறான்
பரிதாபனென்று...
விமானத்திலேறியவுடன்
வாயில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது
'அவசரத்திற்கு மட்டும் அழைக்கவும்'
மமதை என்னெதிரில்
காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது...
நான் வாயைப் பொத்திக் கொண்டு
சன்னல்வழியே குதிக்கிறேன்...
வலைவீசிய காவற்படை
துப்பாக்கியோடு குதித்ததாக
முதல்
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கிறது...
இப்போதாவது கோஷமிட்டுக் கொள்கிறேன்
பாசிச மமதை ஒழிக!
சற்றே திரும்பிபார்க்கும் அந்தக்காகம்
இனி எல்லாவிடத்திலும் எச்சமிடும்.
- மு.முகமது பாட்சா*
04 /09 /2018
No comments:
Post a Comment