நுண்புனை கதைகள் 10
முடை நாற்றம்

காறியுமிழ்ந்துவிட்டுப் போனவன்
தொடைக் கக்கத்தில் சொறிந்து கொண்டான்.
இரண்டுபேர் ஓரமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்
லிப்ஸ்டிக் சற்று அதிகமாகத் தெரிந்ததால்
கைக்குட்டையால் துடைத்துக் கொண்டவள்
பார்வையை அங்குமிங்கும் வீசினாள்
ஒருவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
'என்ன ரேட்' என்று கேட்டான்
காதில் சொன்னதைக் கையால் துடைத்துக் கொண்டு நகர்ந்தான்
அந்த இராத்திரி
அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது
ஒருவரும் வராததால் களைப்படைந்தவள்
தன்னையே நொந்து கொண்டாள்
விடியற்காலை மணி 3 .௦௦
வாயைக் கொப்பளித்துவிட்டு டீயும் பிஸ்கட்டும் வாங்கிச் சாப்பிட்டவள்
அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள்
காலைத் தினசரிகளின் பார்சலை பிரித்த கடைக்காரன்
முகப்பு செய்திகளைக் கடையின் முன்னால் தொங்கவிட்டான்
வேகமாக எழுந்த அவள் அதன் மீது காறிதுப்பிவிட்டு
கெட்ட கெட்ட வார்த்தைகளாக அர்ச்சித்தவள்
அங்கிருந்து வேகமாகக் கடந்தாள்
'சிறுமையைக் கற்பழித்த கயவர்கள்' காவல் நிலையத்தில்
உட்கார்ந்திருந்தார்கள்
'யோவ் ஏட்டு...இந்த மொகரைகளுக்கு டீ வாங்கியாந்து ஊத்துயா'
- என்ற சப் இன்ஸ்பெக்டர் போனையெடுத்து
'குட்டிம்மாவை பத்திரமா நீயே கொண்டு போய்
ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடும்மா...
காலம் ரொம்பக் கெட்டுகிடக்கு' என்று மனைவிக்கு அறிவுறுத்த
ஸ்டேசன் முன் டி ஆர் பியை ஏத்திக்கொள்ள ஒரு கும்பல் கூடி நின்றது
'ச்சேய்! த்தூ!'
- முகமது பாட்சா*
18 /07 /2018

No comments:
Post a Comment