Sunday, 1 July 2018

நுண்புனை கதைகள் 7

நுண்புனை கதைகள் 7
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கேள்வியின் நாயகன்

சமீபகாலமாக எழிலன்
கேள்விகளை அதிகமாகக் கேட்கத் தொடங்கிவிட்டான்.
'கேள்விக்குறியேன் குனிந்திருக்கிறது?' என்றான்
'நாம் நிமிர்வதற்காக இருக்கலாம்' என்றேன்
' இல்லையப்பா நாம் எப்போதும் குனியாமல் இருப்பதற்காக'
- என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
'இரண்டும் ஒன்றுதானே!' என்று ஆச்சரியம் காட்டினேன்.
'எப்படிப்பா? நாமென்ன இப்போது குனிந்தா இருக்கிறோம் ?
அப்படியென்றால் நான் சொன்னதுதானே சரி '
- நான் அவன் வழிக்கு வந்துவிட்டேன்.
அவனை மடக்குவதாக நினைத்து
'வயசானவங்கெல்லாம் குனிஞ்சுதானே இருக்காங்க?' என்றேன்,
'இனிமே அவர்கள் நிமிர்ந்தாலும் பயனில்லையப்பா ,
அவர்களின் கேள்வியெல்லாம் மரணத்தைப் பற்றிய
பதில் தெரியாத கேள்வியாகத்தான் இருக்கும்' என்று
ஒரு போடு போட்டான். என்ன சொல்வது ?
இப்போது நான் அவன் முன் மெல்ல குனியத் தொடங்கினேன்....

- முகமது பாட்சா*
02 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts