Sunday, 22 July 2018

அருமை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

- அருமை - 
அந்தக் கவிதைக்கு 
அப்படித்தான் போட்டாக வேண்டும் 
அவரோர் அறிவு ஜீவி! 
ஓரோரத்தில் நின்று 
கைதட்டிக் கொண்டிருக்கிறேன் 
எல்லோரும் கைதட்டிக் கொண்டிருந்தார்கள் 
சினிமா வெளிச்சம் 
அவர் மீது விழுந்து கொண்டிருந்தது 
வார இதழில் படித்த கவிதையில் 
வார்த்தைப் பிழைகளைக் 
காகம் பொறுக்கிக் கொண்டிருந்தது 
நூலகத்தில் எலிகளைப் பிடிக்கும் முன் 
நூலாம்படை அடிப்பதும் மிக முக்கியமானது 
எழுத்துகளை உலர்த்தி வைத்திருக்கிறேன் 
ஈரம் அதிகமாகவிருக்கிறது 
ஆத்திச்சூடியை வாசலில் விற்கிறான் 
ஏழை வியாபாரி 
கூறுகட்டி நிற்கின்றன புத்தக விற்பனைகள் 
பாப்கார்ன் சற்று விலையதிகம்தான் 
குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு 
வெறும் கையோடுவே நகர்கிறோம்.... 
என்ன செய்வது? 
எப்போதும் போல் பாக்கெட் காலிதான் 
புத்தகங்கள் ஏக்கமாகப் பார்க்கின்றன. 

- மு.முகமது பாட்சா* 
22 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts