Saturday, 7 July 2018

பதினொன்றாம் மர்மம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

இரவு பதினொன்று 
பதினொன்றாம் பக்கம் என் கையில் 
'அமைதியான இரவு' என்று தொடங்கி 
அச்சத்தை மெல்லக் கூட்டுகிறது... 
இரண்டு ஒன்றுகள் அருகருகே நிற்பதுபோல் 
யாரோ நெருங்கி நிற்க உணர்கிறேன் 
11 டைரிகளின் பக்கங்கள் மெல்லச் சுழல்கின்றன 
11 பிணங்கள் 
11 குழாய்கள் 
11 வருடங்கள் 
11 கம்பிகள் 

தலைகீழ் அத்தியாயத்தின் ஒரு பெரும் மரணம் 
11 ஆண்டுகளுக்கு முன்பு 

மரணமென்பது காத்திருக்கும் மர்மம் 

அன்பென்பது அறியாமையின் கூட்டிற்குள் 
ரௌத்திரமாய் வந்து உட்கார்ந்து கொள்கிறது... 

அதன் கைகளில் இப்போது 11 கயிறுகள் 
ஒரு பிணத்தைத் தேடியலைகின்றன 11 பிணங்கள் 
பதினொன்றும் பதினொன்றாய் தவம் செய்ய 
ஹிட்ச்காக்கின் மர்மம் சூழ்ந்து கொள்கிறது... 

11 என்பது இரண்டு கத்திகளாகவும் இருக்கலாம் 

11 ம் அத்தியாயத்தில் நுழையும் காவலர்களைத் தேடி 
அவசரவசரமாய்க் கடைசிப் பக்கத்திற்கு விரைகிறேன்... 

இப்போது மணி பதினொன்று 
இரவு நகராமல் இன்னமும் அப்படியே நிற்க 
பதினொன்றாம் பக்கம் என் கையில் ! 

சில்லென்று நகரும் நிழல் யாருடையது? 

- மு.முகமது பாட்சா* 
07 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts