Wednesday, 26 September 2018

கடவுச்சொல்லில் கைரேகை


Impasse

கடலை வரைவதைவிட
கடல் என்று எழுதிவிடுவது 
சுலபமாகவிருக்கிறது -
ஞாபகமறதிக்குள் உட்கார்ந்து கொண்டு
கட்டங்களைத் தேடுகிறேன்
காய்கள் பெட்டிக்குள் உறங்குகின்றன -
என் சுவருக்கு ஆயிரம் கண்கள்
நிர்வாணமாகவே என்மொழி உலாவுகிறது -
யன்னல் திரையை விலக்கி 
யாமக் கோடாங்கி 
ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறான் -
ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன்
நின்றவிடத்தை விட்டு  
பாதங்கள் சற்றும் நகரவில்லை...-
வரைந்துவிட்ட கோடுகளை பறவையென்கிறேன்
பறவையென்றுமே
நிஜமென்று நிரூபிக்கப் போராடுவதில்லை... -
கடவுச்சொல்லில் என் கைரேகை
யாரோ ஒருவன் திருடும் முன் 
நீயாவது என்னைக் களவாடிச்செல்.

- நட்புடன்.....முகமதுபாட்சா*
27 /09 /2018

Thanks by  painting: Rosie Greenhalgh

No comments:

Post a Comment

Popular Posts