
எனக்கும் கூட
அந்தச் சந்தேகமுண்டு
பஞ்சும் நெருப்பும் பேசிக்கொண்டதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்
நெருப்பின் தோளில்
பஞ்சு கைபோட்டுப் போனதை
பார்த்ததாக ஒருவன் சொன்னான்...
நெருப்புதான் முதலில் முத்தம் கொடுத்ததாக
காட்டுத்தீயொன்று
சொல்லிவிட்டு நகர்ந்தது
பஞ்சுக்கேன் இந்த வேலையென்று
சிலர் அலுத்துக் கொண்டார்கள்
வதந்தி
ஒவ்வொரு வாசலாகச் சென்று புலம்பியது
வாசல் கோலங்கள்
ஊர் முழுவதும் வியாபித்தன
சற்றுமுன் வந்த செய்தி
'பஞ்சி முழுவதுமாகப் பற்றிக்கொண்டது'
தெருக்கள் பற்றியெரிய ஆரம்பித்தன....
யாருக்கும் தெரியாத சேதி
பஞ்சு தனக்கான நூலை நூற்றுக் கொண்டிருக்க
இது நெருப்பு பற்றவைத்த தீ!
- மு.முகமது பாட்சா*
08 /07 /2018
No comments:
Post a Comment