Friday, 6 July 2018

காதல் பிசுபிசுப்பு



உத்திரத்தில் தொங்கும் புடவைக்கும் 
ஒரு நூறு கதையிருக்கும் 
இதயம் திறக்காத பெட்டகத்தில் 
பாம்புகளின் படுக்கையிருக்கலாம் 
காட்சியால் வருவதெல்லாம் 
காதலென்றாவதில்லை 
மோகத்தின் வாசம் காமத்தின் பசி 
காதல் கண்மூடித் திறக்கும் தவம் 
வண்டையுண்ணும் மலர்கள் 
வாசலை அழகாகவே திறந்திருக்கும் 
இறக்கிவைத்த பிணத்தில் 
இதயம்தான் முதலில் இறந்து கிடந்தது 
காமத்தின் கழிவறையாய் 
யோனி பிசுபிசுக்க 
கடைசியாய் அவளெழுதிய கடிதம் 
அவள் காதலை காறித்துப்பியது 

- மு.முகமது பாட்சா* 
07 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts