Tuesday, 17 July 2018

பூனையோடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மலை, வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்

நான் என் பூனையோடு நடந்து செல்கிறேன் 
வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு
நிழல்கள் கூடவே வருகின்றன 
இலைகளின் மௌனத்தை 
காதில் சொல்கிறது பெரும் காற்று 
எரிந்து கிடக்கும் சாம்பலைப் பூசிக்கொள்கிறது 
மயானத்து மௌனம் 
எழுதாத வெள்ளைத்தாளொன்று 
எரிந்து கொண்டிருக்கிறது 
துப்பாக்கி முனையில் உட்கார்ந்திருப்பதும் 
மௌனம்தான் 
எலியென்பது படிம சித்தியாகவிருக்கலாம் 
பூனை என்னை விட்டு ஓடுகிறது... 
வார்த்தைகளை யாசகம் கேட்டு...
நிழலோடு பேசிக் கொண்டிருக்கிறேன் 
நிழல் இரவோடு பேசிக் கொண்டிருக்கிறது

- மு.முகமது பாட்சா* 
17 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts