Saturday, 29 September 2018

பிரபஞ்சம் v/s ஆண்டவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

பிரபஞ்சம் ஒன்றை
பாட்டிலில் போட்டு மூடிவைத்தான்...
காற்றிற்குச் சற்று இடம் கொடுத்து
அதனசைவுகளை கவனிக்கத் தொடங்கினான்
சுற்றிலுமுள்ள கண்ணாடிச் சுவர்களுக்குள் 
முட்டிமோதிக் கொண்ட பிரபஞ்சம்...
தீனிகள் போட்டவனை
ஆண்டவனென அறிவித்துக் கொண்டது...
பிரபஞ்சத்தின் வெளி அடர்த்தியானபோது
பிரபஞ்சம் இறந்து கிடந்தது...
பாட்டிலை தூக்கிப் போட்டுடைத்தவன்
ஆண்டவன் பட்டத்தை கழற்றி வைத்தான்.

அவன்
பாட்டிலின் மூடியை தேடிக் கொண்டிருக்க...
அண்டம்வெளி அடர்த்தியாகி...அடர்த்தியாக...
பிரபஞ்சம் இறந்துவிட்டதாக
சிலர் அழுது கொண்டிருந்தார்கள்.

- மு.முகமது பாட்சா*
30/09/2018



No comments:

Post a Comment

Popular Posts